சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
21/01/2022
பொருளாதார ரீதியாக சாவலான மற்றும் அடிக்கடி மாறக் கூடிய ஒரு சூழலில் நாங்கள் வாழ்கின்றோம்.. இந்த தொடர்ச்சியான தேய்மானம் மற்றும் ஏற்ற இறக்கங்களின் காரணமாக பாரம்பரிய முறைகளான சேமிப்பு, நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்தல் என்பன சிறந்த முதலீட்டு முறைகளான இனிமேல் அமையப் போவதில்லை. எனவே தான் ஓய்வு கால திட்டமிடல் அனைவரினதும் எதிர்காலத்திற்கு மிக முக்கியமானதாகும் - அதனை எவ்வளவு சீக்கிரம் நீங்கள் ஆரம்பிப்பீர்களோ அவ்வளது சீக்கிரம் நீண்ட கால பயன்கள் மற்றும் மன நிம்மதியை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.
ஓய்வு கால திட்டமிடலை காலம் கடந்த ஞானம் போல் பின்னைய காலத்தில் சிந்திக்க கூடாது – சிலர் ஓய்வு காலத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளாதப் படியினால் தங்களது ஓய்வு பெறும் காலம் வரையில் ஓய்வுதிய திட்டத்தை திட்டமிடுவதிலேயே தங்களுடைய ஓய்வு காலத்தை அடைகின்றனர். அவ்வாறான சூழ்நிலையில் உங்களது வேலை ஆண்டுகள் முடிவடையும் போது நீங்கள் பொருளாதார தட்டுப்பாடுகளால் பாதிக்கப்படக் கூடியவர்களாக ஆகிவிடுவீர்கள்.
பொருளாதார ரீதியான பாதுகாப்பு என்பது உங்கள் ஓய்வு காலத்திற்கான திட்டமிடலில் போதுமான கவனம் செலுத்துவதிலிருந்து தொடங்குகிறது. இலங்கை வயது முதிர்பவர்களை மக்கள் தொகையாக கொண்டுள்ள நாடாகும் அதாவது ஓய்வு காலமானது பின்னைய வருடங்களில் பொருளாதாரத்திற்கு பாதுகாப்பும், பெறுமதியும் மற்றும் பயன்களை சேர்க்கும் விதத்தில் சிந்திக்கப்பட வேண்டும்.
பொருளாதார ரீதியாக பாதுகாப்பான நபர்கள், தங்கள் வாழ்வின் அந்திம காலங்களில் நிதி இஸ்தீர தன்மை மற்றும் பாதுகாப்பை நோக்கிய சரியான நடவடிக்கைகளை எடுப்பதன் முக்கியத்துவத்தை புரிந்துக் கொள்கின்றனர். ஓய்வு பெறும் காலம் வரையில் அதிக வருடங்களை தனதாக்கி கொள்ளும் ஒரு உறுதியான திட்டத்துடன் அவர்கள் ஆரம்பிக்கின்றனர். ஓய்வு பெறும் காலத்தில் பயணம் மற்றும் பொழுது போக்குகளில் ஈடுபடுவது போன்ற வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் மதிப்பையும் சேர்க்கும் மற்ற விடயங்களையும் நீங்கள் தெரிவு செய்யலாம்.
நம்மில் பலர் சிந்திப்பதை விட ஓய்வு பெறும் காலமானது வெகு விரைவாக எங்களை வந்தடைகிறது. ஒரு பாதுகாப்பான ஓய்வு கால திட்டம் என்பது, நீங்கள் வேலையில் சுறுசுறுப்பாக இருக்கும் போதே தனது ஓய்வு காலத்திற்கான கடின உழைப்பையும் முதலீட்டையும் செயற்படுத்துவதாகும்.
பொருளாதார ரீதியாக பாதுகாப்பான ஓய்வு கால திட்டம் தொடர்பில் நீங்கள் இன்னும் சிந்திக்கவில்லை என்றால், இப்போதே திட்டமிடலை தொடங்கலாம். எங்கள் வேலை ஆண்டுகளுக்கு பின்னரான ஓய்வு கால திட்டமிடலை ஆரம்பிப்பதற்கு நீங்கள் தாமதமாகி விடவில்லை. ஓய்வு பெறும் வயது நெருங்கும் போது முதலீடு செய்வது தொடர்பில் சிந்தனைக்கு அழுத்தம் கொடுக்காமல் முன்கூட்டியே ஆரம்பிப்பது எப்போதுமே சிறப்பானதாகும்.
உங்கள் ஓய்வு காலத்தை பொருளாதார ரீதியான இஸ்தீரத் தன்மையூடன் பேணி பாதுகாப்பதற்கான நேர் மறையான சில படிமுறைகள் இங்கே தரப்படுகின்றன.–
- பாதுகாப்பான ஓய்வு காலத்திற்காக வேலை செய்வதற்கு நீங்கள் பொருளாதாரா ரீதியாக எவ்வளவு பாதுகாப்பாக இருக்கின்றீர்கள் என்பதை புரிந்து கொள்ள உங்களுடைய தற்போதைய நிதி நிலையை மதிப்பாய்வு செய்யவும்.
- பொருளாதார ரீதியாக பாதுகாப்பான ஓய்வுதிய செயல் முறையை உறுதி செய்வதற்கு முதலீடு செய்வதற்கு ஏதுவான பொருளாதார திட்டத்தை தெரிவு செய்யவும்..
- வேகமாக மாறி வரும் பொருளாதாரக் கட்டுப்பாடுகள் மற்றும் சேமிப்பை இயலுமானதாக்காத வருமான மட்டங்கள் தொடர்பில் அவதானமாக இருங்கள்.
- முதலீடு என்று வரும் போது, ஓய்வு காலத்திற்கான உங்கள் முதலீட்டை நிர்வகிப்பதற்கான சரியான நிபுணர்களைத் தெரிவு செய்யவும்..