சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
01/06/2021
புகைப்பிடிக்கும் பழக்கமுள்ள யாருமே இக்கேள்வியை தமது வாழ்க்கையில் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திலாவது கேட்டிருப்பார்கள். இப்பழக்கம் குறித்த உள்விடயங்களை அறிந்துகொள்ள நினைப்பவர்களுக்காக சில முக்கிய தகவல்களை நாம் ஒன்று திரட்டி தந்துள்ளோம். ஆரோக்கியமான, நீடித்த, சிறந்த வாழ்க்கைக்கான சிறப்பான முடிவுகளை மேற்கொள்வதற்கு அனைத்தையும் விட முக்கியமானது அறிவின் சக்தியாகும்.
புகைபிடிப்பது ஏன்?
உளவியல் காரணங்கள்: பொப் கலாசாரம் மற்றும் திறமையான விளம்பரங்களால் தூண்டப்பட்டு கட்டிளம் பருவத்தின் ஆரம்பத்தில் வயது வந்தவர்களாக தம்மை அடையாளப்படுத்தும் நோக்கில் இப் பரீட்சார்த்த முயற்சி வழமையாக நடைபெறுகிறது. அத்துடன் புகைபிடிப்பதை அனுசரிக்கும் பின்புலத்தைக் கொண்டவர்களுக்கு புகைப்பழக்கம் தொற்ற அதிக சாத்தியமுண்டு.
நண்பர்களின் அழுத்தம்: நண்பர்களின் அழுத்தத்துக்கு முகங்கொடுப்பவர்கள் இப்பழக்கத்தைப் பின்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது.
அவதானம் அதிகரித்தல்: 'நிக்கட்டின் ஒரு உள ஆற்றல் செயற்பாட்டுத் தூண்டி என்பதோடு, புதிய பாவனையாளர்களிடையே அவர்களின் எளிய எதிர்வினையாற்றல் நேரத்தை துரிதப்படுத்தி, நீடித்த அவதானம் தேவைப்படும் வேலைகளில் செயற்திறனை அதிகரிக்கிறது.' எனினும் ஒருமுறை தாங்குதிறன் விருத்தியானதும், நீடித்த பாவனையாளர்கள் அதே விதமான அனுபவத்தை தொடர்ந்து பெற மாட்டார்கள்.
மன அழுத்தத்தை நீக்குதல்: சிகரட் தமது மன அழுத்தத்தை குறைப்பதாக புகைபிடிப்பவர்கள் சொல்கிறார்கள். எவ்வாறெனினும், அது நிக்கடினை கைவிடும்போது உடலில் தோன்றும் அறிகுறிகள் மற்றும் தொடர்ச்சியாக புகைப்பதால் கிடைக்கும் திருப்தி உணர்வுடனேயே அதிக தொடர்புடையது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
முக்கிய உண்மைகள்
அனைத்துவித புகையிலை வடிவங்களும் கெடுதியானவை என்பதோடு 50% பயனர்களை கொல்பவை.
ஒவ்வொரு வருடமும் 8 மில்லியனுக்கு மேற்பட்டோர் புகையிலையால் இறக்கின்றனர்
80% க்கு அதிக புகையிலை பாவனையாளர்கள் குறைந்த மற்றும் மத்திய வருமானம் பெறும் நாடுகளில் வசிக்கின்றனர்.
புகைப்பழக்கத்தை கைவிடுவதற்கு உதவி தேவை
மூலம்: உலக சுகாதார ஸ்தாபனம்
புகையிலை ஏன் இவ்வளவு கெடுதியானது?
புகையிலையின் புகை உங்கள் உடல்நலனுக்கு தீங்கான இரசாயனங்களைக் கொண்டுள்ளது
நிக்கட்டின்: நிக்கட்டின் மிகவும் அடிமைப்படுத்தக்கூடிய, மீண்டும் மீண்டும் வேண்டுமென தூண்டக்கூடிய ஒரு பதார்த்தம்.
காபன் மொனொக்சைட்: இந்த நச்சுத்தன்மையான வாயு உங்கள் இரத்தத்தில் ஒட்சிசனுக்கு பதிலாக இடம் மாறுவதோடு அதனால் உங்கள் இதயம் கடுமையாக இயங்கவேண்டி ஏற்படும். அத்துடன் நுரையீரல் சரியாக செயற்படுவதையும் தடுக்கிறது.
தார்: இப்பதார்த்தமே புகைப்பிடிப்பவர்களின் பற்கள் மற்றும் விரல்களில் நிறமாற்றத்திற்கு காரணமாக அமைவதோடு, புற்றுநோயை விளைவிக்கும் துணிக்கைகளை (carcinogens) கொண்டது.
அத்துடன் புகையிலையின் புகை ஏனைய நச்சுத்தன்மையான இரசாயனங்களான பென்சீன், ஆர்சனிக் மற்றும் ஃபோமல்டிஹைட் என்பவற்றையும் உள்ளடக்கியது.
புகைப்பிடித்தல் கிட்டத்தட்ட உங்கள் உடலின் அனைத்து பாகங்களையும் பாதிப்பதோடு நோய்களையும் உருவாகிறது.
புற்றுநோய்: சிகரட்டில் உள்ள நச்சுத்தன்மையான இரசாயனங்களால் கலம் ஒன்றிலுள்ள DNA பாதிப்படைய அல்லது அதில் மாற்றங்கள் ஏற்பட முடியும். இதன்போது கலமானது கட்டுப்பாட்டை மீறி வளர்ச்சி அடைவதோடு புற்றுநோய்க் கட்டிகளை உருவாக்கும். அத்துடன் புகைப்பிடித்தல் நோயெதிர்ப்பு சக்தியைப் பலவீனப்படுத்துவதால் புற்றுநோய் கலங்களை அழிப்பது கடினமானது.
இருதய நோய்கள் மற்றும் பக்கவாதம்: புகைப்பிடித்தல் இருதயம் சார்ந்த நோய்களின் முக்கிய காரணியாகும். அது உங்கள் குருதியிலுள்ள டிரைகிளிசரைட் கொழுப்புக்களை தூண்டுவதுடன் தொடர்புபட்டிருப்பதோடு, நல்ல கொலஸ்ட்ரோலை குறைத்து, குருதியின் ஒட்டும் தன்மையை அதிகரித்து அடைப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பளிக்கிறது. இரத்த நாளங்களுக்குள் காணப்படும் படலத்தின் வளர்ச்சியை அதிகரிப்பதால் இரத்த நாளங்கள் தடித்து குறுகலடைகின்றன.
நுரையீரல் நோய்: புகைப்பிடித்தலானது மார்புச்சளி, ஆஸ்துமா மற்றும் நுரையீரல் புற்று போன்ற பல்வேறு நுரையீரல் நோய்களுக்கு முக்கியக் காரணியாகும். நுரையீரலில் உள்ள காற்றுப்பாதைகள் மற்றும் காற்றுப்பைகள் புகையால் பாதிப்படைவதால் அதன் தொழிற்பாடு பலவீனமடைகிறது.
உள ஆரோக்கியம்: மன உளைச்சல் மற்றும் மன அழுத்த அதிகரிப்பிற்கு புகைப்பிடித்தல் பங்களிப்பு செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகையில் அடங்கியுள்ள இரசாயனங்கள் மூளையில் உள்ள இரசாயனங்களோடு இடைத்தாக்கத்தை ஏற்படுத்தி எதிர்மறையான பக்க விளைவுகளை தோற்றுவிக்கின்றன.
புகைப்பிடித்தலை கைவிடுவதற்கான நடைமுறை ஆலோசனைகள்
மேற்கோள்கள்
1.https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC324461/
3. https://www.who.int/news-room/fact-sheets/detail/tobacco
4. https://www.nhsinform.scot/healthy-living/stopping-smoking/reasons-to-stop/tobacco
6. https://www.cdc.gov/tobacco/basic_information/health_effects/cancer/index.htm
7.https://www.cdc.gov/tobacco/basic_information/health_effects/heart_disease/index.htm
8. https://www.nhlbi.nih.gov/health-topics/copd
9. https://www.nhs.uk/live-well/quit-smoking/stopping-smoking-mental-health-benefits/
10. https://www.nhs.uk/live-well/quit-smoking/10-self-help-tips-to-stop-smoking/