சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
DFCC வங்கி 65 வருட பெருமைமிகு வரலாற்றைக் கொண்ட முழுமையான சேவைகளுடன் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு வர்த்தக வங்கியாகும். அத்துடன் இலங்கையின் முதலாவது அபிவிருத்தி வங்கி மற்றும் முன்னோடியான அபிவிருத்தி வங்கியாக இருப்பதோடு, நாட்டின் பல புரட்சிகரமான தொழில் முயற்சியாளர்களது நிதிச்சேவையாளராகவும் இருந்து வருகின்றது. இப்பொழுது DFCC அனைவருக்குமான ஒரு வங்கியாக செயற்படுவதோடு வெவ்வேறு வாடிக்கையாளர் பிரிவுகளுக்கேற்ப பலதரப்பட்ட நிதிச்சேவைகளை வழங்கி வருகின்றது. DFCC வங்கி வெவ்வேறு விதமான வாழ்க்கை நிலைகளைச் சேர்ந்த தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நிதிச்சேவைகளைப் பெற்றுத்தரும் ஒரு வங்கியாக தனது மதிப்பு நிலையமைவை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு AIA உடன் பங்கான்மையில் இணைந்துகொண்டது. கடந்த வருடங்களில் இப்பங்கான்மை இரு தரப்பினருக்கும் பல நலன்ளைப் பெற்றுத்தந்திருப்பதோடு, DFCC வாடிக்கையாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டங்கள், உடல்நலன் தொடர்பான திட்டங்கள் மற்றும் முதலீட்டுத் தீர்வுகளை வழங்கி நிகரற்ற பெறுமதியை சேர்த்துள்ளது.
வெப்தளத்தை பார்வையிட அழுத்துங்கள்;
நெஷனல் டிவலப்மன்ட் பேங்க் பிஎல்சி (NDB) இலங்கையின் முன்னணி அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகளில் ஒன்றாகும். உலகின் பாரிய ஆயுட் காப்புறுதி வழங்குனர் AIA இன்ஸூரன்ஸ் லங்கா லிமிடட் (AIA) ஆனது NDB வங்கியுடன் நீடித்த ஒரு வணிக உறவினைக் கொண்டிருப்பதோடு, வங்கியின் வாடிக்கையாளர்கள் இலகுவாக ஆயுட் காப்புறுதி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள உதவுகிறது. இரு பெரு நிறுவனங்களுக்கிடையிலான நெருங்கிய கூட்டுறவுக்கு இப்பங்கான்மை சான்றாக அமைந்துள்ளது.
2020 மார்ச் 12 அன்று சந்தை முதலீட்டின் அடிப்படையில் உலகின் பாரிய ஆயுட்காப்புறுதி வழங்குனர்
வெப்தளத்தை பார்வையிட அழுத்துங்கள்.
oDoc இலங்கையின் பாரிய தொலை மருத்துவக் கம்பனிகளில் ஒன்று என்பதோடு, இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவுகளைச் சேர்ந்த 200,000க்கு மேற்பட்டோருக்கு சேவையாற்றி வருகின்றது. 2017 இல் ஆரம்பிக்கப்பட்ட oDoc, அதிசிறந்த ஆரோக்கிய சிகிச்சையே மக்களின் வாழ்வை சிறப்பானதாக மாற்றும், அதனால் அனைவருக்கும் அது கிடைக்கவேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது. அனைவருக்கும் நிகரற்ற ஆரோக்கிய சிகிச்சை கிடைப்பதையும், அது கட்டுப்படியான செலவில் அமைவதையும் மற்றும் தனிப்பட்ட ரீதியில் கட்டமைக்கப்படுவதையும் உறுதி செய்வதே கம்பனியின் நோக்கமாகும். நாட்டின் அதிசிறந்த மருத்துவர்களின் அதியுயர் தரத்திலான ஒன்லைன் ஆரோக்கிய சிகிச்சை சேவைகளைப் பெற்றுத்தந்து, வாடிக்கையாளர்கள் ஆரோக்கியமான, நீடித்த, அதிசிறந்த வாழ்க்கையை பெற்றுக்கொள்வவதை நோக்காகக் கொண்டு, oDoc உடன் AIA பங்கான்மையில் இணைந்துக்கொண்டது.
தமது வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக விசேடத்துவமான ஆரோக்கிய சிகிச்சை மற்றும் சௌகரியத்தை ஏற்படுத்தித் தருவதற்காக AIA மற்றும் oDoc ஆகிய இருவரது முயற்சிகளையும் வெளிப்படுத்தும் ஒரு சான்றே இந்த பங்கான்மையாகும்.
வெப்தளத்தை பார்வையிட அழுத்துங்கள்
Fitzky, உடலுறுதி சேவைகள் மற்றும் உடலுறுதியுடன் தொடர்புடைய விடயங்களான ஜிம், வகுப்புகள், ஒன்லைன் பயிற்றுனர்கள், தனிப்பட்ட பயிற்சியாளர்கள் மற்றும் ஆடைகளோடு பயனர்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தும் ஒரு ஒன்லைன் சந்தையாகும். இலங்கையில் 300க்கு மேற்பட்ட ஜிம்கள், பிட்னஸ் ஸ்டூடியோக்கள், ஒன்லைன் உடலுறுதி வகுப்புகள் மற்றும் ஒன்லைன் பயிற்றுவிப்பாளர்களுடன் Fitzky இணைந்து செயற்படுகின்றது. தமது வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தவாறே உடலுறுதியையும் நல்வாழ்வையும் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்ய Fitzky உடன் AIA பங்கான்மையை ஏற்படுத்தியுள்ளது. உடலுறுதியை அனைவரும் பெற்றுக்கொள்வதும், அது கட்டுப்படியான கட்டணங்களில் அமைவதுமே இதன் நோக்கமாகும். AIA இனது வர்த்தகநாம வாக்குறுதியான ஆரோக்கியமான, நீடித்த, சிறந்த வாழ்க்கையை மக்கள் வாழ்வதற்கு உதவுவதை பிரதிபலிப்பதாக இது அமைந்துள்ளது.
வெப்தளத்தை பார்வையிட அழுத்துங்கள்