சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
Colombo, 30/04/2021
முகவர் நிறுவன விநியோகப் பொறிமுறையின் பிரதேச அபிவிருத்தி முகாமையாளர்கள் நிறுவனத்திற்கு வழங்கியிருந்த பாரிய பங்களிப்பினைக் கௌரவிப்பதற்காகவும், அதேவேளை அவர்களில் சிலருக்கு வழங்கப்பட்டிருந்த பதவி உயர்வுகளைக் கொண்டாடுவதற்கும் AIA இன்ஷூரன்ஸினால் விசேட நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வானது பிரதேச அபிவிருத்தி அலுவலகப் (ADO) பொறிமுறையின் மிகவும் உறுதியான அர்ப்பணிப்பு, தொடர்ச்சியாக நீண்ட காலம் நிலைத்திருக்கும் வெற்றி மற்றும் அதன் குறிப்பிடத்தக்க முக்கியமான பங்களிப்பிற்கான அங்கீகாரம் ஆகியவற்றைக் கொண்டாடும் வகையில் அமைந்திருந்தது. AIA இன் பிரதேச அபிவிருத்தி அலுவலகப் (ADO) பொறிமுறையானது 2009 ஆம் ஆண்டிலிருந்து ஒட்டுமொத்த முகவர் நிறுவனப் பொறிமுறையின் பகுதி ஒன்றாகவே மாறியிருந்ததுடன், அன்றிலிருந்து இது நிறுவனத்தினுடைய வியாபார வெற்றிக்குப் பாரிய முக்கியமான பங்களிப்பினையும் வழங்கி வருகின்றது. இந்த நிகழ்வு மற்றும் புதிய பதவி உயர்வுகள் முகவர் நிறுவன அபிவிருத்தி முகாமையாளர்கள் மத்தியில் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையினை ஊக்குவிப்பதோடு, அவர்களிடத்தில் தொழில்முனைவோர் முயற்சிக்குரிய மனநிலையினை மேம்படுத்துவததையும் நோக்காகக் கொண்டமைந்திருக்கின்றது.
கடந்த தசாப்தத்தின் போது ADO பொறிமுறையானது படிப்படியாக வளர்ச்சியடைந்தே காணப்படுவதுடன், தற்போது இது ஒட்டுமொத்த முகவர் நிறுவன விநியோகப் பொறிமுறையின் மொத்தமான புதிய வணிகத்தின் 18% இற்கும் பங்களிப்புச் செய்கின்றது. அதாவது நான்கு பிரதேச அபிவிருத்தி அலுவலக (ADO) முகாமையாளர்களுக்கு அவர்களின் மிகச்சிறந்த செயற்திறனின் அடிப்படையில் பதவி உயர்வுகள் இதன்போது வழங்கப்பட்டிருந்தன. மொரட்டுவை ADO ஐச் சேர்ந்த விநோல் பிரியசெனரத் ‘மொரட்டுவைப் பிரதேச அபிவிருத்தி அலுவலகத்திற்கான (ADO) இணைப் பொது முகாமையாளர்’ எனும் புதிய பதவி உயர்வு வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தார். அதேவேளை இரண்டு ‘பிரதேச அபிவிருத்தி நிறைவேற்று முகாமையாளர்’ பதவி உயர்வுகள் முறையே திஸ்ஸமஹாராமப் பிரதேச அபிவிருத்தி அலுவலகத்தைச் (ADO) சேர்ந்த திலீப அமீன்ராவிற்கும், மாவனல்லை ADO இனைச் சேர்ந்த YGGB யட்டிக்கம்மனவிற்கும் வழங்கப்பட்டிருந்ததுடன், குருநாகல் பிரதேச அபிவிருத்தி அலுவலகத்தைச் (ADO) சேர்ந்த சமிந்த குணதிலக மற்றும் பாணந்துறை ADO ஐச் சேர்ந்த சமிந்த திஸ்ஸாநாயக்க ஆகியோர் ‘பிரதேச அபிவிருத்தி சிரேஷ்ட முகாமையாளராக’ பதவி உயர்வுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுமிருந்தனர்.
AIA இன் பிரதிப் பிரதான நிறைவேற்று அதிகாரி மற்றும் பிரதான முகவர் நிறுவன அதிகாரி நிறுவனத்திற்கான பிரதேச அபிவிருத்தி அலுவலகச் (ADO) செய்திறனாளர்களின் பாரிய பங்களிப்பு மற்றும் எதிர்கால வெற்றிக்காக இவர்கள் வழியமைத்துள்ள முயற்சிகளுக்கு நன்றி பாராட்டிக் கருத்துத் தெரிவித்திருந்ததுடன்; இலங்கையர்கள் ஆரோக்கியமான, நீண்ட ஆயுளுடன், மிகச்சிறந்த வாழ்க்கையினை வாழ்வதற்கு உதவும் AIA இன் வாக்குறுதியை வழங்கி அதனை உறுதிப்படுத்துவதில் இவர்களின் முக்கியமான பங்கினையும் வலியுறுத்தியிருந்தார். அத்துடன் பிரதேச அபிவிருத்தி அலுவலகத்தின் நீண்ட காலச் செயற்திறனை வெளிக்காட்டுவதன் மூலம் இவர்களுடைய வியாபாரத்தினை மேலும் வளர்சியடையச் செய்வதற்கு இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மேலும் கருத்துக்களைத் தெரிவித்துமிருந்தார்.