சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
Colombo, 26/07/2021
AIA இன்ஷுரன்ஸ் முதன்முறையாக மிகவும் பெருமதிப்புமிக்க பாரிய நிறுவனங்களுக்கான ஆசியாவிற்கான சர்வதேசத் தரப்படுத்தல் பட்டியலில் மிகச்சிறந்த பணியிடத்திற்கான (Best Workplaces™️) விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. ஆசியாப் பிராந்தியத்தில் மிகச்சிறந்த பணியிடங்களை அடையாளம் கண்டு அவற்றை அங்கீகரிப்பதில் மிகவும் கடுமையான தேர்வு நடைமுறைகளையும், அளவுகோளையும் பின்பற்றும் சர்வதேச ரீதியில் பாராட்டப்படுகின்ற நிறுவனங்களின் பட்டியலை வெளியிடுகின்ற பணி செய்வதற்கான சிறந்த இடம்® (Great Place to Work®) நிறுவனத்தினால் இவ்விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தது.
AIA தொடர்ச்சியாக ஒன்பதாவது வருடமாகவும் இலங்கையின் மிகச்சிறந்த பணியிடமாக பணி செய்வதற்கான சிறந்த இடம்® (Great Place to Work ®) நிறுவனத்தினால் கௌரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த சர்வதேச அங்கீகாரமும், கௌரவமும் AIA இனை வந்தடைந்திருக்கின்றது. பணி செய்வதற்கான சிறந்த இடம்® (Great Place to Work ®) விருதைப் பெற்றுத் தொடர்சியாக ஐந்தாவது வருடத்தில் 2017 ஆம் ஆண்டு பணி செய்வதற்கான சிறந்த இடம்® ஹோல் ஒப் பேமில் (Great Place to Work® Hall of Fame) AIA இணைந்திருந்தது. மிகச்சிறந்த பணியிடமாக இருப்பதற்கான முக்கியமான அங்கீகாரத்தைத் தவிர பல வருடங்களாக பணி செய்வதற்கான சிறந்த இடம்® (Great Place to Work ®) நிறுவனத்திடமிருந்து AIA ஸ்ரீலங்கா பல விருதுகளை வெற்றி பெற்றிருப்பதுடன், தொடர்ச்சியாக 3 வருடங்களாக பெண்களுக்கான மிகச்சிறந்த பணியிடம் விருது வழங்கியும் கௌரவிக்கப்பட்டிருந்தது.
AIA இன் பிரதான நிறைவேற்று அதிகாரி நிகில் அத்வானி இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், 'எங்களைப் பொறுத்தவரை AIA இல் பணியிடத்தின் மீதான ஊழியர்களின் நம்பிக்கை மற்றும் அதனைப் பற்றிய பெருமிதம் மிகவும் முக்கியத்துவமிக்கதாகும். மேலும் அந்த நோக்கத்திற்காக ஊழியர்களுக்கு சமமான வாய்ப்பு, பாதுகாப்பான பணிச்சூழலை உறுதிப்படுத்தல் ஆகியவற்றில் நாங்கள் மிகவும் கவனம் செலுத்துவதோடு ஊழியர்களின் தனிப்பட்ட நல்வாழ்வு, தொழில் வளர்ச்சி, சமூக உணர்வு ஆகியவற்றுக்கு இடையில் சமநிலைத் தன்மையினை அனுபவிக்க முடியுமாகவும் மேலும் அவர்களுக்கும் மற்றும் அவர்களுடைய பங்குதாரர்களுக்கும் இடையில் பெருமதியினைச் சேர்க்கக்கூடியதாகவும் உள்ளது. தொடர்ச்சியாக ஒன்பது வருடமாக பணி செய்வதற்கான சிறந்த இடம்® (Great Place to Work ®) விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருப்பதானது நாங்கள் இவ்வியாபாரத்தை சரியான முறையிலேயே மேற்கொள்கின்றோம் என்பதற்கான ஆதாரமாகவே உள்ளது!' என அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.
'விசேடமாக தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்றுக்கு மத்தியில் முதன் முறையாக ஆசியாப் பிராந்தியத்திற்கான பட்டியலில் மிகச்சிறந்த பணியிடமாக (Best Workplaces™️) விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருப்பதானது எங்களுக்கான மிகப்பாரியதொரு அங்கீகாரமாகவும், கௌரவமாகவுமே நாங்கள் கருதுகின்றோம். வீட்டிலிருந்து பணி செய்யும் போது அதிகளவான ஊழியர்களின் ஈடுபாட்டை இயலுமாக்குவதற்காகவும் மற்றும் எங்கள் அலுவலகத்திலுள்ள ஊழியர்களுக்கான மிகவும் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதிப்படுத்துவதற்காகவும் நாங்கள் மிகவும் கடினமாகவே உழைத்திருந்தோம்ளூ மேலும் நாங்கள் தற்போது இந்த நிலையில் இருப்பதற்கு உதவிய எங்களுடைய அனைத்து ஊழியர்களுக்குமான பாராட்டாகவே இந்த விருது அமைந்திருக்கின்றது' என அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்திருந்தார்.
AIA இனுடைய மனிதவளப் பணிப்பாளர் துஷாரி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், 'எங்களுடைய ஊழியர்களின் மகிழ்ச்சி, கவனிப்பு, வளர்ச்சிப் போக்கு மற்றும் ஆரோக்கிய நல்வாழ்வு ஆகியவற்றில் நாங்கள் தொடர்ச்சியாக முன்னுரிமை வழங்குவதனால் எங்களுடைய நற்சான்றுகளுடன் இந்த உலகத்தரம் வாய்ந்த பாராட்டுக்களைச் சேர்ப்பத்தில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இந்த பெருமதிப்புமிக்க விருதுகளை வெற்றி பெற்றிருப்பதானது எங்களுடைய ஊழியர்களுக்கான மிகச்சிறந்த பணியிடமாக தன்னை வேறுபடுத்திக் காட்டுவதில் இலங்கையிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் AIA தன்னுடைய வெற்றியை மீண்டும் உறுதிப்படுத்துவதுடன் மிகச்சிறந்த தொழில்தருநருக்கான தெரிவிலும் எங்களை முதன்மையான நிறுவனமாக நிலைநிறுத்தியிருக்கின்றது' எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் கோவிட் பெருந்தொற்று காரணமாக 2020 ஒரு சவாலான ஆண்டாக இருந்த போதிலும் எங்களால் 90 இற்கும் மேற்பட்ட ஊழியர்களின் செயற்பாடுகளை நிகழ்நிலையில் (ஒன்லைனில்) மேற்கொள்ள முடியுமாகவே இருந்தது. உண்மையில் எங்களுடைய ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி செய்திருந்த போதிலும் அவர்களை உற்சாகமாகவும், ஊக்கமுடனும் ஒரு பணிச் சமூகமாக ஒருமித்து பேணக்கூடியதாகவும் இருந்தது. மேலும் நாங்கள் நிறுவனத்திற்காக திட்டமிட்டிருந்த 28 டிஜிடல் திட்டங்களில் 27 இனை மிகவும் வெற்றிகரமாக நிறைவு செய்யக்கூடியதாகவும் இருந்தது. இதில் மெய்நிகர் (வேர்ச்சுவல்) மற்றும் நேரடியான நிகழ்வுகள் உள்ளடங்கலாக மொத்தமாக 12இ476 கற்றல் மணித்தியாலங்கள் அமைந்திருந்தன. எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சிறந்த மற்றும் உயர்தரமான சேவைகளுடன் காப்புறுதித் திட்டங்கள் மற்றும் செயல்முறைகளை வழங்குவதற்கும், பணியிடத்தின் அனைத்து அம்சங்களிலும் செயற்திறன் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கும், ஊழியர்களுக்கான பாரிய உரிமைத்துவத்துடன் அவர்களின் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கம் போன்ற செயற்பாடுகளுக்குச் சுதந்திரம் மற்றும் அங்கீகாரங்களைத் தொடர்ச்சியாக நாங்கள் வழங்கி வருகின்றோம். இங்கு ஒட்டுமொத்தமாக சால்கள் நிறைந்திருந்த போதிலும் AIA நிறுவனத்தினது வளர்ச்சிப் போக்கு தனது ஊழியர்களுடன் அமைவதே நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமெனக் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானதாகும்' என அவர் மேலும் கருத்துத் தெரிவித்திருந்தார்.