சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
Colombo, 06/06/2022
இலங்கைப் புற்றுநோய்ச் சங்கத்துடனான 2022 இற்கான தனது தொடர்ச்சியான நான்காவது வருடக் கூட்டாண்மையின் புதுப்பித்தலை AIA ஸ்ரீலங்கா அண்மையில் அறிவித்திருந்தது. AIA இனால் விற்பனை செய்யப்படுகின்ற ஒவ்வொரு புதிய காப்புறுதி சார்பாகவும் ரூபா.100 இனை இலங்கைப் புற்றுநோய்ச் சங்கத்திற்கு நிறுவனம் தொடர்ச்சியாக நன்கொடையாக வழங்குகின்ற நான்காவது வருடமாகவே 2022 அமைந்துள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமானது (MOU) AIA இன் பிரதிப் பிரதான நிறைவேற்று அதிகாரி மற்றும் பிரதான முகவர் நிறுவன அதிகாரி உபுல் விஜேசிங்க மற்றும் புற்றுநோய்ச் சங்கத்தின் தலைவர் அனோஜா கருணாரத்ன ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டிருந்தது.
இலங்கையில் மிகவும் வேகமாக அதிகரித்து வரும் கவலைக்குரிய விடயமாக புற்றுநோய் காணப்படுவதுடன் இதற்கான சிகிச்சை, அதனைத் தடுப்பதற்கான விழிப்புணர்வை அதிகரித்தல் மற்றும் ஏழ்மையான மிகவும் தேவையுடைய புற்றுநோயாளர்களுக்குப் பராமரிப்பு மற்றும் ஆறுதலளித்தல் போன்றவற்றை வழங்குவதற்காக AIA இனால் கடந்த சில வருடங்களாக நன்கொடையாக வழங்கப்படுகின்ற நிதியானது இலங்கைப் புற்றுநோய்ச் சங்கத்தினால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உண்மையில் தற்போது புற்றுநோய் போன்ற தொற்றாத நோய்கள் இலங்கையில் பாரிய பிரச்சினையாகவே உருவெடுத்துள்ளன. அதாவது இலங்கையில், உலகில் நிகழும் 74% இனையும் விட அதிகரித்த 80% மான மரணங்களுக்குப் பொறுப்பானதாக இவையே காணப்படுகின்றன.
AIA இன் பிரதான நிறைவேற்று அதிகாரி சத்துரி முனவீர கருத்துத் தெரிவிக்கையில், ‘நாட்டின் முதன்மையான சுகாதாரப் பிரச்சினையாகப் புற்றுநோய் திகழ்வதன் காரணத்தினால் தற்போதைய நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இலங்கைப் புற்றுநோய்ச் சங்கத்திற்கான எங்களுடைய ஆதரவை தொடர்ச்சியாக வழங்குவதாகவே நாங்கள் உறுதி பூண்டிருக்கின்றோம். உண்மையில் புற்றுநோய்க்கு விசேடமான சிகிச்சை முறைகள், அர்ப்பணிப்புமிக்க பராமரிப்பு, மற்றும் புற்றுநோயாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்குமான மிகவும் உறுதியான நிதியியல் ஆதரவு போன்றன மிகவும் அவசியப்படுகின்றன. எனவே இவ்விடயத்தில் மிகவும் அக்கறையுடன் மிகச்சிறப்பான சேவையினை வழங்கி வரும் இலங்கைப் புற்றுநோய்ச் சங்கத்திற்கு நாங்கள் எங்களுடைய பாராட்டைத் தெரிவிப்பதோடு இந்த சிறந்த நோக்கத்திற்காக நாங்கள் தொடர்ச்சியாக உதவுவதற்கும் விரும்புகின்றோம்’ எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இலங்கைப் புற்றுநோய்ச் சங்கத்தின் தலைவர் அனோஜா கருணாரத்ன AIA இனுடைய தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்துக் கருத்துக் கூறுகையில், ‘AIA எங்களுடனான கூட்டாண்மையினைப் புதுப்பிப்பதையிட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சி தெரிவிப்பதோடு, இலங்கைப் புற்றுநோய்ச் சங்கத்தின் செயற்பாடுகளுக்குத் தொடர்சியாகத் தனது நிதியியல் ரீதியான ஆதரவையே AIA வழங்கும். உண்மையில் கடந்த வருடம் நிலவிய மிகவும் கடினமாக தருணங்களின் போது மிகவும் ஏழ்மையான அதிகம் தேவையுடைய புற்றுநோயாளர்களுக்குச் சிகிச்சையினை வழங்குவதற்கு AIA தொடர்ச்சியாக வழங்கிவரும் நிதி உதவி மிகவும் பேருதவியாக அமைந்திருந்தது. மேலும் நாட்டில் நிலவுகின்ற பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும் AIA இன் ஆதரவிற்கு நாங்கள் மிகவும் மனப்பூர்வமாகவே எங்கள் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்’ எனத் தெரிவித்திருந்தார்.
‘தேசிய புற்றுநோய் நிறுவனம் மற்றும் அபெக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வருகின்ற ஏழ்மையான நோயாளர்களுக்குத் தற்காலிக தங்குமிடம் மற்றும் பராமரிப்பு வசதிகளை வழங்குகின்ற ‘பண்டாரநாயக்க மெமோரியல் ஹோம்ஸ்’ இன் பாரியளவிலான செயற்பாடுகள் மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்கு AIA இனால் வழங்கப்படுகின்ற குறிப்பிடத்தக்க நிதிப் பங்களிப்பினையே நாங்கள் பயன்படுத்தி வருகின்றோம். பொது மக்களுக்கு அறிவூட்டும் மிகவும் முக்கியமான பகுதியாகக் காணப்படும் புற்றுநோயினைத் தடுத்தல், அதனை ஆரம்பத்தில் கண்டறிதல் மற்றும் அதற்காகச் சிகிச்சையளித்தல் போன்றவற்றின் விழிப்புணர்வை அதிகரிப்பதிலும் நாங்கள் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றோம். நோயாளிகள் மருத்துவ, மற்றும் உள ரீதியாக இரு வழியிலும் மிகச்சிறந்த ஆரோக்கியப் பராமரிப்பு மற்றும் உதவிகள் பெறுவதை உறுதிப்படுத்துவதற்கான அனைத்துச் சாத்தியமான விடயங்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் மிகவும் வலி நிறைந்த சிகிச்சைக்குள்ளாகும் நோயாளர்களுக்கு நேரடியான பராமரிப்பை வழங்குவதற்காகவும் நாங்கள் வெளிநிறுவனங்களின் உதவிகளிலும் மிகவும் சார்ந்திருக்கின்றோம். ஆகவே எங்களுடைய நோக்கத்திற்காக AIA இனுடைய ஆதரவைப் பெற்றிருப்பது எங்களுக்கு மிகப்பாரிய பலமாகவே இருந்து கொண்டிருக்கின்றது’ என அவர் மேலும் கருத்துத் தெரிவித்திருந்தார்.
தேசம், சமூகம் மற்றும் மக்கள் என்ற வகையில் தங்களுடைய முயற்சிகளில் உறுதி பூண்டுள்ள இலங்கையர்களின் நீண்ட ஆயுளுடனான, சிறந்த, மற்றும் ஆரோக்கியமாக வாழ்க்கைக்கு உதவிகளை வழங்குவதற்கு AIA மிகவும் அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் செயற்படுகின்றது. மேலும் தற்போது நிலவுகின்ற பாரிய பொருளாதாரச் சவால்கள் நிறைந்த கடினமாக தருணங்களிலும் இலங்கை மற்றும் இலங்கை மக்களுக்கு தன்னாலான அனைத்து வழிகளிலும் AIA நிறுவனம் உதவிகளை வழங்குவதற்கு மிகவும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றது.