சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு. மேலும் நீங்கள் பராமரிக்கும் உங்கள் அன்புக்குரியவர்களை நாங்கள் பாதுகாப்போம்
{{title}}
{{label}}கோவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட AIA Insurance காப்புறுதிதாரர்களுக்கான உதவித் திட்ட நடவடிக்கைகள்
தற்போதைய கோவிட்-19 நோய்த் தொற்றுக் காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட காப்புறுதிதாரர்களுக்கு உதவித் திட்ட நடவடிக்கைகளை வழங்குவதற்காக இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (IRSCL) கட்டளைகளுக்கு இணங்க 2020 மார்ச் 01ஆம் திகதியிலிருந்து ஜுன் 30ஆம் திகதி வரையில் ஆயுள் காப்புறுதிதாரர்களினால் செலுத்தப்பட வேண்டிய கட்டுப்பணங்களைச் செலுத்துவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டு வழங்கப்படுகின்றது.
கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட பாதகமான தாக்கம் காரணமாக உதவி நடவடிக்கைகளைப் பெறுவதற்கு நிறுவனத்தினுடைய ஆயுள் காப்புறுதி வாடிக்கையாளர்களினால் பின்பற்றப்படவேண்டிய கீழ்வரும் வழிகாட்டல் அறிவுறுத்தல்களை யுஐயு இன்ஷ{ரன்ஸ் லங்கா தனது நிர்வாகச் செயற்பாட்டு வசதிகளுக்காக வழங்குகின்றது. (கோவிட்-19 உதவித் திட்டம்)
எவ்வாறு அறிவிப்பது:
AIA Insurance நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் covidsupportlk@aia.com எனும் மின்னஞ்சல் முகவரியின் ஊடாக நிறுவனத்திற்கு எழுத்து மூலமான தகவல் (அறிவித்தல்) ஒன்றைச் சமர்ப்பிக்க முடியும். இலகுவான நிர்வாக நடவடிக்கைகளுக்காக எழுத்து மூலமான தகவலானது பின்வரும் விடயங்களை உள்ளடக்கியிருக்க வேண்டும். மேலதிகமான தெளிவுபடுத்தல்களுக்கு 011 2 310 310 இனூடாக எங்களுடைய வாடிக்கையாளர் சேவை மையத்தினைத் தொடர்பு கொள்ளவும் முடியும்.
குறிப்பு : AIA Insurance வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் செலுத்த வேண்டிய முழுமையான கட்டுப்பணத்தைச் செலுத்துவதற்கு உரிய கோவிட்-19 உதவித் திட்டத்தின் காலாவதித் திகதியிலிருந்து அதிகபட்சமாக 2 மாத நீடிப்பு அவகாசம் வழங்கப்படுகின்றது. இக்கால எல்லையினை தயவுசெய்து பின்பற்றுங்கள், இதன் மூலமாக கூறப்பட்ட 02 மாதங்களின் நிறைவின் பின்னர் உங்களுடைய பெறுமதியான காப்புறுதித் திட்டமானது காலாவதியாகாமல் (செயலிழக்காமல்) பேணப்படும்
எப்போது அறிவிக்க வேண்டும்:
இலகுவான செயல்முறைகளுக்காக கோவிட்-19 உதவித் திட்டக் காலத்தின் போது செலுத்தப்பட வேண்டிய கட்டுப்பணத்தின் இறுதித் திகதிக்கு முன்னதாக எது நிகழ்ந்தாலும் எழுத்து மூலமான தகவலானது (அறிவித்தலானது) 2020 மே 15 ஆம் திகதியில் அல்லது அதற்கு முன்னதாக AIA Insurance கிடைக்கச் செய்யப்படல் வேண்டும்.
எழுத்து மூலமான தகவல் (அறிவித்தல்) சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் யாது நடைபெறும்:
AIA Insurance அவசியப்படும் மேலதிக விபரங்களை அல்லது தெளிவுபடுத்தல்களை உற்று நோக்கும். அதன் பின்னர் உங்களுடைய பூர்த்தி செய்யப்பட்ட தகவலை (அறிவித்தலை) நிறுவனம் பெற்றதன் பின்னர் 05 வேலை நாட்களினுள் அதற்கான மறுமொழியினை உங்களுக்கு வழங்கும்.
கோவிட்-19 உதவித் திட்டத்தினுள் ஏற்புடையதாகவுள்ள நிபந்தனைகள்:
கீழ்வரும் நிபந்தனைகள் உங்களுடைய காப்புறுதித் திட்டத்திற்கு ஏற்புடையதாகவிருக்கும்
AIA Insurance Lanka Limited