சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
01/06/2021
நாம் எதிர்வு கூறமுடியாத ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். கொவிட் 19 ஆனது உலகை மோசமாகத் தாக்கி, அனைவரது வாழ்வையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இத் தொற்றுநோயோடு 2020 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்தாலும், எம்மில் அநேகமானோர் இந்த நிச்சயமற்ற நிலைமையை எதிர்கொள்வதற்கான வழிகளை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நாம் தற்போது முகங்கொடுக்கும் சில உடனடிப் பிரச்சினைகளுக்கு சிறப்பான அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்ள உளவியல் நிபுணரான குணரத்னே அமரசேகர அவர்களை நாடினோம். அதன் மூலமாக நீங்கள் எதிர்காலத்துக்காக சிறந்த முறையில் தயாராக முடிவதோடு ஆரோக்கியமான, நீடித்த, அதிசிறந்த வாழ்க்கையில் அவதானத்தை செலுத்தலாம்.
1. இப் பெருந்தொற்று கிட்டத்தட்ட எமது வாழ்க்கையின் ஒவ்வொரு வடிவத்திலும் நிச்சயமற்ற நிலைமையை உருவாக்கியுள்ளது. அனுமானிக்க முடியாத இந்த நிலைக்கு நாம் எவ்வாறு முகம் கொடுப்பது, மற்றும் அது ஏற்படுத்தும் பொதுவான மன அழுத்தம் மற்றும் பாதிப்பை எவ்வாறு சமாளிப்பது?
நாம் ஒன்றைக் குறித்து அறியாமலிருப்பது ஒரு அசௌகரியமான அனுபவம். மனிதர்கள் என்ற வகையில், நாம் இயற்கையாகவே ஆர்வம் உள்ளவர்கள். நாம் புரிந்துகொள்ள, உத்தேசிக்க மற்றும் கட்டுப்படுத்த நினைப்பவர்கள். அதுவே நாம் கற்றுக்கொள்ளவும் பாதுகாப்பாக இருப்பதற்கும் உதவுகிறது. நிச்சயமற்ற நிலைமையானது அபாயகரமானதாக தோன்றலாம், ஏனெனில் என்ன நடக்கும் என்பதை எம்மால் அனுமானிக்க முடியாது.
இக் காலத்தில் நிச்சயமற்ற நிலைமைக்கு முகங்கொடுப்பது அசௌகரியமாகத் தோன்றுவது மிக இயல்பானது என்றாலும், சிலருக்கு அது தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாகவும் இருக்கலாம். முன்னறியாத அனுபவத்துக்கு முகங்கொடுக்க கஷ்டப்படுவது, எமது மன ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதித்து தொடர்ந்து எமது உடல் ஆரோக்கியத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
நிச்சயமற்ற நிலைமை உங்களை அபாயகரமானதாக உணரச்செய்தால் அது கவலையையும் மன உளைச்சலையும் அதிகரிக்கும். அத்துடன் வாழ்க்கை எமக்கு முன்வைக்கும் மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து வாழ முடியாது என்று நாம் நினைத்தால் தோற்றதாக மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக உணர்வோம் ஏனெனில் நிச்சயமற்ற நிலைமையின் அனுபவத்துக்கு ஈடுகொடுத்து எம்மால்; செயற்பட முடியாவிட்டால் எமது மனம் கவலையடைந்து, அச்சுறுத்தும் எண்ணங்களை உருவாக்குகிறது. உதாரணமாக நான் சுகயீனமாக உணர்ந்தால், இந்த மருத்துவ உலகம் கொவிட் 19 க்கு தீர்வொன்றைக் கண்டுபிடிக்குமா, எனது நண்பர்களுடன் மறுபடி என்னால் வெளியில் செல்ல முடியுமா, எமக்கு போதுமானளவு உணவும் விநியோகமும் கிடைக்குமா என எண்ணங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். எமக்குத் தெரியாத விடயங்கள் எனது கற்பனையில் மோசமானதாக சித்தரிக்கப்படும். எமக்குத் தெரியாத விடயத்துடன் இணைந்து செயற்பட முடியாத சந்தர்ப்பத்தில் எமது மனநிலை மிகவும் எதிர்மறையானதாக இருப்பதை உணர முடியும்.
மனித மனமானது பாதுகாப்புக்காக வடிவமைக்கப்பட்டது. அது கணத்தாக்கத்தால் அல்லது சுயவுணர்வு எண்ணத்தால் செயற்;படலாம். அதிகமான சந்தர்ப்பங்களில் மன அழுத்தம் மற்றும் உளைச்சல் என்பன மனநிலை காரணமாகவே உருவாகின்றது. நாம் சுய உணர்வுடன் அல்லது சுயவுணர்வின்றி எமது மனங்களுக்கு மீண்டும் மீண்டும் வழங்கும் எண்ணங்களை சொல்லலாம். உதாரணமாக, உங்களை நோக்கி ஒரு கார் வேகமாக வந்தால் நீங்கள் எந்தவித இரண்டாம் யோசனையுமின்றி தன்னிச்சையாக ஒதுங்காமல் இருப்பீர்களா? சூடான எதனையும் அறியாமல் தொட்டுவிட்டால் அதிலிருந்து உங்களது கைகளை மிக விரைவாக எடுக்காமல் இருப்பீர்களா? இது தன்னிச்சையான பாதுகாப்பு எனப்படுகிறது. இது உங்களது முன் அனுபவத்தைத் தூண்டும் எண்ணத்தால் உருவாகி, உங்களது முழுமையான இருப்பும் ஒரு தடுப்பு அல்லது பாதுகாப்பு முறைமைக்கு மாற்றம் பெறுகிறது. அதனால் உங்கள் மூளையானது கோர்டிசோல் மற்றும் அட்ரினலின் ஆகிய ஹோர்மோன்களை சுரந்து உங்களைப் பாதுகாப்பாக செயல்பட வைக்கிறது.
பயமுறுத்தும் எண்ணங்களாலேயே மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் என்பன உருவாகின்றன. மனிதர்களான நாம் முன்னறியாத விடயங்கள் குறித்து அச்சம் கொண்டவர்கள். சிந்தித்தல் என்பது மனிதனாக இருப்பதன் ஒரு பகுதியாகும். அது எமக்கு வழங்கப்பட்ட ஒரு கொடை என்பதோடு, அதைக்கொண்டு நாம் சிந்திக்கும் முறைகளை மாற்றி எம்மால் தெரிவுகளை மேற்கொள்ள முடியும். நாம் நிச்சயமற்ற நிலைமையை ஏற்றுக்கொள்வதற்கு எம்மை ஊக்குவித்து அதனை ஒரு பிரச்சனையாக பார்க்காவிட்டால், எமது சிந்தனையாலும் செயல்களாலும் நிச்சயமற்ற நிலைமைக்கு சிறந்த முறையில் முகங்கொடுக்க முடியும். இதனை எனது கிளினிக் வரும் நோயாளிகளிடம் அடிக்கடி அவதானித்திருக்கிறேன்,
2. எமது தொழிற்பாட்டு உள ஆரோக்கியம் எந்த அளவு முக்கியமானது?
நீங்கள் எப்போதாவது உணர்ச்சிகளின் வலிமையை அனுபவித்திருக்கிறீர்களா? அது உங்கள் சுய உணர்வைத் தூண்டுகிறது. உணர்ச்சிகளால் உங்களை மிகப் பலவீனமாக ஆக்க முடியும். அதனால்தான் மனிதன் ஒருவனாகத் தொழிற்படுவதற்கு உள ஆரோக்கியம் மிக முக்கியமானது.
எம்மால் உணர அல்லது காண முடியாததால் நாம் உள ஆரோக்கியத்தை பொதுவாகவே அலட்சியம் செய்வதுண்டு. நாம் உடல் ஆரோக்கியம் குறித்தே அதிக அவதானத்தை செலுத்துகிறோம் ஏனெனில் எம்மால் ஒரு வலியை உடனடியாக உணர முடிவதோடு ஒரு காயத்தின் தீவிரத்தை அவதானிக்க முடிகிறது. உதாரணமாக, உங்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டால் நீங்கள் ஒரு மருத்துவரிடம் செல்வீர்கள் அல்லது உங்கள் கையில் ஒரு காயம் இருந்தால் அதனைச் சுத்தப்படுத்தி, சீழ் நீக்கி, மருந்து இடுவீர்கள். அதன் மூலமாக வலி குறைந்து குணமடைய ஆரம்பிக்கும்.
ஆனால் உங்கள் உள ஆரோக்கியத்துக்கு என்ன செய்கிறீர்கள்? அது பொதுவாக அலட்சியம் செய்யப்படுகிறது.
உங்கள் உள ஆரோக்கியமானது உடல் ஆரோக்கியத்தை விடவும் மிகவும் சக்தி மிக்கது. எண்ணங்களினதும் உணர்ச்சிகளினதும் சக்தியே உங்கள் முழுமையான இருப்பை இயக்குகிறது. உடல் மற்றும் உள ஆரோக்கியம் என்பன சைக்கிள் ஒன்றின் இரு சக்கரங்கள் போன்றவை. உங்கள் உடல் சீராக இயங்குவதற்கு அவை இரண்டும் சீராக செயற்பட வேண்டும். ஒரு மனக் காயமானது கண்ணுக்;கு புலானாகவிட்டாலும்; சிகிச்சை அளிக்காவிட்டால் பாதிப்பை ஏற்படுத்தலாம். அவை உடல் ரீதியாக வெளிப்படுத்தப்பட்டால் மாத்திரமே தெரிய வருகின்றன. உதாரணமாக உங்களால் சாப்பிட அல்லது தூங்க முடியாமல் இருத்தல், மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பதன் வெளிப்பாடாகும். உங்கள் மனமானது பலவீனம் அடைந்திருந்தால் அல்லது காயப்பட்டிருந்தால் மாத்திரமே இவ் அறிகுறிகள் தோன்றுகின்றன.
உங்கள் உடலின் அனைத்து முக்கிய தொழிற்பாடுகளையும் இயக்குவதால், அதாவது உடலுக்கான கட்டளைகளை உங்கள் மனமே வழங்குவதால் உங்கள் முழு உடலையும் சுகயீனத்துக்கு உள்ளாக்கும் வலிமையை மனம் கொண்டுள்ளது. அதுவே உள ஆரோக்கியத்தின் வலிமை மற்றும் முக்கியத்துவம் ஆகும்.
3. அளவுக்திகமான மன அழுத்தத்தின் பாதிப்பு ஆரம்பத்தில் சிறிதாக இருந்தாலும் தொடர்ந்து பாரிய பாதிப்பை எமக்கும் எம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் ஏற்படுத்தலாம். உணர்ச்சி வசப்பட்டிருக்கும்போது அந்த எதிர்மறை எண்ணங்களை மற்றையவர்களுக்கு பரப்புவதில் இருந்து தடுத்துக் கொள்வது மற்றும் அத்துடன் மற்றவர்களின் எதிர்மறையான எண்ணங்களிலிருந்து எம்மை நாம் பாதுகாத்துக் கொள்வது எப்படி?
உணர்ச்சி வசப்படுதல் அல்லது மன அழுத்தத்துக்கு உள்ளாதல் என்பது எதிர்மறையான எண்ணம், அச்சம் ஒன்றின் விளைவாகும். அதிகமான சந்தர்ப்பங்களில் பயமானது அந்த உணர்வைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக வெளிச்சூழலுக்கு கோபமாக, எரிச்சலாக, அச்சுறுத்தலாக (யாரேனும் ஒருவர், ஒரு விடயம், ஒரு விலங்கு போன்றன) வெளிப்படுத்தப்படுகிறது.
நீங்கள் என்ன செய்யலாம்:
4. எமது குடும்பத்தினர் அல்லது யாரேனும் ஒரு நண்பர் உள ரீதியாக உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதை எவ்வாறு அறிவது மற்றும் அவர்களுக்கு உதவ என்ன செய்ய வேண்டும்?
உங்களது குடும்ப அங்கத்தவர் அல்லது நண்பர் ஒருவர் உள ரீதியாக அல்லது உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் முதலாவதாக அவதானிக்கும் விடயம் அவர் தனது நடத்தைக்கு புறம்பாக நடந்து கொள்வார், அவர் வழமையான ஆளாக இருக்கமாட்டார்.
யாரேனும் ஒரு தனிப்பட்ட நபர் வழமைக்கு மாறாக நடந்து கொண்டால், உதாரணமாக, அதிகளவு அல்லது மிகக் குறைவாக சாப்பிட்டால், அதிகம் தூங்கினால் அல்லது தூங்குவதில் பிரச்சனை காணப்பட்டால், தம்மை தனிமைப்படுத்திக் கொண்டால் அல்லது வழமைக்கு மாறாக சோம்பலாக உணர்ந்தால், பலவீனமாக அல்லது அதிக உற்சாகமாக இருந்தால், எரிச்சலாக, கோபமாக, கவலையாக இருந்தால் அல்லது வழமைக்கு மாறாக அடிக்கடி பாதிக்கப்பட்டால் அல்லது எந்தவித உடல் விபத்துக்களும் இல்லாமல் உடல் வலி என முறையிட்டால் இவை உளரீதியான அல்லது உணர்வு ரீதியான பிரச்சினையின் அறிகுறிகளாக இருக்கலாம்.
அத் தருணத்தில் பெற்றுத்தரக்கூடிய மிகச்சிறந்த உளரீதியான முதலுதவி யாதெனில், மேற்குறிப்பிட்ட அல்லது வழமைக்கு மாறான ஏதேனும் அறிகுறிகள் காணப்படுகின்றனவா என்று கண்காணிப்பதாகும். அவர் எப்படி உணர்கிறார் என்பது பற்றி சௌகரியமான வேகத்திலும், நேர இடைவெளியிலும் வெளிச்சொல்வதற்கு அவரை அனுமதியுங்கள். அவர் எவ்வகையான பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளார்;, அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது என்ன என்பது பற்றி அவர் வெளிப்படுத்த உதவுங்கள். அந்த அறிகுறிகள் தொடர்ந்தால், அவருக்கு தொழில்ரீதியான உள ஆரோக்கிய சிகிச்சையாளர் ஒருவரை பரிந்துரை செய்யுங்கள்.
5. கொவிட் 19 ஒவ்வொரு அலையாக தொடர்ந்து வந்து எமது வாழ்க்கையை பாதிப்பதோடு, முடிவு குறித்து எவ்வித அறிகுறியும் தென்படாதபோது நாம் ஊக்கத்துடன் இருப்பதற்கும் எமது வாழ்க்கையின் இலட்சியங்கள் மீது தொடர்ந்து அவதானத்தை செலுத்துவதற்கும் என்ன செய்யலாம்?
மனிதர்களுக்கு ஞாபகம் மற்றும் கற்பனை போன்ற மனரீதியான ஆற்றல்கள் தரப்பட்டிருக்கின்றன. அது பழைய அனுபவங்கள் சேமிக்கப்பட்ட ஞாபகத்தில் இருந்து தேவையான விடயங்களை எடுத்துக்கொள்வதற்கும், எதிர்காலத்தை கற்பனை செய்வதற்குமே ஆகும். இந்த அதிவிசேட மானிட சிறப்பியல்பின் நோக்கம் மனிதனின் ஆற்றலை மேம்படுத்துவது, எமது நாளாந்த வாழ்க்கைக்கு சந்தோஷத்தை சேர்த்துக்கொள்வது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் எமது துன்பியல் நிகழ்வுகளில் இருந்தே ஞாபகங்களை மீட்டுகிறோம் அத்துடன் எதிர்காலம் குறித்து மிக மோசமான கற்பனைகளையும் உருவாக்கிக் கொள்கிறோம்.
கொவிட் 19 ஒவ்வொரு அலையாக எம்மைத் தாக்கும்போது அந்த ஞாபகங்கள் எமக்கு சொல்லித் தருபவை என்ன? எவ்வாறு எம்மை காத்துக்கொள்ள வேண்டும் என்பதே அது. தனிப்பட்ட சுகாதாரம், சமூக இடைவெளி, தடுப்பூசிகள், திருத்தமான முகக்கவசப் பயன்பாடு மற்றும் செனிடைசேஷன் என்பன. நாம் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக கடந்த காலத்தின் பெறுமதிகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். எதுவும் தொடர்ந்து நிலைத்திருக்கப் போவதில்லை என்பதையே வரலாறு எமக்கு சொல்கிறது. அனைத்தும் கடந்து போகும். இவ் உண்மையை நம்புவது எதிர்காலம் குறித்து சிறந்த சாத்தியங்களை காணுவதற்கும் தொடர்ந்து கவனத்துடன் இருப்பதற்கும் உதவுகிறது.
கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையில் அல்லாடிக் கொண்டிருப்பது எவ்விதத்திலும் உதவாது ஏனெனில் மாற்றம் என்பது நிகழ்காலத்தில் மாத்திரமே நடைபெற முடியும். இக்கணம் நடந்து கொண்டிருப்பது மாத்திரமே எமது கட்டுப்பாட்டில் உள்ளது. ஆகவே நிகழ்தருணத்தில் அதிக கவனத்துடன் இருந்து உங்கள் வாழ்க்கையின் நோக்கங்களை நோக்கி செயற்படத் தொடங்குங்கள். இத் தொற்றுநோயானது நீங்கள் கடந்து வரவேண்டிய ஒரு பனிமூட்டம் ஆகும். இப்பொழுது அது மங்கலாகத் தோன்றலாம் எனினும் இது கடந்து சென்று பாதை தெளிவாகும். அதனால் இக்கணத்தில் அதிக அவதானத்துடன் இருங்கள்.
6. வீட்டில் இருந்தே வேலை செய்வது புதிய இயல்பு நிலையின் ஒரு பகுதி, அது மிகவும் சவால் மிக்கதாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கலாம். அதனை செயற்திறன் மிக்கதாக மாற்றுவது அத்துடன் தொழிலுக்கும் வாழ்க்கைக்கு இடையில் சமநிலையைப் பேணுவது எவ்வாறு?
ஒரு வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு அதனை மீறாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள். முடிந்தவரை அவ் வழக்கத்தைப் பின்பற்றுங்கள். அலுவலக வேலைக்கு என ஒரு தனிப்பட்ட பகுதியை அல்லது அறையை ஒதுக்கிக்கொள்வது நல்லது ஏனெனில், அந்நேரம் உங்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்பதை வீட்டில் உள்ளவர்கள் உணர்ந்து கொள்வார்கள். வீட்டில் சிறுவர்கள் இருந்தால் அவர்களுக்கு சௌகரியமான விதத்தில் உங்கள் வழக்கத்தை ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுங்கள், ஏனெனில் சிறுவர்களின் சகிப்புத்தன்மை குறைவானது.
இவற்றுக்கு மேலதிகமாக, உங்கள் வழக்கத்தில் உணவு இடைவேளை, தண்ணீர் இடைவேளை மற்றும் உங்களைப் பராமரிக்க உகந்த நேரம் என்பவற்றையும் உள்ளடக்குங்கள். மிக முக்கியமாக, நீங்கள் தொழில் செய்வது வாழ்க்கையை சௌகரியமாக வாழ்வதற்கே என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் சௌகரியத்தில் தொழில் குறுக்கிட்டால் உங்கள் சமநிலை எல்லைக்கோட்டை ஆராய்ந்து மாற்றங்களை ஏற்படுத்துங்கள். ஆராய்ந்து மாற்றங்களை ஏற்படுத்துங்கள்.
7. ஒரே கூரையின் கீழ், ஒவ்வொரு நாளும், முழு நேரமும், வாழ்வதென்பது உறவுகளுக்கு இடையில் பல சவால்களை உருவாக்குகிறது. விசேடமாக பெற்றோர் மற்றும் பிள்ளைகள், கணவன் மற்றும் மனைவி, மற்றும் உடன்பிறந்தோருக்கு இடையில் பிணக்குகள் ஏற்படலாம். அனைவருடனும் சுமுகமான உறவைப் பேணுவதற்கான சிறந்த செயன்முறைகள் என்ன?
நாள் முழுவதும் உடன் இருந்தவாறு குடும்ப அங்கத்தவர்களிடையே சுமுகமான உறவைப் பேணுவதென்பது இலகுவான ஒரு காரியமல்ல. ஆனால் உணர்வுரீதியான நுண்ணறிவோடு செயற்படுவது நீங்கள் அதிகம் நேசிப்பவர்களிடையே உருவாகும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவும்.
முறுகலுக்கு உள்ளான சில உறவுகளை சிறிய இடைவெளியை உருவாக்குவதன் மூலம் எளிதாக மேம்படுத்தலாம். நீங்கள் அவர்களை பார்க்கும் அல்லது பேசும் சந்தர்ப்பங்களை குறைப்பதன் ஊடாக பிரச்சனையை ஏற்படுத்தும் காரணிகளில் இருந்து உங்களை விலக்கிக் கொள்கிறீர்கள் அல்லது விடுவிக்கிறீர்கள். அதன் மூலமாக பிரச்சினை தீவிரமடைவதைத் தடுக்கிறீர்கள். குடும்ப அங்கத்தவர் ஒருவர் எல்லைகளை மதிக்காத பழக்கத்தைக் கொண்டிருந்தால் நீங்கள் விலகிச் செல்வதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் நீங்கள் சற்று உறுதியாக இருப்பதோடு அவர்களை அறிவுறுத்துவதற்காக சளைக்காமல் செயற்பட வேண்டும்.
வாக்குவாதம் செய்ய வேண்டாம், ஆனால் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை சுருக்கமாகத் தெரியப்படுத்துங்கள். எளிதாகவும் அமைதியாகவும் சொல்லுங்கள். முறையற்ற வார்த்தைகளைத் தவிருங்கள்.
அதிகளவு உங்கள் துணையில் தங்கியிராத உங்களுக்கேயான சொந்த செயற்பாடுகளில் நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள், ஏனெனில் அது உங்களது துணை தான் கட்டுப்படுத்தப்படுவதாகவும் அகப்பட்டுக் கொண்டதாகவும் நினைப்பதை இல்லாமலாக்கும். இருவருக்கும் வேலையற்ற நேரங்களில் ஒன்றாக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள்.
கற்பனையோடு சிந்தித்து உங்கள் நாளை சந்தோஷமான வழிகளில் ஒழுங்கமையுங்கள். அதாவது திரைப்பட இரவுகள், போர்ட் விளையாட்டுக்கள், வெர்ச்சுவல் டின்னர், பாட்டுப்போட்டி அத்துடன் கதை சொல்லல், விடுகதை என்பன. இவை சிறுவர்களுக்கு மிகவும் முக்கியமானவை. ஏனெனில் இவை சிறுவர்களின் மனதை துடிப்பாக வைத்திருப்பதோடு எரிச்சல் உணர்வைத்தரும் சோம்பேறித்தனத்தில் இருந்து அவர்கள் மனதை தூரமாக்குகிறது.
8. கொவிட் 19 உடன் தொடர்புடைய இறப்புகளின் மொத்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும்போது, தமது அன்புக்குரியவர்களும் இறக்கும் சாத்தியமுண்டு என்ற எண்ணங்கள் ஒருவருக்கு தோன்றலாம், அது மிகவும் மனக்கஷ்டத்தை ஏற்படுத்தும். அவ்வாறான உணர்வுகளை நாம் எவ்வாறு சமாளிப்பது?
அதிகரிக்கும் இறப்புகளின் எண்ணிக்கையானது அதிகமான சந்தர்ப்பங்களில் ஊடகங்களினால் பெரிதாக்கபடுகிறது. அவை குறித்த படங்களைப் பார்வையிடல் மற்றும் தொடர்ச்சியான செய்திகளைக் கேட்டல் என்பன எதிர்மறையான எண்ணங்களுக்கு மனதை உந்தித் தள்ளலாம். ஊடகங்கள் தாக்கங்களை ஏற்படுத்துவதற்காக, ஆர்வத்தை தூண்டுவதற்காக மற்றும் பரவலான மக்கள் கூட்டத்தை சென்றடைவதற்காக செய்திகளை பெரிதாக்குகின்றன. சமூக வலைதளங்கள் மற்றும் தேவையற்ற செய்திகளிலிருந்து விலகியிருத்தல் நேர்மறையான மனநிலையை உருவாக்கிக் கொள்வதற்கு மிகவும் உதவும்.
நான் முன்பு குறிப்பிட்டவாறு நிகழ் நேரத்தில் மிகுந்த கவனத்தை செலுத்துதல் மற்றும் அதில் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பது ஒருவர் துடிப்பாக இருப்பதற்கும் முழுமையான ஈடுபாட்டுடன் செயற்படுவதற்கும் உதவுகிறது. நேர்மறையான சாத்தியங்களை சிந்தியுங்கள். உங்கள் மனதை நீங்கள் எதிர்மறையான எண்ணங்களால் நிறைக்கும்போது அது நிச்சயம் எதிர்மறையான உணர்ச்சிகளையே தரும். அதனால் எப்பொழுதும் தற்சார்பற்ற சிந்தனையுடன் இருங்கள். நன்றியுணர்வுடன் இருப்பதாக உணரும் பயிற்சி நீங்கள் தற்சார்பற்று இருப்பதற்கு உதவும். அதற்கான தேவையை நீங்கள் உணர்ந்தால், மனதை தெளிவுபடுத்துவதற்காக துறைசார் நிபுணர் ஒருவரிடம் உரையாடுங்கள்.
Carol Gooneratne Amarasekara, MSc (Applied Psych, UK), BSc (Psych Coun), Dip (Psych Coun, IRE), Dip (Child Psychology, Netherlands), is an Applied Psychologist and Senior Therapist with proven experience in supporting clients in the workplace and in educational settings. Her client-centred approach empowers individuals and enables them to make informed decisions. She is known for her theoretical counselling approach and its application to real-life settings. She is also well-versed in Trauma Therapy, Imago Therapy, Cognitive Behavioural Therapy, Integrative Counselling, Gestalt Therapy, and Person-Centred Counselling.
Carol is a senior member of the Psychological Associations of USA, UK, New Zealand and Sri Lanka, and the former Vice President of the Sri Lanka National Association of Counsellors. She works with corporates such as Shangri-la and Dialog (Yeheli platform), is a freelance writer for The Sunday Morning newspaper and a guest speaker at psychology-centered programs conducted by Sirasa TV and TV1. Her private practice is based in Colombo and Ja-ela. She can be contacted on 0761999908, 0779925939 and 0718241455.