சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு. மேலும் நீங்கள் பராமரிக்கும் உங்கள் அன்புக்குரியவர்களை நாங்கள் பாதுகாப்போம்
சேமிப்பு மற்றும் பாதுகாப்பு
அதிகபட்ச முதிர்வு வயது
வழங்கப்படும் வயதெல்லை
நீங்கள் இதனை எங்கு கொள்வனவு செய்யலாம்
கட்டுப்பணம் செலுத்தும் தவணை கால எல்லை
காப்புறுதி தவணைக்காலம்
குறைந்தபட்ச டாப் - அப்ஸ் ( Top-up)
மிகப் பெரிய ஒரு தொகையை நீங்கள் இன்னும் 10இ 15 அல்லது 20 ஆண்டுகளில் பெற்றுக் கொள்ளும் போது அதை கொண்டு செய்ய இயலுமானவைகளை கற்பனை செய்து பாருங்கள். உங்கள் பிள்ளைகள் சிறந்த உயர்க்கல்வினை பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்த பயன்படுத்தலாம் அல்லது அவர்களது கோலாகலமான திருமண கொண்டாட்டம் அல்லது உங்களுக்கு புத்தம் புதிய வாகனம் எதுவாகவூம் இருக்கலாம். அல்லது வசதியான பணிஓய்வினை பாதுகாப்பதற்காகவூம் இருக்கலாம்.
எமது தேவைகள் வித்தியாசமானவைஇ நாம் விரும்பும் வாழ்க்கையை பெற்றுக் கொள்ள கடுமையாக பணியாற்றுகின்றௌம். உங்கள் சேமிப்புகளை அதிகரித்து அதன் இலாபங்களை அதிகப்படுத்திக் கொள்ள உங்களுக்கான வாய்ப்பே இதுவாகும்.
தற்போது யூஐயூ ளுஅயசவடிரடைனநசபுழடன உடன் உங்கள் பணத்தை முதலீடு செய்து அதனை வேகமாக வளர்ச்சியடையச் செய்யலாம். அதனால் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்த தயாராக இருப்பீர்கள்.
நீங்கள் 4 தொடக்கம் 6 ஆண்டுகள் மட்டுமே கட்டுப்பணம் செலுத்த வேண்டும். நீங்கள் 20 ஆண்டுகள் வரையான பாதுகாப்பை பெறுவீர்கள்.
உங்களது முழுமையான முதிர்வூ அனுகூலத்தினை மொத்த தொகையாக ஒரே தடவையில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது அதனை மாதாந்த வருமானமாக 10-30 ஆண்டுகளுக்கு பெற்றுக் கொள்ளலாம்.
10வது காப்புறுதி ஆண்டு ப+ர்த்தியின் உங்களது வருடாந்த அடிப்படை கட்டுப்பணத்தின் 250மூ வரையிலான தொகையை விசுவாச வெகுமதியாக நீங்கள் தெரிவூ செய்யூம் கட்டுப்பண செலுத்தும் நிபந்தனைகள் மற்றும் காப்புறுதி நிபந்தனைகளுக்கு ஏற்ப பெறுவீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் தவணைகளை முறையாக உரிய காலத்தில் செலுத்துவது மட்டுமே.
எதிர்பாராத வகையில் உங்களது மரணம் ஏற்படுமானால்இ உங்களில் தங்கியிருப்போர் உடனடி ஆயூள் அனுகூலத்தை பெறுவார்கள் (முதலாவது காப்புறுதி ஆண்டில் உங்கள் மரணம் சம்பவித்தால் உங்கள் வருடாந்த அடிப்படை கட்டுப்பணத்தின் 120மூ த்தினை பெறுவார்கள்)
கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதியில் நீங்கள் மரணித்தால் அல்லது முழுமையான அல்லது நிரந்தரமாக அங்கவீனம் அடைந்தால் யூஐயூ உங்கள் சார்பாக உங்களிள் அடிப்படை கட்டுப்பணத்தைச் செலுத்துவதை தொடரும். எனவே உங்கள் குடும்பத்திற்காக நீங்கள் உருவாக்கிய நிதியத்தின் நன்மைகளை உங்கள் குடும்பம் பெற்றுக்கொள்ளும்.
உங்களுடைய கட்டுப்பணக் காலத்தின் போதுஇ ஒரே தடவையிலான மீளப்பெறுகையாகஇ உங்களுடைய நிதியத்திலிருந்து 15மூ வரை எடுக்க முடியூம்.(கட்டுபணம் செலுத்தும் காலத்தின் பின்னர்)
Additional options are available for you to customise your cover to make sure it suits your individual needs.
விபத்துக் காரணமாக உங்களுக்கு மரணம் சம்பவித்தால் அல்லது விபத்துக் காரணமாக உங்களால் தொழில்புரிய இயலாமல் போனால் உங்கள் குடும்பத்திற்கு தேவையான நிதிப் பாதுகாப்பினை வழங்கி அவர்களின் வாழ்க்கை முறை பராமரிக்கப்படுவதை நாம் உறுதி செய்வோம்.
ஆயுள் காப்புறுதி செய்யப்பட்டவர்(ஆயுள் காப்புறுதிதாரர்) காப்புறுதியின் உரிமையாளர் அல்லாத பட்சத்தில் காப்புறுதித் திட்டத்தால் வழங்கப்படும் அனுகூலங்கள் காப்புறுதி உரிமையாளருக்கே ஏற்புடையதாக இருக்கும், அதேவேளை காப்புறுதியானது காப்புறுதி செய்யப்பட்டவருக்கே ஏற்புடையதாக இருக்கும். இப்;பக்கமானது இத்திட்டத்தின் விளக்க நோக்கங்களுக்காக மாத்திரமே, இக்காப்புறுதித் திட்டத்துடன் தொடர்புடைய முழுமையான விபரங்களைத் தெரிந்து கொள்ள தயவு செய்து காப்புறுதித் திட்ட ஆவணத்தைப் பார்க்கவும்.
நீங்கள் இக்காப்புறுதித் திட்ட ஒப்பந்தத்தைப் பெற்றுக் கொண்ட நாளில் இருந்து (14) நாட்களுக்குள் எங்களுக்கு திருப்பி அளித்தல் மூலமாக இக்காப்புறுதித் திட்ட ஒப்பந்தத்தை இரத்துச் செய்யலாம். அதன் பின்னர் நாங்கள் உங்கள் காப்புறுதித் திட்டத்துடன் தொடர்புடைய செலவினங்களைக் கழித்ததன் பிற்பாடாக உங்களுடைய கட்டுப்பணங்களை உங்களிடம் திருப்பிச் செலுத்துவோம்.
ஆயுள் காப்புறுதிதாரர் முதலாவது காப்புறுதி வருடத்தின் போதோ அல்லது மீள்நிறுவலின் போதோ தற்கொலை செய்து கொண்டால் (அச்சமயத்தில் சித்தசுவாதீனம் அற்றவராகவோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலோ);
நாங்கள், நீங்கள் செலுத்திய கட்டுப்பணங்களை உங்களது காப்புறுதித் திட்டத்துடன் தொடர்பான செலவினங்களைக் கழித்ததன் பிற்பாடு உங்களுக்குச் செலுத்துவோம்; அல்லது
காப்புறுதித் திட்டமானது 3ம் நபருக்கு மாற்றப்படும் போது, காப்புறுதித் திட்டத்திற்கு செலுத்தப்பட்ட பணத்தை மீட்பதற்கு வேறு எந்தவொரு வழியும் இல்லை என்பதை 3ம் நபர் நிரூபிக்கும் பட்சத்தில் அவருக்கு நாங்கள் கொடுப்பனவைச் செலுத்துவோம் (காப்புறுதிதாரர் இறக்கும் போது வேறு ஏதேனும் வகையில் செலுத்தப்படக் கூடியதான தொகையை விட அதிகமாக இருத்தல் ஆகாது)
ஏதேனும் போர், ஆக்கிரமிப்பு, வெளிநாட்டு எதிரிகளின் செயற்பாடு, படை நடவடிக்கைகள் அல்லது யுத்தச் செயற்பாடுகள், சிவில் யுத்தம், படைக்கலகம், கலவரம், வேலை நிறுத்தம், மக்கள் கிளர்ச்சிக்குச் சமமான சிவில் அமைதியின்மை, இராணுவப் புரட்சி, கிளர்ச்சி, கலகம், இராணுவப் புரட்சி அல்லது அதிகார அபகரிப்பு, அரசாங்கத்தைப் பலாத்காரமாக அகற்றுவதை நோக்கமாகக் கொண்டதோ அல்லது அதை பயங்கரவாதம்
அல்லது வன்முறை மூலமாக அவ்வாறாக அகற்றுவதற்குப் பாதிப்பளிக்கும் வகையில் செயற்படுகின்ற ஏதேனும் ஒர் நிறுவனத்துடன் தொடர்புடைய அல்லது அந்நிறுவனம் சார்பாக செயல்படுகின்ற ஏதேனும் ஒரு நபருடைய ஏதேனும் ஒரு செயல் ஆகியற்றில ; ஆயுள் காப்புறுதிதாரர் ஈடுபாட்டுடன் பங்கேற்றால் அல்லது பங்கேற்க முயற்சி செய்வதன் விளைவாக ஆயுள்
காப்புறுதிதாரரின் இறப்பு நிகழ்ந்தால் மட்டுமே கையளிப்புப் பெறுமதியை நாங்கள் செலுத்துவோம்.
மரண இழப்பீட்டுக் கோரிக்கைக்கான காரணமானது மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டுக்குறி (AIDS) ஆகவோ மனித நோயெதிர்த்திறனழித் தீநுண்மம (HIV) ஆகவோ இருந்தால் நாங்கள் உங்களது மரணத்திற்கான அறிவித்தலைப் பெறும் திகதியில் அது நடைபெற்றதாக இருந்தால் மட்டுமே முதலீட்டுக் கணக்கின் மீதியை நாங்கள் செலுத்துவோம்.
முதல் மூன்று காப்புறுதி வருடங்களின் போது உங்களினுடைய
கட்டுப்பணங்களை இறுதித் திகதியில் செலுத்த மாட்டீர்கள் எனில் நீங்கள் மேலதிகமாக முப்பது (30) நாட்கள் கட்டுப்பணங்களைச் செலுத்துவதற்காகப் பெறுவீர்கள்.
காப்புறுதி ஆரம்பிக்கப்பட்டதன் பிற்பாடு மேலதிக சுகாதார அனுகூலங்களை அனுபவிப்பதற்காக 3 மாதங்கள் தாமதிப்புக் காலமாக இருக்கும். அன்ஜியோபிலாஸ்டி அனுகூலத்திற்காக இக்காலம் 12 மாதங்களாக இருக்கும்.
ஒவ்வொரு வருடமும் நிறுவனத்தினால் பிரகடனப்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட ஒரு வீதமானது முதலீட்டுக் கணக்கில் பங்குலாபத்தை வைப்புச்செய்வதற்கு அடிப்படையாக அமையும். கடந்த ஆண்டுக்கு பொருந்தக்கூடிய வருடாந்த பங்குலாப வீதம் நடப்பு ஆண்டின் முதல் ஆறு (6) மாதங்களுக்குள்
பிரகடனப்படுத்தப்படும். குறிப்பிட்ட வருடத்திற்குரிய ‘வருடாந்த பங்குலாப வீதம்’ அறிவிக்கப்படும் வரை, ‘உத்தரவாதம் அளிக்கப்பட்ட வருடாந்த பங்குலாப வீதம்’ முதலீட்டுக் கணக்கின் அடிப்படையிலான எந்த அனுகூலத் தொகையையும் கணக்கிடுவதற்குரிய அடிப்படையாகப் பயன்படுத்தப்படும்.
அடுத்த ஆண்டுக்கான உத்தரவாதம் அளிக்கப்பட்ட பங்குலாப வீதமானது நடப்பு ஆண்டின் இறுதி மூன்று (3) மாதங்களுக்குள் பிரகடனப்படுத்தப்படும்.
உங்களினுடைய காப்புறுதியானது கையளிப்புப் பெறுமதியை அடைந்ததன் பிற்பாடு முதலீட்டுக் கணக்கின் மீதியில் இருந்து உங்களால் 15% வரை எடுக்க முடியும்.