சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
Colombo, 30/03/2022
AIA இன்ஷூரன்ஸ் மிகச்சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக மூன்றாவது வருடமாகவும் மீண்டும் சர்வதேச ரீதியில் கௌரவிக்கப்பட்டுள்ளது. AIA சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற கெபிடல் பைனான்ஸ் இண்டர்நெஷனல் நிறுவனத்தினால் 2021 இற்காக இந்த விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தது. இந்த கௌரவமிக்க அங்கீகாரமானது இலங்கையினுடைய நிதித் துறை மற்றும் உலகளாவிய பொருளாதாரம் ஆகியவற்றினது உன்னிப்பான ஆய்வின் அடிப்படையிலான பிரதான செயற்திறன் குறிகாட்டிகளின் ஆழமான மதிப்பாய்வினைத் தொடர்ந்தே வழங்கப்பட்டிருந்தது. இந்த விருதானது மிகச்சிறந்த காப்புறுதித் திட்டங்கள் மற்றும் சேவைகள், மிகச்சிறந்த வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் இலங்கை மக்களுக்கான சேவைகள் சார்பாக இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறைக்கு AIA இனால் வழங்கப்படும் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்கான சான்றாகவும் அமைந்திருந்தது.
இந்த விருதினை வெற்றி பெறுவதற்குப் பங்களிப்புச் செய்த பல சிறப்பான பண்புகளை AIA தன்னகத்தே கொண்டுள்ளதுடன், இலங்கையின் ஆயுள் காப்புறுதி நிறுவனங்களில் மிகச்சிறந்த 6 காப்புறுதிச் சேவை வழங்குநர்கள் மத்தியில் மிகவும் உறுதியான மூலதன நிறைவு விகிதத்தினை (CAR) நிறுவனம் உள்ளடக்கியுள்ளது. நிறுவனம் 2021 இன் நிறைவில் 547% ஒழுங்குமுறையான மூலதன நிறைவு விகிதத்தினை (CAR) பதிவு செய்திருந்தது. இது உண்மையில் ஒழுங்குபடுத்துனரால் நிர்ணயிக்கப்படுகின்ற மூலதன நிறைவு விகிதத்தினை விட நான்கு மடங்கு அதிகமானதாகும். நிறுவனத்தின் வியாபாரச் செயற்பாட்டுச் சூழலில் அதிர்ச்சிகளை தாங்கும் AIA இன் திறனை இது மேலும் செயல் விளக்குவதோடு, வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ச்சியாக தனது உறுதியான வாக்குறுதிகளையும் வழங்குகின்றது. மேலும் இது உயர் தரமான முதலீடுகளில் கவனம் செலுத்தும் நிறுவனத்தினுடைய விவேகமான முதலீட்டு மூலோபாயத்தினாலும் உந்தப்படுகின்றது.
AIA ஸ்ரீலங்கா கடந்த 30 வருடங்களாக தனது காப்புறுதிதாரர்களுக்கு வாக்குறுதியளித்ததை விட அவர்களின் எதிர்பார்ப்பிற்கு அப்பால் எப்போதும் உயர்வான பங்குலாபங்களை வழங்கியுள்ளதற்கான கடந்த கால மிகச்சிறந்த செயற்திறன் பதிவுகளையே கொண்டிருக்கின்றது. 2021 இல் மிகவும் குறைவான வட்டிவீதச் சூழலுக்கு மத்தியில் AIA உத்வேகமான போக்கையே பராமரித்துள்ளதுடன் மிகவும் உறுதியான காப்புறுதிதாரர் பங்குலாபங்களையும் வழங்கியுள்ளது. நிறுவனத்தினுடைய முன்னோடியான டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகள் மற்றும் வியாபாரத்தை இலகுவாக மேற்கொள்வதில் கவனம் செலுத்தல் நடவடிக்கைகள் போன்றன நிஜமான வாடிக்கையாளர் நோக்கத்தை நிறைவு செய்கின்ற காப்புறுதி வழங்குநராகத் திகழ்வதில் தனது நற்பெயரை மேலும் ஸ்திரப்படுத்தியிருக்கின்றது.
ஆரோக்கிய நல்வாழ்வு விடயம் AIA இல் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. AIA நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வெறுமனே காப்புறுதித் திட்டங்களை வழங்கும் நிறுவனமாக இன்றி அவர்களின் வாழ்க்கை முழுவதும் அவர்களுடைய நல்வாழ்வுப் பயணத்தின் அனைத்துத் திட்டங்களுக்கும் உதவும் நிறுவனமொன்றாகவே உள்ளது. மக்கள் ஆரோக்கியமாக, நீண்ட ஆயுளுடன், மிகச்சிறந்த வாழ்க்கையினை வாழ்வதற்கு உதவும் தனது உறுதியான வர்த்தக நாம வாக்குறுதிக்கு ஏற்ப நிறுவனத்தினுடைய குறிக்கோளானது வாடிக்கையாளர்களுக்கு நிதியியல் ரீதியாக உதவுவது மட்டுமின்றி அவர்களை உடல், உள ரீதியாகப் பாதுகாப்பதுமாகும். இலங்கையின் புகழ்பெற்ற சில ஆரோக்கிய நல்வாழ்வுத் திட்டங்களை வழங்கும் சேவை வழங்குநர்களுடன் கூட்டாண்மையினை ஏற்படுத்தியிருப்பதன் மூலமாக வாடிக்கையாளர்களை உற்சாகமாகவும், ஆரோக்கியமாகவும் மற்றும் மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பதற்கு உதவுவதற்காக நல்வாழ்வுத் திட்டங்களை வழங்கும் சூழல் அமைப்பினையே AIA தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. 2021 இல் பணி செய்வதற்கான மிகச்சிறந்த இடம் நிறுவனத்தினால் (Great Place to Work ®) தொடர்ச்சியாக ஒன்பதாவது வருடமாக இலங்கையில் பணிசெய்வதற்கான மிகச்சிறந்த இடமாகவும், நான்காவது தொடர்ச்சியான வருடமாக இலங்கையில் பெண்கள் பணிசெய்வதற்கான மிகச்சிறந்த பணியிடமாகவும் AIA ஸ்ரீலங்கா பாராட்டிக் கௌரவிக்கப்பட்டிருந்தது. நிறுவனமானது ஆசியாவின் பாரிய நிறுவனங்களுக்கான தரப்படுத்தல் பட்டியலில் மிகச்சிறந்த பணியிடமாகவும், முதன்முறையாக இலங்கையில் மிலேனியல் தலைமுறையினருக்கான மிகச்சிறந்த பணியிடமாகவும் சர்வதேச விருதுகளையும் தனதாக்கியிருந்தது. சமீபத்தில் AIA நிறுவனம் இலங்கையின் வங்கியியல், நிதியியல் சேவைகள் மற்றும் காப்புறுதித் (BFSI) துறையில் டொப் 10 மிகச்சிறந்த பணியிடங்களில் ஒன்றாகவும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டிருந்தது.
AIA மக்களுடனும் மிகவும் நெருக்கமான தொடர்பினைப் பேணி வருகின்ற மிகவும் பெருந்தன்மையான மற்றும் கனிவான ஒரு காப்புறுதி நிறுவனமாகும். இலங்கைப் புற்றுநோய்ச் சங்கத்துடனான கூட்டாண்மை, நாடு முழுவதிலுமுள்ள மிகவும் பின்தங்கிய பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளைப் புதுப்பித்தல், சுகாதாரத் துறையிலுள்ள ஊழியர்களுக்கு இலவசமான கோவிட் காப்பீடுகளை வழங்குதல், மற்றும் கோவிட் நோயாளர்களைப் பராமரித்துச் சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளுக்கு நன்கொடைகளை வழங்குதல் என அது எதுவாக இருந்தாலும், சமூகத்திற்கு எப்போதும் சேவைகளை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கின்ற நிறுவனமொன்றாகவே AIA ஸ்ரீலங்கா திகழ்கின்றது. 2021 இல் பொருளாதாரச் சவால்கள் நிறைந்திருந்த போதிலும் விசேடமாக கோவிட் பெருந்தொற்றுடன் தொடர்புடைய தேவைகளுக்கு விசேட கவனம் செலுத்தி கடந்த வருடம் ஏராளமான CSR முயற்சித் திட்டங்களை நிறுவனத்தினால் நடாத்த முடியுமாகவும் இருந்தது.
இவை அனைத்திலும் ஆரோக்கியமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு உதவுவதானது தற்போதும் மற்றும் எதிர்காலத்திற்காகவும் இலங்கை மக்களுக்குச் செய்யும் மிகவும் முக்கியமான மற்றும் பெறுமதியான விடயமாகும் என AIA நம்பிக்கை தெரிவிக்கின்றது.