சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
அபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றாகவுள்ள சிறப்பான எழுத்தறிவு வீதத்தினைக் கொண்டுள்ள நாட்டில் பட்டம் ஒன்றைப் பெறுவது பல இலங்கையர்களுக்கு கடினமாகவும், தடையாகவும் உள்ளது.
சனத்தொகையில் 92 வீதமான மக்கள் எழுதவும் வாசிக்கவும் இயலுமான உயர் எழுத்தறிவு வீதத்தினைக் கொண்ட தெற்காசிய நாடாக இலங்கை காணப்படுகின்றது. பல்கலைக்கழகப் பட்டத்தினைப் பெறுவதில் இந்த எண்ணிக்கையின் பிரதிபலிப்பானது குறைவாக இருப்பதே கவலையளிக்கின்றது. கல்வித் திட்டமானது முழுமையாக பாடத்திட்ட அறிவை மையமாக கொண்டதாகவே இருப்பதனால் செயற்பாட்டு அறிவைப் பெற்றுக் கொள்வதில் உயர் கல்வி மேலும் முக்கியத்துவம் பெறுகின்றது. தனியார்த் துறையில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கும் இது மிகவும் அவசியமானதொன்றாகவே கருதப்படுகின்றது.
பல்கலைக்கழகக் கல்வியைப் பெற தகுதி பெறும் அனைவரையும் உள்வாங்கும் அமைப்பு முறைமையை உள்நாட்டு அரச பல்கலைக்கழகங்கள் கொண்டமையவில்லை. உண்மையில் சுமார் 25,000 மாணவர்களுக்கு மாத்திரமே அதற்கான சூழலை வழங்க முடியுமாகவுள்ளது. இதனால் சுமார் 30,000 மாணவர்கள் தகைமை பெற்றும் அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற முடியாமல் போகின்றது. இதன் விளைவாக பல திறமையான மாணவர்கள் தனியார் பல்கலைக்கழகங்கள் அல்லது தொழில் பயிற்சிப் பாடத்திட்டங்களைத் தெரிவு செய்வதற்காகத் தூண்டப்படுகின்றார்கள். போதிய நிதிவளம் இன்றி அநேகரால் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வியைத் தொடர முடியாமல் போகின்றது. அதாவது தரமான மற்றும் உயர் பெறுமதியான திறன்களைக் கொண்ட நாட்டுக்குச் சேவையாற்றக் கூடிய தொழிலாளர் படையணியானது தொழில் வழங்குநர்களிடம் இல்லாததன் காரணத்தினால் முழு மனித வள விநியோகத்திலும் இது தாக்கம் செலுத்துகின்றது.
இலங்கையின் கல்வித் திட்டத்தைப் பற்றியதொரு பார்வையின் பிரதான பெறுநராக மாணவனே உள்ளான்.
வாழ்க்கையில் உண்மையான முதற் கட்டத் தொழில் ஒன்றுக்கு நுழைவதற்குத் தேவையான திறன் மற்றும் பயிற்சியினை நாம் பெறும் கல்விச் சான்றிதழ் உறுதிப் படுத்தாது.
கல்வியொன்றுக்காக அனைவரினாலும் வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள முடியாது, ஆனால் உங்களால் இணையவழிப் பட்டக் கற்கைகள் ஊடாக அதே தகைமையைப் பெற்றுக் கொள்ள முடியும். உங்களுடைய ஆய்வை மேற்கொள்ளுங்கள் ஏனென்றால் தொழில் பாதையொன்றுக்கான தயார் படுத்தல் வீட்டில் இருந்தே ஆரம்பிக்கின்றது.