சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
டக் டிக் டுக் என மிகவும் இலகுவானது
அதிகபட்ச முதிர்வு வயது
வழங்கப்படும் வயதெல்லை
நீங்கள் இதனை எங்கு கொள்வனவு செய்யலாம்
காப்புறுதி காலம்
கட்டுப்பணக் கொடுப்பனவு காலம்
ஓய்வானது பொதுவாக அனைவருக்கும் கூடிய விரைவில் நிகழக்கூடியதொரு விடயமேயாகும். இருப்பினும் எம்மில் அதிகமானவர்கள் வாழ்க்கையின் பிந்திய காலத்தில் கூட இதைப்பற்றி அதிகமாகச் சிந்திப்பதில்லை. வாழ்க்கையில் சில கசப்பான அனுபவங்களைச் சந்தித்த பிறகே, தாங்களும் ஒரு காப்புறுதித் திட்டத்தை பெற்றிருந்திருக்கலாமே என சிந்திப்பார்கள். இங்கு உண்மை என்னவெனில், ஓய்வைப் பற்றிய திட்டமிடலை நாம் ஆரம்ப காலத்திலேயே மேற்கொள்வது சரிதானா என ஒருபோதும் சிந்திக்க வேண்டியதொரு அவசியமில்லை.
இவ்வூலகைச் சுற்றி வருவதற்கான உங்களுடைய கனவூப் பயணமாகவோ, அல்லது நீங்கள் ஓய்வூ அடைந்த பின்னரான மிகவூம் எளிய பாதுகாப்பானதொரு மாதாந்த வருமானமாகவோ, அல்லது நீங்கள் அனுபவித்த அதே வாழ்க்கை முறையை அப்படியே தொடர்ந்து கொண்டு செல்வதாகவோ, எதுவாக இருப்பினும், உங்களுடைய சேமிப்புக்களைத் தொடங்குவதற்கு இதுவே மிகச்சிறந்த தருணமாகும். ஒவ்வொரு மாதமும் சிறிய தொகையொன்றாகவிருப்பினும் நீங்கள் உடனடியாகவே உங்களுடைய சேமிப்பை ஆரம்பியூங்கள், இதனால் உங்களுடைய ஓய்வூக் காலம் மேலும் பாதுகாப்பானதாகவூம், சிறப்பானதாகவூம் இருக்கும்!
(AIA இலகு ஓய்வூதியம்) உடன்இ 3 மிக எளிய படிநிலைகளில் உங்களுடைய பணி ஓய்வைத் திட்டமிடுங்கள்!
நீங்கள் உங்களுடைய முழு முதிர்வூ அனுகூலத்தையூம் காப்புறுதியின் முதிர்வின் போதோஇ
அல்லது 05-30 வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மாதாந்த ஓய்வூதியமாகவோ தெரிவூ
செய்து பெற முடியூம்.
நீங்கள் சரியான நேரத்தில் கட்டுப்பனங்களைச் செலுத்தினால், 15வது வருடத்தில் 15 வருட காப்புறுதி காலத்திலும், 20வது வருடத்தில் 20, 25 & 30 வருட காப்புறுதி காலத்திற்கும், உங்களின் வருடாந்த அடிப்படை கட்டுப்பணத்தில் 8 மடங்கு (800%) விசுவாச வெகுமதியைப் பெறுவீர்கள். (காப்புறுதி விதிமுறை மற்றும் நீங்கள் தேர்வு செய்யும் கட்டுப்பணத் தெரிவை பொறுத்து). உங்கள் ஓய்வூதிய நிதியம் ஒவ்வொரு ஆண்டும் பங்குலாபதினைப் பெறும் மற்றும் பணவீக்கத்தின் விளைவுகளை எதிர்கொள்ள உங்களுக்கு உதவுவதற்காக காலப்போக்கில் தொடர்ந்து வளரும்.
துரதிஷ்டவசமான உங்களுடைய மரணத்தின் போது, உங்களில் தங்கியிருப்போரின் கஷ்டமான பொருளாதார நிலைமையைப் போக்குவதற்காகஇ அவர்களுக்கு ஆயூள் அனுகூலம் வழங்கப்படும்.
நீங்கள் விபத்தொன்றின் மூலமாக இறந்தாலோ அல்லது பகுதியாகஃமுழுமையாக அங்கவீனம் அடைந்தாலோ, இவ்விபத்து அனுகூலமானது உங்களுடைய குடும்பத்திற்கு மிகவூம் உதவியானதாக இருக்கும்.
கட்டுப்பணச் செலுத்தல் காலத்தின் போது நீங்கள் மரணித்தாலோ அல்லது முழுமையான நிரந்தர அங்கவீனமடைந்தாலோஇ யூஐயூ கட்டுப்பணப் பாதுகாப்பு அனுகூலம் உங்கள் சார்பாக உங்களுடைய கட்டுப்பணங்களைச் செலுத்தி உங்களுடைய காப்புறுதியைத் தொடரும். நீங்கள் உங்களுடைய குடும்பத்திற்காக கட்டியெழுப்பிய ஓய்வூ+திய நிதியிலிருந்தே அவர்கள் அனுகூலத்தைப் பெறுவார்கள்.
உங்களுடைய கட்டுப்பணக் காலத்தின் போதுஇ ஒரே தடவையிலான மீளப்பெறுகையாகஇ உங்களுடைய நிதியத்திலிருந்து 15மூ வரை எடுக்க முடியூம்.
AIA ஈஸி பென்ஷன்ஸ் பிளஸ்
ஆனது 6 ஓய்வூதியப் பொதிகளின் தேர்வை வழங்குகிறது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொதியில் ஆயுள் அனுகூலம் மற்றும் விபத்து அனுகூலம் இருக்கும்
உங்கள் குடும்பம் நிதி ரீதியாகப் பாதுகாக்கப்படும் என்பதை அறிந்துகொள்வது உங்களுக்கு அதிக ஆறுதலைத் தரும்
அனுகூலம் |
தொகுப்பு 1 |
தொகுப்பு 2 |
தொகுப்பு 3 |
தொகுப்பு 4 |
தொகுப்பு 5 |
தொகுப்பு 6 |
வாழ்க்கை அனுகூலம் (ரூ) |
450,000 |
600,000 |
750,000 |
900,000 |
1,050,000 |
1,200,000 |
விபத்து அனுகூலம் (ரூ) |
675,000 |
900,000 |
1,125,000 |
1,350,000 |
1,575,000 |
1,800,000 |
கட்டுப்பண பாதுகாப்பு அனுகூலம் |
ஆம் |
ஆம் |
ஆம் |
ஆம் |
ஆம் |
ஆம் |
தீவிர நோய் அனுகூலம்* (ரூ) |
100,000 |
200,000 |
300,000 |
400,000 |
500,000 |
600,000 |
மருத்துவமனையில் சேர்க்கும் அனுகூலம்* (ரூ) |
1,000 |
2,000 |
3,000 |
4,000 |
5,000 |
6,000 |
ஹெல்த் லயிட் அனுகூலம்* (ரூ.) |
300,000 |
500,000 வரை |
750,000 வரை |
750,000 வரை |
1,000,000 வரை |
1,000,000 வரை |
*இவை தெரிவிற்குரிய அனுகூலங்கலாகும் ஹெல்த் லயிட் அனுகூலமானது முன் வடிவமைக்கப்பட்ட 5 பேக்கேஜ்களில் இருந்து தேர்தெடுக்கப்படலாம். |
ஓய்வூதிய ஊக்கி என்பது AIA ஈஸி பென்ஷன்ஸ் பிளஸ்
உடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு தனித்துவமான அம்சமாகும். AIA உங்கள் மாதாந்த ஓய்வூதியத்தை 30% அதிக பங்குலாபத்துடன், அறிவிக்கப்பட்ட ஆண்டு பங்குலாப விகிதத்தை விட அதிகரிக்கும்.
உங்கள் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களின் மருத்துவச் செலவுகளை ரூ. 1,000,000 வரை ஈடுசெய்வதற்காக முன்-தொகுக்கப்பட்டதோர் மருத்துவமனை அனுகூலம்.
நீங்கள் மூன்று நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், ஒரு நாளைக்கு 6,000 ரூபாய் வரை பண வருமானம், இதனால், உங்கள் அன்றாட செலவுகளை நீங்கள் ஈடுகட்ட முடியும்
புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு உள்ளிட்ட 22 முக்கியமான நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள, ரூபாய் 600,000 வரையிலான தீவிர நோய்களுக்கான அனுகூலம்
‘முழுமையான நிரந்தர இயலாமை’ என நாம் எதைக் கருதுகின்றம்.
Total and Permanent Disability means you are disabled and unable to work or earn money for the rest of your life.
“ஆபத்தான சுகயீனப் பாதுகாப்பு” என்பதால் நாங்கள் கருதுவது என்ன?
In an unfortunate event of diagnosis of a covered critical illness such as cancer, AIA provides you with cash compensation for heavy medical expenses to ease your burden, and face difficulties together.
ஆயுள் காப்புறுதி செய்யப்பட்டவர்(ஆயுள் காப்புறுதிதாரர்) காப்புறுதியின் உரிமையாளர் அல்லாத பட்சத்தில் காப்புறுதி திட்டத்தால் வழங்கப்படும் அனுகூலங்கள் காப்புறுதி உரிமையாளருக்கே ஏற்புடையதாக இருக்கும், அதேவேளை காப்புறுதியானது காப்புறுதி செய்யப்பட்டவருக்கே ஏற்புடையதாக இருக்கும். இப்பக்கமானது இத்திட்டத்தின் விளக்க நோக்கங்களுக்காக மாத்திரமே, இக்காப்புறுதித் திட்டத்துடன் தொடர்புடைய முழுமையான விபரங்களைத் தெரிந்து கொள்ள தயவு செய்து காப்புறுதித் திட்ட ஆவணத்தை பார்க்கவும்.
நீங்கள் இக்காப்புறுதித் திட்ட ஒப்பந்தத்தைப் பெற்றுக் கொண்ட நாளில்
இருந்து (14) நாட்களுக்குள் எங்களுக்கு திருப்பி அளித்தல் மூலமாக இக்காப்புறுதித் திட்ட ஒப்பந்தத்தை இரத்துச் செய்யலாம். அதன் பின்னர் நாங்கள் உங்கள் காப்புறுதித் திட்டத்துடன் தொடர்புடைய செலவினங்களைக் கழித்ததன் பிற்பாடாக உங்களுடைய கட்டுப்பணங்களை உங்களிடம் திருப்பிச் செலுத்துவோம்.
ஆயுள் காப்புறுதிதாரர் முதலாவது காப்புறுதி வருடத்தின் போதோ அல்லது மீள்நிறுவலின் போதோ தற்கொலை செய்து கொண்டால் (அச்சமயத்தில் சித்தசுவாதீனம் அற்றவராகவோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலோ);
நாங்கள், நீங்கள் செலுத்திய கட்டுப்பணங்களை உங்களது காப்புறுதித் திட்டத்துடன் தொடர்பான செலவினங்களைக் கழித்ததன் பிற்பாடு உங்களுக்குச் செலுத்துவோம்; அல்லது
காப்புறுதித் திட்டமானது 3ம் நபருக்கு மாற்றப்படும் போது, காப்புறுதித் திட்டத்திற்கு செலுத்தப்பட்ட பணத்தை மீட்பதற்கு வேறு எந்தவொரு வழியும் இல்லை என்பதை 3ம் நபர் நிரூபிக்கும் பட்சத்தில் அவருக்கு நாங்கள் கொடுப்பனவைச் செலுத்துவோம் (காப்புறுதிதாரர் இறக்கும் போது வேறு ஏதேனும் வகையில் செலுத்தப்படக் கூடியதான தொகையை விட அதிகமாக இருத்தல் ஆகாது)
ஏதேனும் போர், ஆக்கிரமிப்பு, வெளிநாட்டு எதிரிகளின் செயற்பாடு, படை நடவடிக்கைகள் அல்லது யுத்தச் செயற்பாடுகள், சிவில் யுத்தம், படைக்கலகம், கலவரம், வேலை நிறுத்தம், மக்கள் கிளர்ச்சிக்குச் சமமான சிவில் அமைதியின்மை, இராணுவப் புரட்சி, கிளர்ச்சி, கலகம், இராணுவப் புரட்சி அல்லது அதிகார அபகரிப்பு, அரசாங்கத்தைப் பலாத்காரமாக அகற்றுவதை நோக்கமாகக் கொண்டதோ அல்லது அதை பயங்கரவாதம் அல்லது வன்முறை மூலமாக அவ்வாறாக அகற்றுவதற்குப் பாதிப்பளிக்கும்
வகையில் செயற்படுகின்ற ஏதேனும் ஒர் நிறுவனத்துடன் தொடர்புடைய அல்லது அந்நிறுவனம் சார்பாக செயல்படுகின்ற ஏதேனும் ஒரு நபருடைய ஏதேனும் ஒரு செயல் ஆகியற்றில ; ஆயுள் காப்புறுதிதாரர் ஈடுபாட்டுடன் பங்கேற்றால் அல்லது பங்கேற்க முயற்சி செய்வதன் விளைவாக ஆயுள்
காப்புறுதிதாரரின் இறப்பு நிகழ்ந்தால் மட்டுமே கையளிப்புப் பெறுமதியை நாங்கள் செலுத்துவோம்.
மரண இழப்பீட்டுக் கோரிக்கைக்கான காரணமானது மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டுக்குறி (AIDS) ஆகவோ மனித நோயெதிர்த்திறனழித் தீநுண்மம (HIV) ஆகவோ இருந்தால் நாங்கள் உங்களது மரணத்திற்கான அறிவித்தலைப் பெறும் திகதியில் அது நடைபெற்றதாக இருந்தால் மட்டுமே முதலீட்டுக் கணக்கின் மீதியை நாங்கள் செலுத்துவோம்.
முதல் மூன்று காப்புறுதி வருடங்களின் போது உங்களினுடைய
கட்டுப்பணங்களை இறுதித் திகதியில் செலுத்த மாட்டீர்கள் எனில் நீங்கள் மேலதிகமாக முப்பது (30) நாட்கள் கட்டுப்பணங்களைச் செலுத்துவதற்காகப் பெறுவீர்கள்.
காப்புறுதி ஆரம்பிக்கப்பட்டதன் பிற்பாடு மேலதிக சுகாதார அனுகூலங்களை அனுபவிப்பதற்காக 3 மாதங்கள் தாமதிப்புக் காலமாக இருக்கும். அன்ஜியோபிலாஸ்டி அனுகூலத்திற்காக இக்காலம் 12 மாதங்களாக இருக்கும்.
ஒவ்வொரு வருடமும் நிறுவனத்தினால் பிரகடனப்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட ஒரு வீதமானது முதலீட்டுக் கணக்கில் பங்குலாபத்தை வைப்புச்செய்வதற்கு அடிப்படையாக அமையும். கடந்த ஆண்டுக்கு பொருந்தக்கூடிய வருடாந்த
பங்குலாப வீதம் நடப்பு ஆண்டின் முதல் ஆறு (6) மாதங்களுக்குள்
பிரகடனப்படுத்தப்படும். குறிப்பிட்ட வருடத்திற்குரிய ‘வருடாந்த பங்குலாப வீதம்’ அறிவிக்கப்படும் வரை, ‘உத்தரவாதம் அளிக்கப்பட்ட வருடாந்த பங்குலாப வீதம்’ முதலீட்டுக் கணக்கின் அடிப்படையிலான எந்த அனுகூலத் தொகையையும் கணக்கிடுவதற்குரிய அடிப்படையாகப் பயன்படுத்தப்படும்.
அடுத்த ஆண்டுக்கான உத்தரவாதம் அளிக்கப்பட்ட பங்குலாப வீதமானது நடப்பு ஆண்டின் இறுதி மூன்று (3) மாதங்களுக்குள் பிரகடனப்படுத்தப்படும்.
உங்களினுடைய காப்புறுதியானது கையளிப்புப் பெறுமதியை அடைந்ததன் பிற்பாடு முதலீட்டுக் கணக்கின் மீதியில் இருந்து உங்களால் 15% வரை எடுக்க முடியும்.