சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
25/03/2021
உங்களிடம் இரண்டு கேள்விகள்...
கேள்வி 1: 2020 ஜனவரி மாதத்தில் இருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள். உங்கள் Boss உங்களிடம் வந்து (பெயரைக் குறிப்பிடுங்கள்), நீங்கள் முழு வசதியான ஒரு இடத்திலிருந்து, அதாவது உங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கு விருப்பமா என்று கேட்கிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்?
a. சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்வீர்கள்
b. மறுப்பீர்கள்
c.கண் விழித்து அது உண்மையாக இருக்கக் கூடாதா என்று நினைப்பீர்கள்
அநேகமானோரின் பதில் பெரும்பாலும் c ஆகவே இருக்கும்.
கேள்வி 2: இப்பொழுது வீட்டில் இருந்து வேலை செய்வது (WFH) நிதர்சனமாக மாறியுள்ளது. இருந்தாலும் நீங்கள் கனவு கண்ட விதமாக அது அமைந்திருக்கிறதா? இதற்கு பதில் சொல்வது அதிகமானோருக்கு எளிதானதல்ல.
வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதி அனைவருக்கும் தமது தனிப்பட்ட மற்றும் குடும்ப நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தேவையான, மிகவும் எதிர்பார்த்திருந்த சுதந்திரத்தைப் பெற்றுகொடுத்த அதேவேளை, அவர்களது தொழில்சார் பொறுப்புகளையும் தொடர உதவியது. ஆனால் மறுபக்கத்தில், அலுவலகத்திற்கு வந்து வேலை செய்வோருடன் ஒப்பிடும்போது வீட்டிலிருந்து வேலை செய்வோரில் பலர் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாவதாக கற்கைகள் தெரிவித்துள்ளன.
வீட்டிலிருந்தான வேலையின்போது மன அழுத்தத்தை தரும் காரணிகள்
• தொழில் - வீடு இடையிலான எல்லைக்கோடு மறைதல்
•ஒழுங்கான கட்டமைப்பின்மை – நாளாந்த செயற்பாட்டு அட்டவணை இல்லாமை
• மொபைல் சாதனங்களில் தங்கியிருத்தல் அதிகரிப்பு
• உடல் ரீதியான செயற்பாடு குறைவடைதல்
• தூக்கம் பாதிக்கப்படுதல்
•கவனச்சிதறல்கள் (குழந்தைகளைப் பராமரித்தல், துணை, விருந்தினர்)
• சமூக இடைவெளி
இந்த சவால்களை நீங்கள் முகம் கொடுப்பதற்காகவும் வீட்டிலிருந்து வேலை செய்யும் உங்கள் அனுபவத்தை நேர்மறையானதாக மாற்றுவதற்கும் சில பயன்மிக்க டிப்ஸ்களை நாம் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு இடையே தெளிவான எல்லைகளை உறுதி செய்யுங்கள்:
1.வீட்டில் அலுவலக வேலைக்காக ஒரு இடத்தை ஒதுக்குங்கள்
தனியான ஒரு இடத்தை நீங்கள் வேலைக்காக ஒதுக்குவது முக்கியமானது. ஆடம்பர அமைப்புகளை பற்றி நாம் இங்கு குறிப்பிடவில்லை. மிக முக்கியமான விடயம் யாதெனில், நீங்கள் தொடர்ச்சியாக எந்த இடத்தில் இருந்து வேலை செய்கிறீர்கள் என்பதே. இது உங்கள் ஆக்கத்திறனை அதிகரிப்பதற்கு பங்களிப்பது மட்டுமல்லாமல் உங்கள் வீடு மற்றும் குடும்ப வாழ்க்கையின் தனித்தன்மையையும் பாதுகாக்கும்.
2.உங்கள் படுக்கையறை தொழில் எல்லைக்கு அப்பாற்பட்டது
லெப்டொப்பை படுக்கைக்கு எடுத்துச் செல்லும் உந்துதல் உங்களுக்கு ஏற்படலாம், ஆனாலும் அவ்வாறு செய்ய வேண்டாம். உங்கள் உள் மனம் எளிய நினைவூட்டற் குறிகளைப் பின்பற்றியே நாளாந்தம் இயங்குகிறது. உங்கள் படுக்கை, தலையணைகள் மற்றும் படுக்கையறை சூழலானது உங்கள் மூளைக்கு காட்சி நினைவூட்டற் குறிகளை அனுப்பி தளர்வு மற்றும் உறக்க சமிக்ஞைகளை உருவாக்குகின்றன. அதனை உங்களது தொழில் சார்ந்த நினைவூட்டற் குறிகளான லெப்டொப் மற்றும் போனுடன் ஒன்று கலக்க வேண்டாம்.
3.உங்கள் விடுமுறைகளைப் பயன்படுத்த மறக்காதீர்கள்
வீட்டில் இருந்தான வேலை ஆரம்பித்த பின்னர் விடுமுறைக்கு விண்ணப்பிப்பது முன்பை விடவும் நுட்பமானதாக மாறியுள்ளது. எனினும், வேலையில் இருந்து விடுப்பைப் பெற விடுமுறைக்கு விண்ணப்பிப்பது உங்கள் ஆக்கத்திறனை மேம்படுத்த உதவும்.
உங்கள் நாளை திட்டமிடுங்கள்
4.நேர அட்டவணை ஒன்றை பின்பற்றுங்கள்
இப்பொழுது வீட்டிலிருந்து வேலை செய்யும் சௌகரியம் உங்களுக்கு கிடைத்திருப்பதனால், நீங்கள் நாளாந்தம் உங்கள் செயற்பாட்டு வழக்கத்தை விரும்பியவாறு மாற்றலாம். இருந்தாலும், அது உங்கள் தூக்கத்தைப் பாதிப்பதற்கு அனுமதிக்காதீர்கள். உங்கள் நாளாந்த உறக்க வடிவத்தில் நிலைத்திருப்பது உங்களது மனதுக்கும் உடலுக்கும் மிக முக்கியமானது.
5.செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியல்
வீட்டிலிருந்தான வேலை என்பது அதனோடு இணைந்த கவனச்சிதறல் காரணிகளையும் கொண்டது, விசேடமாக பெற்றோரே இதற்கு முகங்கொடுக்கின்றனர். செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியல் ஒன்றை பேணுவது நீங்கள் முழுமையாக அவதானம் செலுத்துவதற்கும் உங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் உதவியாக அமையும். உங்கள் வேலைப் பட்டியலில் ஒரு குறித்த செயற்பாட்டை நீங்கள் நிறைவு செய்தவுடன் அதனை டிக் செய்யும்போது கிடைக்கும் மன திருப்தி பற்றி சொல்ல வேண்டுமென்பதில்லை.
6.உடல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடுங்கள்
வழமையாக நீங்கள் நாளாந்தம் வேலைக்கு பயணிப்பது மற்றும் உங்களது தொழில்சார் செயற்பாடுகள் என்பன ஓரளவு உடல் ரீதியான செயற்பாடுகளை கொண்டிருக்கும். வீட்டில் இருந்தான வேலை அந்த உடல் ரீதியான செயற்பாடுகளை முழுமையாக இல்லாமல் செய்துள்ளது. அதனால் உங்கள் செயற்பாட்டு மட்டத்தைக் கண்காணிப்பதற்காக அணியக்கூடிய activity tracker ஒன்றைப் பயன்படுத்த முயற்சியுங்கள்.
போதுமான உடல் ரீதியான செயற்பாடின்மை தொற்றா நோய்களுக்கு (NCDs) பிரதான காரணியாக அமையும் என்பது உங்களுக்கு தெரியுமா? அத்துடன் நல்லதொரு இரவு ஓய்வைப் பெற்றுக் கொள்வதற்கான உடலின் இயலுமையையும் அது பாதிக்கிறது.
7.சமூக இடைத் தொடர்புகளுக்கு நேரம் ஒதுக்குங்கள்
அதிகமானோருக்கு, தொழில் சூழலில் கிடைக்கும் தோழமை உணர்வானது மன அழுத்தத்தை குறைக்க உதவியாக அமையும். மேலும், வேலை முடிந்த பின்னரான உரையாடல்கள் மற்றும் சிறு சந்திப்புகள் என்பன மன அழுத்தத்தில் இருந்து தப்பிக்க உதவுகின்றன.
வீட்டிலிருந்து வேலை செய்தாலும் அல்லது அலுவலகத்துக்கு வந்து வேலை செய்தாலும் மன அழுத்தம் என்பது எப்பொழுதும் தொழிலுடன் இணைந்த ஒன்றாகவே காணப்படுகின்றது. வீட்டிலிருந்து வேலை செய்பவர்களது ஆக்கத்திறனை அதிகரிப்பதற்கும் அதனை மன அழுத்தமற்ற மகிழ்ச்சியான ஒரு அனுபவமாக மாற்றுவதற்கும் மேலுள்ள டிப்ஸ் உதவியாக இருக்கும் என நாம் நம்புகின்றோம்.