சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
Colombo, 24/06/2022
மிகவும் புனிதமான வெசாக் மாதத்தில் ‘டிஜிடல் தானம்’ என்பதை முதன்முறையாக ஏற்பாடு செய்து இவ்வகையான புதியதொரு முயற்சி மூலம் தனது சமூக உதவிகளை AIA இன்ஷூரன்ஸ் தொடர்ச்சியாக வழங்கிக் கொண்டிருக்கின்றது.
‘டிஜிடல் தானம்’ என்பது ஆயு (நீண்ட ஆயுள்), வர்ண (அழகு), செபெ (ஆறுதல்/மகிழ்ச்சி), ப(டி)ல (சக்தி) மற்றும் பிராக்னெயா (ஞானம்) போன்ற ஐந்து சக்தி வாய்ந்த ஆசிர்வாதங்களின் அடிப்படையில் வெசாக் காலத்தின் போது AIA இனுடைய சமூக ஊடகப் பின்தொடர்பவர்களை ஆன்மீக விருப்பத்துடன் ஈடுபடுத்துவதற்கு அழைப்பு விடுத்த ஒரு மெய்நிகர் (வேர்ச்சுவல்) தானமாகும். குறிப்பிடத்தக்க வகையில் இந்த ஐந்து ஆசிர்வாதங்களும் மக்கள் ஆரோக்கியமாக, நீண்ட ஆயுளுடன், மிகச்சிறந்த வாழ்க்கையினை வாழ்வதற்கு உதவும் AIA இனுடைய நோக்கத்துடன் மிகவும் விரிவான முறையில் பிணைக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளத்தில் பெறுமதியான வாழ்த்துக்களைத் தெரிவித்த ஒவ்வொருவர் சார்பாகவும் ரூபா.100 இனை AIA நன்கொடையாக வழங்கியிருந்ததுடன் இவ்வாறு சேகரிக்கப்பட்ட AIA இன் நன்கொடைகள் அனைத்தும் மொத்தமாக ஹெல்ப்ஏஜ் ஸ்ரீலங்காவிற்கு பத்து சக்கர நாற்காலிகள் வாங்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டிருந்தன. உண்மையில் சக்கர நாற்காலிகள் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கான மிகவும் தேவையுடைய ஒரு பொருளாகும். இது நடமாடுவதற்குச் சிரமப்படும் தேவையுடைய முதியோர்களால் மிகவும் சுதந்திரமாக எவருடைய துணையுமின்றி நடமாடுவதற்குப் பயன்படுத்தக்கூடியதாகவே இருக்கும்.
AIA இனுடைய பிரதான நிறைவேற்று அதிகாரி சத்துரி முனவீர கருத்துத் தெரிவிக்கையில், ‘மற்றவர்களுக்கு உதவுவது மற்றும் தானம் செய்வதென்பது இலங்கையர்களின் மிகவும் முக்கியமான மனப்பான்மையின் ஒரு அம்சமாகவே உள்ளது. மேலும் வர்த்தக நாமம் ஒன்றாக எங்களுடைய நாட்டின் பாரம்பரியங்களுக்கு நாங்கள் மிகவும் மதிப்பளிப்பதோடு இவற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கான வழிவகைகளையும் மேற்கொள்கின்றோம். தற்போது நாட்டில் நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எங்களுடைய சமூகத்திலுள்ள பல்வேறுபட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு மிகவும் உறுதியாகவும் மற்றும் அர்ப்பணிப்புடனும் AIA இன்ஷூரன்ஸ் தொடர்ந்தும் சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தப் புனித வெசாக் காலத்தில் ஹெல்ப்ஏஜ் ஊடாக எங்களுடைய சிரேஷ்ட பிரஜைகளுக்கு உதவுவதற்கு நாங்கள் அவர்களைத் தெரிவு செய்திருந்தோம். இந்த பெறுமதியான நோக்கத்திற்காக சமூக வலைத்தளத்தின் ஊடாக அதிகமதிகமான நேர்மறையான கருத்துக்களைத் தெரிவித்து எங்களுடன் இணைந்த மக்களுக்கு நாங்கள் மிகவும் நன்றிகளையும் தெரிவித்தக் கொள்கின்றோம்’ எனத் தெரிவித்திருந்தார்.
ஹெல்ப்ஏஜ் ஸ்ரீலங்காவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சமந்த லியனவடுகே AIA இன் நன்கொடைக்கு நன்றி தெரிவித்துக் கருத்துக் கூறுகையில், ‘எங்களுடைய கைவிடப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் அவர்களுக்குச் சேவைகளை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட அரச சார்பற்ற தொண்டு நிறுவனமாகவே ஹெல்ப்ஏஜ் ஸ்ரீலங்கா திகழ்வதுடன், நாங்கள் நிச்சயமாக மற்றவர்களின் தாராளமான நன்கொடைகளில் மிகவும் பெருமளவில் தங்கியிருக்கின்றோம். தற்போது நாட்டில் நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடிகள் காரணமாக எங்களுக்கான உதவிகள் குறைந்து கொண்டுதான் செல்கின்றன. எனினும் எங்களுக்கான தேவை அதிகமுள்ள போது AIA எங்களைத் தொடர்பு கொண்டு உதவி செய்வதாக தெரிவித்தமைக்கு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். AIA இனால் வழங்கப்பட்டுள்ள இப்பெறுமதியான நன்கொடையானது மற்றவர்களின் உதவியின்றி சுயமாகத் தங்களது அன்றாடத் தேவைகளை மேற்கொள்வதற்காக மிகவும் தேவையுடைய பத்து முதியோர்களுக்கு உதவக் கூடியதாகவே இருக்கும். உண்மையில் வெசாக் காலத்திலான இந்த மிகவும் போற்றத்தக்க முன்னுதாரணப் பெறுமதியான செயற்பாடானது மிகவும் பாராட்டத்தக்கதாகும்’ எனத் தெரிவித்திருந்தார்.