சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
Savings and Protection
அதிகூடிய முதிர்வு வயது
விநியோகித்த வயது
நீங்கள் இதை இவர்களூடாக கொள்வனவு செய்யலாம்
கட்டுப்பணம்; செலுத்தும் காலம்
காப்புறுதி ஒப்பந்தக் காலம்
செல்வத்தினால் உங்களுக்கு ஆடம்பரமானதொரு வாழ்க்கை முறைää நிதியியல் பாதுகாப்பு அல்லது ஓய்வு உட்பட இன்னும் அதிகமான நன்மைகளை வழங்க முடியும். உங்களுடைய செல்வத்தைப் பாதுகாப்பதற்குää உங்களுக்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம் ஒன்றாகிய AIA Smart Wealth இனையே நாங்கள் உங்களுக்கு வழங்குகின்றோம்.
வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளின் போது நீங்களும்ää உங்களது குடும்பமும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட நெகிழ்வானதொரு திட்டமாகவே AIA Smart Wealth காணப்படுகின்றது.
குறுகிய கட்டுப்பணச் செலுத்தல் காலத்திற்காக ஒரே கட்டுப்பணமாக செலுத்தலுக்கான நீண்ட காலப் பாதுகாப்பு | முதிர்வின் போது வளர்ச்சியடையும் மாதாந்த வருமானம்
நீங்கள் 4 மற்றும் 6 வருடங்களுக்கு அல்லது ஒரே கட்டுப்பணமாக மட்டுமே கட்டுப்பணங்களைச் செலுத்த வேண்டும். இதற்காக நீங்கள் 20 வருடங்கள் வரை பாதுகாக்கப்படுவீர்கள்.
நீங்கள் தொடர்ந்து இணைந்திருந்தமைக்காக, 20 வருட காப்புறுதி ஒப்பந்தம் ஒன்றின் போது, 15வது மற்றும் 20வது வருடங்களில், உங்களது வருடாந்தக் கொடுப்பனவுத் தொகை போன்று 450% வரையிலான அனுகூலங்கள் வழங்கப்படும். மேலும், 10 மற்றும் 15 வருடக் காப்புறுதிக் கால முதிர்ச்சியின் போதும் இது வழங்கப்படுகிறது
நீங்கள் தொடர்ந்து இணைந்திருந்தமைக்காக, 20 வருட காப்புறுதி ஒப்பந்தம் ஒன்றின் போது, 15வது மற்றும் 20வது வருடங்களில், உங்களது வருடாந்தக் கொடுப்பனவுத் தொகை போன்று 450 வரையிலான அனுகூலங்கள் வழங்கப்படும். மேலும், மற்றும் 05,10, 15 வருடக் காப்புறுதிக் கால முதிர்ச்சியின் போதும் இது வழங்கப்படுகிறது.
உங்களுடைய மரணம் போன்ற ஒரு துரதிஷ்டமான சந்தர்ப்பத்தில் உங்களில் தங்கியிருப்போர் உடனடியாகவே ஆயுள் அனுகூலத்தைப் பெற்றுக் கொள்வார்கள்.
கட்டுப்பணச் செலுத்தல் காலத்தின் போது நீங்கள் மரணித்தால் அல்லது முழுமையான நிரந்தர அங்கவீனமடைந்தால் AIA உங்கள் சார்பாக உங்களது கட்டுப்பணத்தைச் செலுத்துவதன் மூலமாக உங்களுடைய காப்புறுதியைத் தொடரும்.
உங்களுடைய காப்புறுதிக் காலத்தின் போது நிதியின் 15 % வரை (கட்டுப்பணச் செலுத்தல் காலத்தின் பின்னர்) ஒரு தடவை மீளப்பெறல் வசதி.
டிவிடென்ட் பூஸ்டருடன் ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்படும் பங்குலாப வீதத்தை விட 30% அதிகமாக உங்கள் மாதாந்த வருமானத்தை AIA அதிகரிக்கும். (நீங்கள் ஒரு மாதாந்த வருமானத்திற்குத் தெரிவு செய்தால்).
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள சில அம்சங்கள் இந்தத் திட்டத்தின் ஒரே கட்டுப்பணமாக செலுத்தலுக்காக பொருந்தாது என்பதை நினைவில் கொள்ளவும்.
Iஆயுள் காப்புறுதிதாரர் காப்புறுதி உரிமையாளராக இல்லாத பட்சத்தில்ää ஆயுள் காப்புறுதிதாரருக்கு ஏற்புடையதாக காப்பீடுகள் இருக்கும் போது இக்காப்புறுதியால் வழங்கப்பட்டுள்ள அனுகூலங்கள் காப்புறுதி உரிமையாளருக்குப் பிரயோகிக்கக்கூடியதாக (ஏற்புடையதாக) இருக்கும். இந்தப் பக்கமானது காப்புறுதித் திட்டத்தின் ஒரு பொதுவான மேலோட்டத்திற்கு மட்டுமே ஆகும். முழுமையான காப்புறுதித் திட்டத் தகவல்களுக்கு தயவுசெய்து காப்புறுதி ஆவணத்தைப் பின்பற்றுங்கள்.
நீங்கள் காப்புறுதித் திட்டத்தை பெற்றுக் கொண்ட நாளில் இருந்து இருபத்தொரு (21) நாட்களுக்குள் எங்களுக்கு திருப்பி அளித்தல் மூலமாக இக்காப்புறுதித் திட்டத்தை இரத்துச் செய்யலாம். உங்களுடைய காப்புறுதித் திட்டத்துடன் தொடர்பான செலவினங்களைக் கழித்து அதன் பின்னர் உள்ள உங்களுடைய கட்டுப்பணங்களை நாங்கள் உங்களுக்கு திருப்பிச் செலுத்துவோம்.
காப்புறுதியின் முதல் வருடத்தின் போது அல்லது மீள்நிறுவலின் போது (சித்தசுவாதீனமான அல்லது சித்தசுவாதீனமற்ற நிலையில்) ஆயுள் காப்புறுதிதாரர் தற்கொலை செய்து கொண்டால்;
உங்களுடைய காப்புறுதித் திட்டத்துடன் தொடர்பான செலவினங்களைக் கழித்ததன் பின்னர் நீங்கள் செலுத்தியுள்ள கட்டுப்பணங்களை நாங்கள் உங்களுக்குச் செலுத்துவோம்;
அல்லது
காப்புறுதித் திட்டமானது மூன்றாம் நபருக்கு உரிமை மாற்றம் செய்யப்படும் போதுää உரிமை மாற்றத்திற்காகச் செலுத்தப்பட்ட பணத்தை மீட்டெடுப்பதற்கு வேறு எந்தவொரு வழிவகையும் இல்லை என்பதை மூன்றாம் நபர் நிரூபித்தால் நாங்கள் அவருக்கு அக்கொடுப்பனவைச் (எனினும் உங்களுடைய மரணத்தின் போது செலுத்தக்கூடிய தொகையை விட அதிகரிக்காது) செலுத்துவோம்.
ஏதேனும் போர் ஆக்கிரமிப்பு வெளிநாட்டு எதிரிகளின் செயற்பாடு படை நடவடிக்கைகள் அல்லது யுத்தச் செயற்பாடுகள் சிவில் யுத்தம் படைக் கலகம் கலவரம் வேலை நிறுத்தம் மக்கள் கிளர்ச்சிக்குச் சமமான சிவில் அமைதியின்மை இராணுவப் புரட்சி கிளர்ச்சி கலகம் இராணுவப் புரட்சி அல்லது அதிகார அபகரிப்புஅரசாங்கத்தைப் பலாத்காரமாக அகற்றுவதை நோக்கமாகக் கொண்டதோ அல்லது அதைப் பயங்கரவாதம் அல்லது வன்முறை மூலமாக அவ்வாறாக அகற்றுவதற்கு பாதிப்பளிக்கும் வகையில் செயற்படுகின்ற ஏதேனும் ஓர் நிறுவனத்துடன் தொடர்புடைய அல்லது அந்நிறுவனம் சார்பாகச் செயல்படுகின்ற ஏதேனும் ஒரு நபருடைய ஏதேனும் ஒரு செயல்; ஆகியவற்றில் ஆயுள் காப்புறுதிதாரர் ஈடுபாட்டுடன் பங்கேற்றல் அல்லது பங்கேற்க முயற்சி செய்வதன் விளைவாக ஆயுள் காப்புறுதிதாரரின் இறப்பு நிகழ்கின்றவிடத்துää நாங்கள் கையளிப்புப் பெறுமதியை மட்டுமே செலுத்துவோம்.
மரண இழப்பீட்டுக் கோரிக்கைக்கான காரணம் எயிட்ஸ் (AIDS) அல்லது எச்ஐவி (HIV) ஆக இருக்குமானால் நாங்கள் உங்களுடைய மரண அறிவித்தலைப் பெறும் திகதியில் உள்ள சுகாதார நிதியின் மீதியை மட்டுமே உங்களுக்குச் செலுத்துவோம்.
முதல் மூன்று காப்புறுதி ஆண்டுகளின் போது இறுதித் (கெடு) திகதியில் உங்களுடைய கட்டுப்பணங்களை நீங்கள் செலுத்தத் தவறினால் அக்கட்டுப்பணங்களைச் செலுத்துவதற்கு மேலதிகமாக முப்பது (30) நாட்கள் உங்களுக்கு வழங்கப்படும்.
ஒவ்வொரு வருடமும் நிறுவனத்தினால்; பிரகடனப்படுத்தப்படும்; ஒரு வீதமானது முதலீட்டுக் கணக்கில் பங்குலாபத்தை வைப்புச் செய்வதற்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்படும். கடந்த ஆண்டுக்குரிய ஏற்புடைய வருடாந்தப் பங்குலாப வீதம்நடப்புஆண்டின்முதல்ஆறு(6)மாதங்களுக்குள் பிரகடனப்படுத்தப்படும். நிறுவனத்தால் பிரகடனப்படுத்தப்படும் உத்தரவாதப்படுத்தப்பட்ட பங்குலாப வீதமானதுääஉரிய ஆண்டின் வருடாந்தப் பங்குலாப வீதம் பிரகடனப்படுத்தப்படும் வரை சுகாதார நிதியின் மீதியின் அடிப்படையில் எந்தவொரு அனுகூலத்தையும் கணிப்பதற்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்படும். அடுத்த ஆண்டிற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்ட பங்குலாப வீதம் நடப்பு ஆண்டின் கடைசி மூன்று (3) மாதங்களுக்குள் அறிவிக்கப்படும்.
உங்கள் காப்புறுதி கையளிப்பு பெறுதமதியைப் பெற்ற பிறகு நீங்கள் முதலீட்டுக் கணக்கு இருப்பில் 15 % வரை மீளப்பெறலாம்