வாழ்க்கை என்பது எதிர்பார்ப்புகளும் கனவுகளும் அன்பும் நிறைந்தது. இருப்பினும் சில விடயங்கள் வாழ்க்கையின் அடித்தளத்தை அசைத்து இந்த எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் கலைத்துப் போடலாம். புற்றுநோயும் அவ்வாறான ஒன்றே. மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள பாரிய முன்னேற்றங்கள் காரணமாக குணப்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தாலும், குறித்த சிகிச்சை, செலவீனங்கள், அத்துடன் நிரந்தரமான ஐயப்பாடு என்பன காரணமாக கணிசமான உணர்வுசார் மற்றும் நிதிசார் சுமைகளை நோயாளர்கள் எதிர்நோக்கலாம்.
புற்றுநோய் என்பது மிகச் சிக்கலான நோய்களின் தொடர் என்பதோடு வயது, பாலினம் அல்லது பின்புலம் என்பவற்றைக் கடந்து எந்த ஒருவரையும் தாக்கலாம். இருப்பினும், பல தசாப்தங்கள் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் பலனாக, ஒரு சில அடிப்படையான செயற்பாடுகளை பின்பற்றி நீங்களும் உங்கள் உடலும் புற்றுநோயிலிருந்து தவிர்த்துக் கொள்வதற்கு அதிக வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடியும்.