சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
Colombo, 21/10/2021
பணி செய்வதற்கான சிறந்த இடம்® (Great Place to Work®) நிறுவனத்தினால் மிலேனியல் தலைமுறையினருக்கான மிகச்சிறந்த பணியிடமாக AIA இன்ஷூரன்ஸ் கௌரவிக்கப்பட்டுள்ளதானது நிறுவனத்தின் மற்றுமொரு சாதனையாகவே திகழ்கின்றது. AIA ஸ்ரீலங்காவிற்கு முதற் தடவையாக வழங்கப்பட்டுள்ள இந்த விருதானது நிறுவனத்தின் பல்வகைமை மற்றும் முற்போக்கான நிறுவனக் கலாசாரம் ஆகியவற்றை உண்மையில் பறைசாற்றும் விதமாகவே அமைந்துள்ளது.
AIA இன் பிரதான நிறைவேற்று அதிகாரி நிகில் அத்வானி கருத்துத் தெரிவிக்கையில், ‘மில்லேனியல் தலைமுறையினர் எங்களுடைய ஊழியர்கள் மத்தியில் பெரும்பான்மை வகிக்கின்றனர். உண்மையில் அவர்கள் இலக்குகளை நோக்கிப் பயணிக்கும் தலைமுறையினராக இருப்பதுடன் சமூகத்தில் நேர்மறையான விளைவினை உருவாக்கும் நோக்கில் தங்களது தொழில்தருநர்களுடன் மிகவும் உற்சாகமாகவே பணிகளை மேற்கொள்கின்றனர். எங்கள் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் அல்லது நாங்கள் சேவை வழங்கும் சமூகமென எதுவாக இருந்தாலும் AIA இனுடைய ஒரே நோக்கமும் இலக்கும் மக்கள் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும், மற்றும் சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கு உதவுவதுமாகவே அமைந்துள்ளது. எங்களின் மிலேனியல் தலைமுறையினரிடம் இருந்து நாங்கள் பெறுகின்ற பின்னூட்டத்தின் அடிப்படையில் எனது தலைமுறையினர் சார்ந்த மக்களுடன் அவர்களை ஒப்பிடும் போது வேறுபட்ட விதத்தில் அவர்களை அணுக வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொள்கின்றனர். AIA இனுடைய வெற்றிப் பயணத்தில் பணியாற்றும் இளமையும், துடிப்புமிக்க மில்லேனியல் தலைமுறையினருடனான எங்களுடைய பணிச்சூழல் அணுகுமுறையினை இந்த விருது மிகவும் தெளிவாகவே செயல்விளக்குகின்றது’ எனத் தெரிவித்திருந்தார்.
‘உண்மையில் மிலேனியல் தலைமுறையினர் இலக்குகளை நோக்கிப் பயணிக்கின்ற தொழில்முனைவோருக்கான மனநிலையுடன் இருப்பதாகவே AIA அவர்களை அடையாளப்படுத்துகின்றது. ஆகவே அவர்கள் மிகச்சிறந்த எதிர்காலத் தலைவர்களாக மிளிர்வதற்கு நாங்கள் அவர்களுடைய திறன்களை வளப்படுத்தும் மற்றும் வளர்ச்சி மேம்பாட்டில் கவனம் செலுத்தும் அதேவேளை மிகச்சிறந்த வெகுமதிகளுடன் கூடிய தொழில் அனுபவங்களையும் அவர்களுக்கு வழங்குகின்றோம்’ என AIA இன் மனித வளப் பணிப்பாளர் துஷாரி பெரேரா கருத்துத் தெரிவித்திருந்தார்.
‘AIA இல் நாங்கள் மிகவும் நெகிழ்வான பணியிடக் கலாசாரத்தைப் பின்பற்றுவதானது மில்லேனியல் தலைமுறையினரைப் பெரிதும் ஈர்க்கின்றது. இங்கு எங்களுடைய ஊழியர்களின் வயது மற்றும் நிறுவனத்தில் அவர்களுடைய பதவிக் காலம் ஆகியவற்றை நாங்கள் கருதாமல் அனைத்து மட்டத்திலும் உள்ள ஊழியர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கி அவர்களை மிகச்சிறந்தவர்களாக அடையாளப்படுத்தும் விதமாக அவர்களின் பணியில் முழுமையான அதிகாரத்தை வழங்கி தலைமைத்துவ நிலைகளில் அவர்களைத் தரமுயர்த்துகின்றோம்’ என மேலும் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.
துஷாரி தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ‘AIA இன் டிஜிடல் மாற்றப் பயணமானது தொழில்நுட்பம் மற்றும் தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றில் தொடர்ச்சியாக விசேட கவனம் செலுத்தி வருவதுடன் மிகவும் துல்லியமாக சரியான தகவலை உறுதிப்படுத்தி அதிசிறந்த தரநிலையினைப் பேணுவதனால் மில்லேனியல் தலைமுறையினரை இது வெகுவாகக் கவர்கின்றது’ எனத் தெரிவித்திருந்தார்.