சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்பதை விடுத்து, நாம் தினமும் எதிர்கொள்ளும் சுகாதாரச் சவால்கள் உலகின் ஏனைய நாடுகளுடன் வேறுபட்டதாக இல்லை.
மாசடைதல், பணி அழுத்தம், தொடர்பாடற்ற நோய்கள், மோசமான உணவுப் பழக்கங்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, சகல இலங்கையர்களுக்கும் போதுமான மருத்துவமனை வசதிகள் இல்லாமை, அதிகரிக்கும் சுகாதார நலச் செலவுகள், ஆகியவைதான் நீங்களும் உங்கள் அன்பிற்குரியவர்களும் எதிர்கொள்ளும் உண்மையான சுகாதாரச் சவால்கள் ஆகும். இருதய நோய் மற்றும் ஆஸ்துமா ஆகிய தொடர்பாடற்ற நோய்கள் இலங்கைக்கு மாத்திரம் இன்றி முழு ஆசியாவிற்கும் சவாலாக உள்ளன. சரிவிகிதமற்ற உணவு, நகரங்களில் சனத்தொகைப் பெருக்கத்தால் அதிகரிக்கும் மாசடைதல், மற்றும் தேகாரோக்கிய செயற்பாடுகளின் குறைவும் இதற்குக் காரணமாகும். மாற்றம் கண்டு வரும் குடும்ப அமைப்பு முறைகள் மற்றும் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் புதிய வாழ்க்கைப் பாணிகள் காரணமாகவும் ஆரோக்கிய வாழ்வைப் பராமரிப்பதென்பது சவாலானதொன்றாகவே உள்ளது.
இலங்கையில் 4 மில்லியனுக்கும் அதிகமான நீரிழிவு நோயாளர்கள் இருப்பதாக அண்மையப் புள்ளிவிபரத்தில் வெளியிடப்பட்டது.
மேலும் வாசிக்கநாம் அனைவரும் உள்ளத்தினாலும், உடலாலும் மற்றும் ஆன்மாவாலும் இளமையாக இருக்கவே ஆசைப் படுகின்றோம். ஆனால் அவை அனைத்தும் நீங்கள் வழிநடத்தும் வாழ்க்கை முறையானது ஆரம்பித்து நிறைவடையச் செய்கின்றது.
ஆரோக்கியமற்ற உணவானது இலங்கையிலுள்ள சில பிரதான நோய்களுக்கு முதன்மைக் காரணமாக உள்ளது, அதில் தொடர்பாடற்ற நோய்கள் (NCDs) மற்றும் நீரிழிவு போன்றவையும் அடங்கும்.
ஒரு நாட்டினை அபிவிருத்தி அடையச் செய்வதற்கான சாவியாக இருப்பது ஆரோக்கியமான மற்றும் நிலையான தொழிலாளர்களாகும். இலங்கையில் இதன் தற்போதையப் போக்கானது வேறு வழியில் பரிந்துரைக்கப்படுகின்றது.