சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
22/02/2022
உணவில் உப்பு சேர்ப்பது சமையலில் நமக்கு மிகவும் அடிப்படையானது ஆனால் உப்புடன் தொடர்புடைய புற்றுநோய்களின் அதிக விகிதங்களைக் கருத்தில் கொண்டு நாம் ஒரு படி பின்வாங்கி உப்பின் பயன்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
எமது சமூகங்களில் உப்பை உணவின் சுவையை அதிகரிப்பதற்கான ஒரு சுவையூட்டியாக பயன்படுத்தி வருகின்ற அதே வேளையில் உப்பு அதிகளவில் வயிற்றுப் புற்றுநோய்க்கான சாத்தியமான காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளமையும் கருத்திற் கொள்ளப்படுதல் வேண்டும்.
புற்றுநோய்க்கான அமெரிக்க ஆய்வு நிலையத்தின் அறிக்கையின் படி அதிக உப்பு வயிற்றின் உட் சுவரினை சேதப்படுத்தி வயிற்று புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
வயிறு புற்றுநோயானது மூன்றாவது பெரிய புற்றுநோயாளியாகவும், உலகளவில் ஐந்தாவது மிகவும் பொதுவான புற்றுநோயாகவும் அறியப்படுகிறது. வயிற்றுப் புற்றுநோய் மிகக் குறைவான அறிகுறிகளுடன் வருகிறது. ஆனால் வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை மாற்றங்களால் எளிதில் இதனை கட்டுப்படுத்த முடியும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
உலக புற்றுநோய் ஆராய்ச்சிகள் சர்வதேச நிதியமானது ஜப்பான் மற்றும் கொரியா போன்ற அதிகளவு உப்புக் கொண்ட உணவுகளை உட்கொள்ளும் நாடுகளில் இருந்து ஆதாரங்களை மேற்கோள் காட்டி அதிக அளவு உப்பு கொண்ட இறைச்சி, மீன் மற்றும் காய்கறிகள் போன்ற உணவுகள் வயிற்றுப் புற்றுநோயை உண்டாக்குவதாக கூறுகின்றது.
உப்பு நுகர்வினை குறைப்பதன் மூலம் வயிற்று புற்றுநோயை காலப்போக்கில் கட்டுப்படுத்த முடியும் என உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியம் குறிப்பிடுகின்றது.
உலக சுகாதார நிறுவனம் ஒரு நாளைக்கு 05 கிராம் (01 தேக்கரண்டி) உப்பை உட்கொள்ள பரிந்துரைக்கிறது. இருப்பினும், பதப்படுத்தப்பட்ட உணவுகளின் பயன்பாடு அதிகரித்து வருவதால் அதிகமான மக்கள் அதிக அளவு உப்பைக் கொண்ட உணவுகளை உட்கொள்வதால் இந்த அளவு உயர்கிறது.
இலங்கையில் உப்பு உட்கொள்ளல் பரிந்துரைக்கப்பட்ட சராசரி தினசரி நுகர்வு விகிதமான 05 கிராம் (01 டீஸ்பூன்) ஐ விட இரட்டிப்பாகும். சுகாதாரத் துறையானது தினசரி உப்பு உட்கொள்ளலைக் குறைக்க மக்களை தீவிரமாக வலியுறுத்தி வருகின்றது.
2025 ஆம் ஆண்டளவில் உப்பு உட்கொள்ளலில் 30 வீதத்தினை குறைக்கப்படுவதை இலக்காகக் கொண்ட தேசிய உப்புக் குறைப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த முயற்சிகள் ஊடாக சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய அழைப்பு விடுத்துள்ளதுடன், விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மேற்கொண்டுள்ளது.
உப்பு உட்கொள்ளல் சுவை உணர்வின் அடிப்படையில் உள்ளதால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உப்பின் உட்கொள்ளலைக் குறைக்க நீங்கள் தேர்வுசெய்தால் உங்கள் சுவை மொட்டுகள் குறைந்த உப்பு அளவுகளுடன் பழகி அர்த்தமுள்ள உணவுமுறை மாற்றங்களைச் செய்ய உதவும்.
நமது அன்றாட உணவில் உப்பின் அளவைக் குறைப்பதே சிறந்த முடிவு. படிப்படியான ஆனால் முக்கியமான மாற்றங்களுடன் எளிதாகச் செய்யலாம், அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- மசாலா, பூண்டு மற்றும் போன்ற வேறு சுவையூட்டிகளை தேர்வு செய்யவும் - அவை உண்மையில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பைட்டோநியூட்ரியன்களைக் கொண்டிருக்கின்றன.
- சாப்பாட்டுக்கு புதிய பொருட்களைப் பயன்படுத்துங்கள், உப்பைப் சுவையூட்டியாக பயன்படுத்துவதைக் குறைக்கவும்.
- அரிசி சமைக்கும் போது உப்பு சேர்க்க வேண்டாம். மற்ற உணவுகளின் உப்பு அரிசியை நிறைவு செய்யும்..
- பெரும்பாலும் உப்பு அதிகம் உள்ள ரெடிமேட் கலவைகளைப் பயன்படுத்தாமல் உங்கள் சொந்த சாலட் டிரஸ்ஸிங் மற்றும் சீசன்களை உருவாக்கவும்.
- ஒரு தடவையில் 200mg இற்கு அதிக உப்பு கொண்ட தயாரிப்புகளைத் தவிர்க்க முயற்சிக்கவும்.
- வெளியில் சாப்பிடும் போது உப்பின் அளவைக் கவனியுங்கள்.
- உங்கள் சமையலில் எப்பொழுதும் குறைவான உப்பைச் சேர்க்கவும் - இல்லையெனில், போதுமான அளவு, சிறிது நேரம் கழித்து நீங்கள் சேர்க்கலாம்.
- சமையலில் பயன்படுத்தும் உப்பின் அளவை காலப்போக்கில் குறைக்க முயற்சிக்கவும்.