சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
சுகாதார காப்புறுதி
அதிகபட்ச முதிர்ச்சி வயது
வழங்கும் வயது
இதனை கொள்வனவூ செய்யக்கூடியது
நாம் எவரும் நமக்கு நோய் வரவேண்டுமென திட்டமிடுவதில்லை, எனினும் மிகவும் நியாயமான விலையில் மிகச்சிறந்த வைத்தியச் சிகிச்சைகளைப் பெறுவதற்கு நிதியியல் ரீதியாகத் தயாராக இருப்பது மிகவும் முக்கியமானதாகும். எவ்வாறாயினும் இலங்கையில் அதிகரித்துச் செல்லும் வைத்தியச் செலவினங்களைப் பார்க்கும் போது மிகச்சிறந்த வைத்தியச் சிகிச்சைகளை நியாயமான விலையில் பெறுவதென்பது கவலைக்குரிய விடயம் ஒன்றாகவே இருக்கின்றது. இலங்கையின் தற்போதைய சுகாதாரப் பராமரிப்புத் துறையினைக் கருத்திற்கொண்டு எந்தவொரு வைத்திய அவசரத் தேவைகளுக்கும் தயாராக இருப்பதென்பது மிகவும் புத்திசாலித்தனமான தீர்மானமாகும். யுஐயு ஹெல்த் பாஸ்போர்ட்; என்பது இலங்கையிலும் மற்றும் உலகளாவிய ரீதியிலும் மிகச்சிறந்த வைத்தியப் பராமரிப்பினை நீங்களும் மற்றும் உங்களின் அன்பிற்குரியவர்களும் பெறுவதை சாத்தியமாக்கும் மிகவும் பரிபூரணமான வைத்தியசாலைச் செலவுக் காப்பீடாகும்.
உங்கள் விருப்பத் தெரிவின் அடிப்படையில் உங்களுக்கு மிகவும் வசதியான தெரிவுகளை வழங்குவதன் மூலம் பணமற்ற வைத்தியசாலை அனுமதி அல்லது வைத்தியச் செலவினங்களைத் திருப்பிச் செலுத்தல் வசதியின் ஊடாக உங்களுடைய மற்றும் உங்களின் அன்பிற்குரியவர்களின் வைத்தியச் செலவினங்களைக் காப்பிட முடியும்.
யுஐயு வைத்தியசாலைச் செலவினங்களை மட்டும் காப்பீடாமல் ஆயுள் காப்புறுதிக்கு அப்பால் மிகச்சிறந்த காப்புறுதித் திட்டங்களை வழங்குகின்ற மேலதிக ஆரோக்கிய நல்வாழ்வு திட்டங்களையும் யுஐயு உங்களுக்கு வழங்குகின்றது.
உங்கள் தேவைகளுக்குப் பொருத்தமான ஆரோக்கியக் காப்பீடு
ரூபா.250,000 இலிருந்து ரூபா.50,000,000 வரை உங்களுடைய ஹெல்த் பாஸ்போர்ட்; காப்பீட்டிற்குத் தெரிவு செய்வதற்காக அனுகூலத் தொகைகளின் விருப்பத் தெரிவுகள் காணப்படுகின்றன.
பணமற்ற வைத்தியசாலை அனுமதி வசதியுடனான இலங்கை அல்லது உலகளாவிய (ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா தவிர்ந்த) வைத்தியசாலைச் செலவினங்களுக்கான காப்பீடு.
உங்களின் முழுக் குடும்பத்திற்குமான மிகச்சிறந்த வைத்தியப் பராமரிப்பினை உறுதிப்படுத்துவதற்கு உங்கள் வாழ்க்கைத்துணை, பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களை உள்ளடக்குவதற்கான இயலுமை.
உங்கள் தேவையின் அடிப்படையில் மகப்பேறு அனுகூலத்தைத் தெரிவு செய்வதற்கான விருப்பத்தெரிவு.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 30 நாட்களுக்கு முன்பும் மற்றும் 30 நாட்களுக்குப் பிறகும் நீங்கள் மேற்கொள்ளும் வைத்தியசாலை அனுமதியின் ‘முன்’ மற்றும் ‘பிந்தைய’ செலவுகளுக்காக ஹெல்த் பாஸ்போர்ட் அனுகூலத் தொகையில் 5மூ வரை இழப்பீடாகக் கோர முடியும்.
உங்கள் ஹெல்த் பாஸ்போர்ட் அனுகூலத் தொகையானது முழுமையாகத் தீர்ந்துவிட்டால் 100மூ மேலதிக அனுகூலத் தொகையானது காப்புறுதி வருடமொன்றில் மேலதிக கட்டுப்பணமின்றி கிடைக்கப்பெறும்.
(மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான காரணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான முந்தைய காரணங்களுடன் தொடர்புடையதாக இல்லாத பட்சத்தில்)
காப்புறுதித் திட்டத்தில் பட்டியலிடப்பட்ட 136 ஒரு நாள் பராமரிப்பு (ஒரு நாளுக்கும் குறைவான வைத்தியசாலை அனுமதி) மற்றும் அறுவைச் சிகிச்சைகள்.
(24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிப்பது அல்லது வெளிநோயாளர் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் உட்பட)
ஒவ்வொரு வருடமும் உங்கள் இழப்பீட்டுக் கோரலில் முதல் ரூபா.50,000 அல்லது ரூபா.100,000 இனை நீங்களே பொறுப்பேற்றுக் கொள்வதன் மூலம் உங்கள் கட்டுப்பணத்தில் விலைக்கழிவினைப் பெற முடியும்.
உரிமம் பெற்ற ஆம்புலன்ஸ் சேவைகளின் செலவு உங்கள் ஹெல்த் பாஸ்போர்ட் அனுகூலத் தொகையில், 2% வரை காப்பீடு செய்யப்படும்.
நீங்கள் பணம் செலுத்தாத நோயாளர் அறையில் (அரசு மருத்துவமனை) அனுமதிக்கப்படும் போது உங்களின் ஹெல்த் பாஸ்போர்ட் அனுகூலத் தொகையில் 1மூ என ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூபா.25,000 ரூபாய் வரை செலுத்தப்படும்.
ழூநியதிகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும். மேலும் விவரங்களுக்கு உங்கள் யுஐயு வெல்த் பிளேனர் அல்லது நிதியியல் திட்டமிடல் அதிகாரியிடம் வினவுங்கள்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது உங்களின் ஹெல்த் பாஸ்போர்ட் அனுகூலத் தொகை மூலமாக உங்கள் நன்கொடையாளரின் வைத்தியசாலை அனுமதிச் செலவினைக் காப்பிட முடியும்.
வைத்தியசாலை அனுமதிக் கட்டணங்கள் வைத்தியசாலை அனுமதி ஒன்றின் போது அதிகபட்சம் ரூபா.5.000 வரை காப்பிடப்படும்.
உங்கள் ஹெல்த் பாஸ்போர்ட் அனுகூலத் தொகையில் 20% இனை செயற்கை உடல் உறுப்பு பொருத்துதல் மற்றும் இணைத்தலுக்காகக் இழப்பீடாகக் கோரலாம்.
உங்களுக்கு மருத்துவ ரீதியாகத் தேவைப்படும் பல் சிகிச்சைகள் ரூபா.50,000 வரை காப்பீடு செய்யப்படும்.
உங்கள் ஹெல்த் பாஸ்போர்ட் அனுகூலத் தொகையில் 5% அரசாங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலைகளில் வைத்தியசாலை அனுமதிக்கான வைத்தியச் செலவுகளுக்காகத் திருப்பிச் செலுத்தப்படக் கூடியதாக இருக்கும்.
ஒவ்வொரு 2 இழப்பீடு கோரப்படாத காப்புறுதி ஆண்டிற்குப் பின்னர் யுஐயு இனால் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமனைகளில் உங்கள் உடல்நலப் பரிசோதனைக்காக உங்களின் ஹெல்த் பாஸ்போர்ட் அனுகூலத் தொகையில் 1% இனை இழப்பீடாகக் கோர முடியும்.
அதிகபட்சம் 100% வரை ஒவ்வொரு இழப்பீடு கோரப்படாத காப்புறுதி ஆண்டிற்காக 25% இனால் உங்களின் ஹெல்த் பாஸ்போர்ட் அனுகூலத் தொகை அதிகரிக்கும்.
காப்புறுதி செய்யப்பட்டவர் காப்புறுதியின் உரிமையாளர் அல்லாத பட்சத்தில் காப்புறுதி திட்டத்தால் வழங்கப்படும் அனுகூலங்கள் காப்புறுதி உரிமையாளருக்கே ஏற்புடையதாக இருக்கும்இ எனினும் காப்புறுதியானது காப்புறுதி செய்யப்பட்டவருக்கு ஏற்புடையதாக இருக்கும். இவ் ஆவணம் விளக்க நோக்கங்களுக்காக மாத்திரமேஇ இக்காப்புறுதி திட்டத்துடன் தொடHபுடைய முழுமையான விபரங்களைஇ தெரிந்து கொள்ள தயவூ செய்து காப்புறுதி திட்ட ஆவணத்தை பார்க்கவூம்.
ங்கள் பெற்றுக் கொண்ட தினத்தில் இருந்து 21 தினங்களுக்குள் இதனை எமக்கு திருப்பி அனுப்பி காப்புறுதியை இரத்து செய்து கொள்ள முடியூம். உங்கள் காப்புறுதியூடன் தொடர்புடைய செலவினங்களை கழித்து உங்கள் கட்டுப்பணத்தின் மிகுதியை நாம் உங்களுக்கு செலுத்துவோம்.
காப்புறுதியின் முதலாவது ஆண்டில் காப்புறுதி செய்யப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டால்
• உங்கள் காப்புறுதியூடன் தொடர்புடைய செலவினங்களை கழித்து நீங்கள் செலுத்திய கட்டுப்பணத்தின் மிகுதியை நாம் உங்களுக்கு செலுத்துவோம்.
அல்லது
• காப்புறுதி மூன்றாவது நபருக்கு சார்ப்பு படுத்தப்பட்டிருந்தால்இ காப்பீட்டிற்கு செலுத்திய தொகை பெற்றுக்கொள்ள வேறு வழிகள் இல்லை என நிருபித்தால் கொடுப்பனவை அவருக்கு செலுத்துவோம். (உங்கள் மரணத்திற்கு செலுத்தும் தொகையை விட அதிகரிக்காது)
யூத்தம்இ ஆக்கிரமிப்புஇ வெளிநாட்டு படைநடவடிக்கைஇ யூத்த முற்றுகைஇ சிவில் யூத்தம்இ கலவரம்இ வேலை நிறுத்தம்இ சிவில் அமைதியின்மைஇ சிவில் எழுச்சி போராட்டம்இ இராணுவ எழுச்சிஇ கலகம்இ புரட்சிஇ அரசாங்கத்தை அகற்றும் நோக்கில் செயல்படும் ஏதேனும் தீவிரவாத அல்லது வன்முறையூடன் தொடர்பு பட்ட அமைப்புகளின் செயற்பாடுகள் காரணமாக காப்புறுதி செய்யப்பட்டவரின் மரணம் சம்பவித்தால் மாத்திரமே நாம் கையளிப்பு பெறுமதியை செலுத்துவோம்.
(யூஐனுளு) அல்லது (Hஐஏ) ஆகிய நோய் தொற்று காரணமாக மரணம் ஏற்பட்டால் மரணம் ஏற்பட்டதாக அறிவிப்பு பெறும் திகத்திற்கான சுகாதார நிதி மிகுதியை மாத்திரமே செலுத்துவோம்.
முதல் மூன்று காப்புறுதி ஆண்டில் உங்கள் கட்டுப்பணத்தை குறித்த திகதியில் செலுத்தா விடின் கட்டுப்பணம் செலுத்த 30 நாட்கள் சலுகை காலம் பெறுவீர்கள்.
காப்புறுதி ஆரம்பமாகிய பின்னர் மேலதிக சுகாதார ஆவரணங்களை அனுபவிக்க 03 மாத காத்திருப்பு காலம் காணப்படும்.
நிறுவனத்தால் வருடாந்தம் அறிவிப்பு செய்யப்படும் விகிதம் முதலீட்டு கணக்கில் பங்குலாபத்தை வரவூ வைக்க பயன்படுத்தப்படும். முந்தைய ஆண்டிற்குறிய வருடாந்த பங்குலாப விகிதம் நடைமுறை ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் அறிவிக்கப்படும். சுகாதார நிதி மிகுதியை அடிப்படையாக கொண்டு கணிக்கப்படும் எந்தவொரு அனுகூலத்திற்கும் நிறுவனம் அறிவிப்பு செய்யூம் உத்தரவாத பங்குலாப விகிதம் அடுத்த ஆண்டின் வருடாந்த பங்குலாப அறிவிப்பு செய்யப்படும் வரை பயன்படுத்தப்படும். அடுத்த வருடத்திற்கான உத்தரவாத வருடாந்த பங்குலாபம் ஆண்டின் இறுதி 03 மாதங்களில் அறிவிக்கப்படும்.
உங்கள் கொள்கை சரண்டர் மதிப்பைப் பெற்ற பிறகு நீங்கள் முதலீட்டுக் கணக்கு இருப்பு 15% வரை எடுத்துக்கொள்ளலாம்.