சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
Colombo, 31/07/2018
ஸ்ட்ரோக் என்பது மூளைக்கு இரத்தம் வழங்கும் ஒரு இரத்த நாளம் தடைப்படுவது அல்லது திடீரென்று வெடிப்பதை குறிக்கும் ஒரு மருத்துவக் நிலையாகும். பக்கவாதம் ஏற்படுவதற்கான உடனடி அறிகுறிகள் பின்வருமாறு:
1. உடலின் ஒரு பக்கத்தில் பக்கவாதம் - கை மற்றும் கால்
2. உடலின் ஒரு புறத்தில் உணர்வின்மை அனுபவம்
3. பேச்சு குறைபாடுகள்
4. முகத்தில் ஒரு பக்கத்தில் முக தசைகள் கட்டுப்பாட்டு இல்லாமை
5. வாந்திää தலைச்சுற்று மற்றும் ஏற்றத்தாழ்வு
6. விழுங்குவதில் சிரமம்
7. ஒரு கண்ணில் பார்வைக்குறைப்பாடு
பக்கவாம் வெறும் கைகள் மற்றும் கால்களுக்கு ஏற்படும் முடக்கமல்ல என்பதை நீங்கள் அவதானிக்கலாம்.
எனவேää நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவிடம் மேலே குறிப்பிட்ட அறிகுறிகளில் ஏதாவது காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து செல்வது நல்லது. ஒரு திடீர் தாக்கத்தின் தாக்கத்தை குறைக்க உடனடி நோயறிதல் மற்றும் சிகிச்சை பெறுவது அவசியம். வழக்கமாக மேற்கொள்ளப்படும் ஊவு ஸ்கேன் சோதனைகள்; மற்றும் பிற பல்வேறு சோதனைகள் இந்த சு10ழ்நிலைக்கு வழிவகுக்கும் காரணங்கள் அடையாளம் காணும்.
வயதான மக்களிடையே அங்கவீனத்திற்கு வழிவகுக்கும் முன்னணி காரணி பக்கவாதம் ஆகும். 15 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உலகளவில் பக்கவாதத்தால் பாதிப்படைவதுடன் ஒரு முறை ஏற்பட்டால் கிட்டத்தட்ட 5 மில்லியன் மரணங்கள் மற்றும் மற்றொரு 5 மில்லியன் நிரந்தரமாக முடக்கப்படுகின்றனர். ஒருமுறை பக்கவாதம் ஏற்பட்;ட பின்னர் அதிலிருந்து மீட்பதற்கு நீண்டகாலம் செல்லும்.
ஒரு ஸ்ட்ரோக்கிற்கான முன்னணி காரணங்களைக் கருத்தில் கொள்ளும்போதுää 2 வகையான காரணங்கள் உண்டு - கட்டுப்படுத்தக்கூடிய காரணிகள்ää கட்டுப்படுத்த முடியாத காரணிகள். வயதானää இனம்ää பாலினம்ää மரபியல் ஆகியவை கட்டுப்படுத்த முடியாத காரணிகளுக்கான எடுத்துக்காட்டுகள் ஆகும். நீரிழிவுää உயர் இரத்த அழுத்தம்ää அதிக கொழுப்புää புகைபிடித்தல்ää அதிக குடிப்பழக்கம்ää உடல் பருமன்ää உடற்பயிற்சியின் பற்றாக்குறை ஆகியவை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு பக்கவாத காரணிகள் ஆகும்;.
பக்கவாதம் தடுக்கக்கூடிய நோய் என்பதுடன்; அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதில் தீவிரத்தன்மை மற்றும் தாக்கத்தை கருத்தில் கொண்டு முன்னுரிமை அளிக்க வேண்டும். இப்போது பக்கவாதத்தை தடுக்க உதவுவதற்கு நீங்கள் எடுக்கக்கூடிய சில முக்கிய படிகளை இப்போது ஆராய்வோம்.
விரிவான 02 பிரிவுகளின் கீழ் தடுப்பு நடவடிக்கைகளை பார்ப்போம்
1. பக்கவாதத்தை ஏற்படுத்தும் பிற நோய்களை தடுத்தல்
2. ஆரோக்கியமாக வாழ்விற்கான பழக்கங்களை கடைபிடித்தல்
நீரிழிவுää உயர் இரத்த அழுத்தம்ää அதிக கொழுப்புää இதய நோய் என்பன பக்கவாதம் ஏற்படுத்தும் முன்னணி காரணியாக கருதப்படும் மருத்துவ நிலைகள் ஆகும்.
எனவேää ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாதிப்பை கொண்டுள்ளவர்கள்ääஇந்த நிலைமைகளுக்கு பின்னால் உள்ள மூல காரணங்களைக் கண்டறியவும்ää அதற்கேற்ப சிகிச்சை அளிப்பதற்கும் சிறப்பு மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்ää மேலும் அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் மருந்துகளை எடுத்துக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்ää மருத்துவ பரிசோதனைகள் வழக்கமாகää மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கம் தொடர வேண்டும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதுää பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்துக்களைத் எதிர் கொள்ள உதவுவது மட்டுமல்லாது பிற நோய்கள் மற்றும் இதய நோய்களின் விளைவுகளை தடுக்க அல்லது குறைக்க உதவுகிறது.
நாம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேசும்போதுää பின்வரும் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
1. ஆரோக்கியமான உணவு
2. ஆரோக்கியமான எடையை பராமரித்தல்
3. வழக்கமான பயிற்சிகளில் ஈடுபடுதல்
4. புகைத்தல் தவிர்ப்பது
5. மதுபானம் உட்கொள்ளலை தவிர்த்தல் அல்லது குறைத்தல்
மேலுள்ள விடயங்களை சற்று விரிவாக ஆராய்வோம்.
ஒரு ஆரோக்கியமான உணவைத் தொடர்ந்தால்ää நீங்கள் அதிகமான பழங்கள்ää காய்கறிää முழு தானியங்கள் மற்றும் பிற உணவுகளை அதிகம் சாப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும். கொழுப்பு உணவுகள் மற்றும் உப்பு நுகர்வு குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுங்கள்.
உப்பின் பரிந்துரைக்கப்பட்ட அதிகபட்ச தினசரி அளவு 06 கிராம் (சுமார் ஒரு தேக்கரண்டி அளவு) தெரியுமா? இந்த பரிந்துரைக்கப்பட்ட மட்டங்களில் உப்பு நுகர்வை பராமரித்தல் உங்கள் உடலில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். இதற்கிடையில் உயர் ஃபைபர் உள்ளடக்கம் கொண்ட உணவுகள் உங்கள் உடல் கொலஸ்டிரால் அளவுகளை கட்டுப்படுத்த உதவும்.
சுறுசுறுப்பான மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதால் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும்ää உங்கள் கொழுப்பை குறைக்கவும்ää இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தவும் இது உதவும். வேகமான நடைää ஜாகிங்ää நீச்சல் ஆகியவற்றில் எளிதாக ஈடுபடலாம் ஒரு நாளைக்கு 2 ½ மணிநேரத்திற்கு (குறைந்தபட்சம் 30 நிமிடங்கள்) உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது தொடர்ச்சியாக 30 நிமிடங்களுக்கு அவர்கள் 30 நிமிடங்களை மொத்தம் 10 நிமிடங்களில் 3 பிரிவுகளாக பிரிப்பதன் மூலம் ஒட்டுமொத்தமாக அடைய முயற்சி செய்ய வேண்டும்!
அதிகமான ஆல்கஹால் இரத்த அழுத்தம்ää உங்கள் இதயத்தில் ஒழுங்கற்ற தன்மையை உருவாக்கிää எடையை அதிகரித்தல போன்ற தீங்கு விளைவிக்கும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இவை அனைத்தும் பக்கவாதத்தின் முக்கிய காரணங்கள்.
இறுதியாகää பக்கவாதம் ஏற்பட்ட பலர் நீண்டகால குறைபாடுகளுடன் மற்றும் மருத்துவச் செலவுகளை அதிகரித்ததன் காரணமாக அதிகமான நிதிசார்ந்த அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருங்கள். புனர்வாழ்வு பெறுதல் நீண்டதாகவும் மற்றும் செலவுமிக்கதாகவும் உள்ளதுää பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மட்டுமல்லாமல் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் ஒரு சுமையாகும். பக்கவாதம் மற்றும் அதை தொடர்ந்த சிக்கல்கள் துரதிருஷ்டவசமாக ஒரு சுருக்கமான ஆயுட்காலம் ஏற்படுத்தலாம்.
மேலே உள்ள அனைத்தையும் கருத்தில் கொண்டு நீங்கள் பக்கவாதம் ஏற்படுவதை தடுப்பதற்கு முக்கிய முன்னுரிமை வழங்குவீர்கள் என உறுதியாக நம்புகிறேன். இதனால் நீங்கள் நேசிக்கும் ஒரு நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை அனுபவிக்க முடியும்!