சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு. மேலும் நீங்கள் பராமரிக்கும் உங்கள் அன்புக்குரியவர்களை நாங்கள் பாதுகாப்போம்
Retirement
ஓய்வூதிய வயது
வழங்கப்படுவது
நீங்கள் இதனை எங்கு கொள்வனவு செய்யலாம்
வாழ்க்கையை வெற்றியுள்ளதாக்க இளம் வயதில் நீங்கள் கடுமையாக உழைத்துள்ளீர்கள். தற்போது உங்கள் வாழ் நாள் சாதனைகளை நிம்மதியாக அனுபவிக்கும் உரிமத்தினைப் பெற்றுள்ளீர்கள். உங்களுக்குப் பொருத்தமான மிகவும் சிறந்த முன்கூட்டிய பணி ஓய்வூத் திட்டத்தினை யுஐயு; Pநளெழைளெ Pடரள உங்களுக்கு வழங்குகின்றது. நீங்கள் எப்போது பணி ஓய்வினைப் பெற திட்டமிட்டுள்ளீர்கள் என்பதை எங்களிடம் கூறுங்கள்? உங்களுக்குத் தேவைப்படும் மாதாந்த ஓய்வூதியம் எவ்வளவு? மற்றும் பணி ஓய்வை மகிழ்ச்சியாகக் கழிக்க எவ்வளவு காலத்திற்கு இந்த ஓய்வூதியத்தை பெற விரும்புகின்றீர்கள் என்பதை எமக்கு தெரிவியுங்கள்.
மாதாந்த ஓய்வூதியம் - உங்களுக்கும், உங்கள் வாழ்க்கைத் துணைக்குமான ஆயுள் பாதுகாப்பு
நீங்கள் தெரிவு செய்த ஓய்வூதிய வயது தொடக்கம் 10–30 ஆண்டுகள் வரை மாதாந்த ஓய்வூதியம் ஒன்றை பெறுவீர்கள். நீங்கள் மரணித்தோ அல்லது முழுமையாக மற்றும் நிரந்தரமாக அங்கவீனம் அடைந்தோ தொழில் புரிய முடியாத நிலை ஏற்பட்டால் உங்கள் சார்பாக நாம் கட்டுப்பணம் செலுத்துவதைத் தொடர்ந்து, நீங்கள் தெரிவு செய்த தினத்தில் இருந்து மாதாந்த ஒய்வூதியம் ஒன்றைப் பெறுவதை உறுதி செய்வோம்.
உங்கள் ஓய்வூதிய நிதியம் வருடாந்தம் பங்குலாபத்தினை ஈட்டுவதால், உங்கள் ஓய்வூதிய நிதியம் தொடர்ச்சியாக வளர்ச்சி அடையும்.
வசதியான பணி ஓய்விற்கு நீங்கள் தயாராக இருப்பதை உறுதிப்படுத்த தேவையான பாதுகாப்பு அளவினை தெரிவு செய்யும் விருப்பினை AIA ஓய்வூதியப் பிளஸ் (Pensions Plus) வழங்குகின்றது.
பணவீக்கப் பாதுகாப்பானது பணவீக்கத்திற்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருப்பதனால், எதிர்காலத்தில் உங்கள் பணம் அதன் பெறுமதியை இழக்காது.
முதல் மூன்று காப்புறுதி ஆண்டுகளின் பூர்த்தியின் பின்பு கட்டுப்பணம் செலுத்தும் கால எல்லையினுள் ஏதேனும் அவசர நிலையொன்று ஏற்படின், உங்களின் ஓய்வூதிய நிதியத்தில் இருந்து ஒரு தடவை மாத்திரம் 15% வரையான நிதியினைக் காப்புறுதி காலத்தில் மீளப் பெற முடியும்.
உங்கள் கட்டுப்பணங்களை மாதாந்த, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்த அடிப்படையில் செலுத்துவதை நீங்களே தீர்மானிக்கலாம். குறைந்தபட்ச வருடாந்த கட்டுப்பணம் ரூபா.60,000 மற்றும் குறைந்தபட்ச மீள் நிரப்பு (டொப்-அப்) பெறுமதி ரூபா.10,000 ஆகும்.
‘முழுமையான நிரந்தர இயலாமை’ என நாம் எதைக் கருதுகின்றோம்.
‘முழுமையான மற்றும் நிரந்தர இயலாமை” என்பது எஞ்சியுள்ள உங்கள் வாழ் நாளில் உங்களால் தொழில் புரிய அல்லது வருமானம் ஈட்ட முடியாமல் போகும் நிலையினைக் குறிக்கும். நீங்கள் முழுமையாக அங்கவீனம் அடைந்த தினம் தொடக்கம் உங்களுக்கான கட்டுப்பணத்தை நாம் செலுத்துவோம்.
“கட்டுப்பணம் செலுத்தும் காலம்” என்பது என்ன?
காப்புறுதியால் பாதுகாப்பு பெறுவதற்காக நீங்கள் கட்டுப்பணம் செலுத்த வேண்டிய கால அளவாகும்.
உங்களின் தனிப்பட்ட தேவைகளுக்குப் பொருந்தும் வகையில் காப்பீட்டை திருத்தியமைக்கக்கூடிய மேலதிக தெரிவுகள் காணப்படுகின்றன.
விபத்துக் காரணமாக உங்களுக்கு மரணம் சம்பவித்தால் அல்லது விபத்துக் காரணமாக உங்களால் தொழில்புரிய இயலாமல் போனால் உங்கள் குடும்பத்திற்கு தேவையான நிதிப் பாதுகாப்பினை வழங்கி அவர்களின் வாழ்க்கை முறை பராமரிக்கப்படுவதை நாம் உறுதி செய்வோம்.
03 நாட்களுக்கு மேல் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற நேரிட்டால் நாளாந்த பணக் கொடுப்பனவாக ரூபா.10,000 வரையான அனுகூலத்தைப் பெறுவீர்கள் (முதலாவது தினம் தொடக்கம்). அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டால் அத்தொகை இரு மடங்காகும். இக்காப்புறுதியை உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளுக்கும் பெற்றுக் கொள்ள முடியும்.
ஆபத்தான சுகவீனங்கள் உங்களின் உடல் ரீதியான ஆரோக்கியத்தை மாத்திரமின்றி உங்களின் நிதி ஆரோக்கியத்தையும் பாதிக்கும். ஆபத்தான சுகவீனங்களுக்கான காப்புறுதியின் ஊடாக நாம் 22 பட்டியலிடப்பட்ட ஆபத்தான சுகவீனங்களுக்கு நிதி உதவிகளை வழங்குவோம். ஆகவே, அதிலிருந்து மீட்சி பெறுவதில் உங்களால் கவனம் செலுத்த முடியும்.
இலங்கை, இந்தியா மற்றும் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்படும் பட்டியலிடப்பட்ட 250 சத்திரசிகிச்சைகளுக்கான நிதி உதவிகளை நாம் இக்காப்புறுதியின் கீழ் உங்களுக்கு வழங்குவோம். இக்காப்பீட்டை உங்கள் வாழ்க்கைத் துணைக்காகவும் பெற்றுக் கொள்ள முடியும்.
திடீர் மரணம் அல்லது தொழில் புரிய இயலாத அங்கவீன நிலையொன்று உங்களுக்கு ஏற்பட்டால் உங்களுடைய குடும்பத்திற்கு நிலையான மாதாந்த வருமானம் ஒன்றை நாங்கள் வழங்குவோம். (காப்புறுதிக் காலத்தில் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை)
உங்கள் காப்புறுதியின் ஊடாக உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் ஆயுள் காப்புறுதி வழங்கப்படும்.
உங்கள் குழந்தைக்கு இலங்கை, இந்தியா மற்றும் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்படும் பட்டியலிடப்பட்ட 250 சத்திரசிகிச்சைகளுக்கான நிதி உதவிகளை நாம் இக் காப்புறுதியின் கீழ் உங்களுக்கு வழங்குவோம். உங்களின் பிள்ளை 12 வயதிற்கு குறைந்தவராக இருப்பின் அவர்களுடன் தங்கியிருப்பதற்கும் கொடுப்பனவொன்றை உங்களுக்கு வழங்குகின்றோம்.
ஆயுள் காப்புறுதி செய்யப்பட்டவர்(ஆயுள் காப்புறுதிதாரர்) காப்புறுதியின் உரிமையாளர் அல்லாத பட்சத்தில் காப்புறுதி திட்டத்தால் வழங்கப்படும் அனுகூலங்கள் காப்புறுதி உரிமையாளருக்கே ஏற்புடையதாக இருக்கும், அதேவேளை காப்புறுதியானது காப்புறுதி செய்யப்பட்டவருக்கே ஏற்புடையதாக இருக்கும். இப்பக்கமானது இத்திட்டத்தின் விளக்க நோக்கங்களுக்காக மாத்திரமே, இக்காப்புறுதி திட்டத்துடன் தொடர்புடைய முழுமையான விபரங்களைத் தெரிந்து கொள்ள தயவு செய்து காப்புறுதித் திட்ட ஆவணத்தைப் பார்க்கவும்.
நீங்கள் இக்காப்புறுதித் திட்ட ஒப்பந்தத்தைப் பெற்றுக் கொண்ட நாளில்
இருந்து (14) நாட்களுக்குள் எங்களுக்கு திருப்பி அளித்தல் மூலமாக
இக்காப்புறுதித் திட்ட ஒப்பந்தத்தை இரத்துச் செய்யலாம். அதன் பின்னர்
நாங்கள் உங்கள் காப்புறுதித் திட்டத்துடன் தொடர்புடைய செலவினங்களைக்
கழித்ததன் பிற்பாடாக உங்களுடைய கட்டுப்பணங்களை உங்களிடம் திருப்பிச் செலுத்துவோம்.
ஆயுள் காப்புறுதிதாரர் முதலாவது காப்புறுதி வருடத்தின் போதோ அல்லது மீள்நிறுவலின் போதோ தற்கொலை செய்து கொண்டால் (அச்சமயத்தில் சித்தசுவாதீனம் அற்றவராகவோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலோ);
நாங்கள், நீங்கள் செலுத்திய கட்டுப்பணங்களை உங்களது காப்புறுதித் திட்டத்துடன் தொடர்பான செலவினங்களைக் கழித்ததன் பிற்பாடு உங்களுக்குச் செலுத்துவோம்; அல்லது
காப்புறுதித் திட்டமானது 3ம் நபருக்கு மாற்றப்படும் போது, காப்புறுதித் திட்டத்திற்கு செலுத்தப்பட்ட பணத்தை மீட்பதற்கு வேறு எந்தவொரு வழியும் இல்லை என்பதை 3ம் நபர் நிரூபிக்கும் பட்சத்தில் அவருக்கு நாங்கள் கொடுப்பனவைச் செலுத்துவோம் (காப்புறுதிதாரர் இறக்கும் போது வேறு ஏதேனும் வகையில் செலுத்தப்படக் கூடியதான தொகையை விட அதிகமாக இருத்தல் ஆகாது)
ஏதேனும் போர், ஆக்கிரமிப்பு, வெளிநாட்டு எதிரிகளின் செயற்பாடு, படை நடவடிக்கைகள் அல்லது யுத்தச் செயற்பாடுகள், சிவில் யுத்தம், படைக்கலகம், கலவரம், வேலை நிறுத்தம், மக்கள் கிளர்ச்சிக்குச் சமமான சிவில் அமைதியின்மை, இராணுவப் புரட்சி, கிளர்ச்சி, கலகம், இராணுவப் புரட்சி அல்லது அதிகார அபகரிப்பு, அரசாங்கத்தைப் பலாத்காரமாக அகற்றுவதை நோக்கமாகக் கொண்டதோ அல்லது அதை பயங்கரவாதம்
அல்லது வன்முறை மூலமாக அவ்வாறாக அகற்றுவதற்குப் பாதிப்பளிக்கும் வகையில் செயற்படுகின்ற ஏதேனும் ஒர் நிறுவனத்துடன் தொடர்புடைய அல்லது அந்நிறுவனம் சார்பாக செயல்படுகின்ற ஏதேனும் ஒரு நபருடைய ஏதேனும் ஒரு செயல் ஆகியற்றில ; ஆயுள் காப்புறுதிதாரர் ஈடுபாட்டுடன் பங்கேற்றால் அல்லது பங்கேற்க முயற்சி செய்வதன் விளைவாக ஆயுள் காப்புறுதிதாரரின் இறப்பு நிகழ்ந்தால் மட்டுமே கையளிப்புப் பெறுமதியை நாங்கள் செலுத்துவோம்.
மரண இழப்பீட்டுக் கோரிக்கைக்கான காரணமானது மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டுக்குறி (AIDS) ஆகவோ மனித நோயெதிர்த்திறனழித் தீநுண்மம (HIV) ஆகவோ இருந்தால் நாங்கள் உங்களது மரணத்திற்கான அறிவித்தலைப் பெறும் திகதியில் அது நடைபெற்றதாக இருந்தால் மட்டுமே முதலீட்டுக் கணக்கின் மீதியை நாங்கள் செலுத்துவோம்.
முதல் மூன்று காப்புறுதி வருடங்களின் போது உங்களினுடைய
கட்டுப்பணங்களை இறுதித் திகதியில் செலுத்த மாட்டீர்கள் எனில் நீங்கள் மேலதிகமாக முப்பது (30) நாட்கள் கட்டுப்பணங்களைச் செலுத்துவதற்காகப் பெறுவீர்கள்.
காப்புறுதி ஆரம்பிக்கப்பட்டதன் பிற்பாடு மேலதிக சுகாதார அனுகூலங்களை அனுபவிப்பதற்காக 3 மாதங்கள் தாமதிப்புக் காலமாக இருக்கும். அன்ஜியோபிலாஸ்டி அனுகூலத்திற்காக இக்காலம் 12 மாதங்களாக இருக்கும்.
ஒவ்வொரு வருடமும் நிறுவனத்தினால் பிரகடனப்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட ஒரு வீதமானது முதலீட்டுக் கணக்கில் பங்குலாபத்தை வைப்புச்செய்வதற்கு அடிப்படையாக அமையும். கடந்த ஆண்டுக்கு பொருந்தக்கூடிய வருடாந்த
பங்குலாப வீதம் நடப்பு ஆண்டின் முதல் ஆறு (6) மாதங்களுக்குள்
பிரகடனப்படுத்தப்படும். குறிப்பிட்ட வருடத்திற்குரிய ‘வருடாந்த பங்குலாப வீதம்’ அறிவிக்கப்படும் வரை, ‘உத்தரவாதம் அளிக்கப்பட்ட வருடாந்த பங்குலாப வீதம்’ முதலீட்டுக் கணக்கின் அடிப்படையிலான எந்த அனுகூலத் தொகையையும் கணக்கிடுவதற்குரிய அடிப்படையாகப் பயன்படுத்தப்படும்.
அடுத்த ஆண்டுக்கான உத்தரவாதம் அளிக்கப்பட்ட பங்குலாப வீதமானது நடப்பு ஆண்டின் இறுதி மூன்று (3) மாதங்களுக்குள் பிரகடனப்படுத்தப்படும்.
உங்களினுடைய காப்புறுதியானது கையளிப்புப் பெறுமதியை அடைந்ததன் பிற்பாடு முதலீட்டுக் கணக்கின் மீதியில் இருந்து உங்களால் 15% வரை எடுக்க முடியும்.