சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
Colombo, 01/10/2021
AIA ஸ்ரீலங்கா முகவர் நிறுவன விநியோக மற்றும் வங்கிக் காப்புறுதிப் பிரிவுகளில் இருந்து 163 மற்றும் 50 தகுதியாளர்களுடன் மொத்தமாக 213 MDRT தகுதியாளர்களை 2021 இல் தனதாக்கிய இலங்கையின் முதற்தர #1 மில்லியன் டொலர் வட்ட மேசை (MDRT) நிறுவனமாகக் கௌரவிக்கப்பட்டிருந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றது. தொடர்ச்சியாக ஆறாவது தடவை இலங்கையின் MDRT அங்கத்துவ நிறுவனப் பட்டியலில் முதற்தர நிறுவனமாக AIA ஸ்ரீலங்கா திகழ்கின்றது. AIA ஸ்ரீலங்கா MDRT உலகத் தரப்படுத்தலில் 77ஆவது இடத்தைத் தனதாக்கியிருப்பதானது உண்மையான உலகத் தரம் வாய்ந்த காப்புறுதி வழங்குநராகத் தன்னைப் பறைசாற்றுவதுடன், இது நம்பமுடியாத ஒரு சாதனையாகவும் திகழ்கின்றது.
2016 இல் MDRT தரப்படுத்தலில் இலங்கையில் 100 உறுப்பினர்களைக் கடந்த ஒரேயொரு முதலாவது காப்புறுதி நிறுவனமாக AIA ஸ்ரீலங்காவே திகழ்ந்திருந்தது. அன்றிலிருந்து இன்று வரை இலங்கையர்களுக்கு மிகச்சிறந்த பாதுகாப்பு, நிதித் திட்டமிடல் மற்றும் சேமிப்புத் தீர்வுகளை மிகவும் வினைத்திறனான முறையில் வழங்குகின்ற மிகத் திறமையான மற்றும் அதிசிறப்பான ஆலோசகர்களை நிறுவனத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்து தொடர்ச்சியாக அவர்களை நிறுவனத்துடன் தக்க வைத்திருப்பதற்கு AIA மேற்கொள்ளும் உற்சாகமான அர்ப்பணிப்பானது ஒவ்வொரு வருடமும் மிகவும் உறுதியாக மற்றும் வெற்றிகரமாக வளர்ச்சியடைந்து தனது நிலையினை ஸ்திர முதற்தர நிறுவனம் ஒன்றாகத் தக்க வைத்திருக்கின்றது.
MDRT ஆயுள் காப்புறுதி மற்றும் நிதிச் சேவைகள் வியாபாரத்தில் அதிசிறந்த தரத்திற்காக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனுடைய உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட உயர் மட்டக் கட்டுப்பணம், தரகுப் பணம் மற்றும் வருவாயை ஏற்படுத்துமாறும், அத்துடன் அதிசிறப்பான தொழில் ரீதியான அறிவு, கண்டிப்பான நெறிமுறைசார் நடத்தை மற்றும் மிகச்சிறந்த வாடிக்கையாளர் சேவையை நிரூபிக்குமாறும் வேண்டப்படுகின்றனர். உண்மையில் இத்தரப்படுத்தலானது சர்வதேச தரம் மற்றும் ஸ்தானத்தில் தங்களது திறமையினை வெளிப்படுத்தும் AIA இன் மிகச்சிறந்த MDRT ஆலோசகர்களின் அதி உயர் தொழில்சார் நிபுணத்துவத்திற்கான மிகச்சரியான கௌரவமாகும்.
AIA ஸ்ரீலங்காவின் பிரதான நிறைவேற்று அதிகாரி நிகில் அத்வானி கருத்துத் தெரிவிக்கையில், “உண்மையில் 2021 கோவிட் பெருந்தொற்றின் பிடிக்குள் அகப்பட்ட எமக்கு சவால் மிக்கதொரு வருடமாகவே அமைந்திருந்தது. எனினும் இவ்வருடத்தில் 213 MDRT தகுதியாளர்களை உருவாக்குவதென்பது அவ்வளவு இலகுவானதொரு விடயமன்று. எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மிகவும் அதிசிறந்த வினைத்திறனான சேவையினை வழங்குவதில் தங்களது பணிக்கு அப்பால் மிகவும் கடினமாகவும் மற்றும் அயராதும் உழைத்த முகவர் நிறுவன விநியோகப் பிரிவின் எங்களுடைய வெல்த் பிளேனர்கள் மற்றும் வங்கிக் காப்புறுதிப் பிரிவிலிருந்தான நிதியியல் திட்டமிடல் அதிகாரிகள் குறித்து நான் மிகவும் பெருமையடைகின்றேன். எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ஆலோசகர்கள் வழங்கிய சேவையினைப் பறைசாற்றும் விதமாகவே இந்த அங்கீகாரம் அவர்களது துணிவு, நெகிழ்ச்சி மற்றும் அர்ப்பணிப்பிற்கான சான்றாகும். மேலும் இலங்கையர்கள் ஆரோக்கியமாக, நீண்ட ஆயுளுடன், மிகச்சிறந்த வாழ்க்கையினை வாழ்வதற்கு உதவும் நோக்கில் இவர்கள் வெளிப்படுத்தும் மிகவும் உயர்தரமான அதிசிறந்த தரத்தைத் தொடர்ச்சியாகப் பேணுவதில் இவர்களின் பலத்தை இவ்விடத்தில் நினைவு கூறாமல் இருக்கவும் இயலாது” எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
AIA இன் பிரதிப் பிரதான நிறைவேற்று அதிகாரி மற்றும் பிரதான முகவர் நிறுவன உத்தியோகத்தர் உபுல் விஜேசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “உண்மையில் இந்த அங்கீகாரமானது நாங்கள் மிகவும் சரியான விடயத்தை, சரியான ஊழியர்களைக் கொண்டு, சரியான முடிவுகளுக்காகவே மேற்கொள்கின்றோம் என்பதை உறுதிப்படுத்துகின்றது. எங்களுடைய ஆலோசகர்கள் மிகவும் உயர்தரமான தொழில்சார் நிபுணத்துவச் சேவைகளின் தரத்தை வழங்குவதில் மிகவும் புகழ்பெற்றவர்களாகவே திகழ்கின்றனர். மேலும் அவர்களுக்கு மிகவும் அதிசிறந்த உயர்தரமான பயிற்சித் திட்டங்களை வழங்குவதன் மூலமாக அவர்களுடைய மேம்படுத்தலுக்கு நாங்கள் தொடர்ச்சியான ஆதரவினை வழங்கி வருவதோடு, மிகச்சிறந்த தகுதி வாய்ந்த ஊழியர்களையே தொடர்ந்தும் ஆட்சேர்ப்புச் செய்து எங்களுடன் தக்க வைத்திருக்கின்றோம். மேலும் வினைத்திறன் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கில் மிகவும் உயர்தரமான தொழில்நுட்ப உபகரணங்களையும் அவர்களுக்கு நாங்கள் வழங்குகின்றோம். கோவிட் பெருந்தொற்றின் போதும் கூட எங்களுடைய அணியில் மிகச்சிறந்த தகுதியளார்களை ஆட்சேர்ப்புச் செய்து இணைப்பதற்கும் மற்றும் உறுதிப்படுத்துவதற்கும் மிகவும் கடினமான, தளராத மற்றும் ஊக்கமுள்ள செயல்முறைகளைப் பின்பற்றியதன் மூலமாகவே எங்களுடைய உயர் தரத்தை எங்களால் நிர்வகிக்க முடியுமாக இருந்தது. வெல்த் பிளேனர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இவ்வியாபாரத்தை வினைத்திறனான முறையில் இலகுவாக மேற்கொள்வதற்கு அவசியமான தொழில்நுட்பம் மற்றும் 100% திறமை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு எங்களிடம் மிகவும் தீவிரமான மற்றும் முழுமையான செயல்முறைகளும் காணப்படுகின்றன” எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
கூட்டாண்மைக்கான பிரதேச சிரேஷ்டப் பொது முகாமையாளர் சேனக ராஜபக்ஷ கருத்துத் தெரிவிக்கையில், “வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெறுமதியான சேவையினை வழங்குவதற்கு நாங்கள் தற்போது இலங்கையின் இரண்டு முதன்மையான வங்கிகளுடன் கைகோர்த்திருக்கின்றோம். தங்களது வியாபாரத்தை மிகவும் வினைத்திறனாகவும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நட்புறவான முறையிலும் முன்னெடுப்பதற்கு எவ்விதத் தடங்களுமற்ற, நவீன, விற்பனை முனைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்ற எங்களுடைய வங்கிக் காப்புறுதி நிதியியல் திட்டமிடலாளர்களின் சிறப்பான பயிற்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றுக்கு நாங்கள் பெரிதும் முன்னுரிமை அளிக்கின்றோம்” எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
“வங்கிக் காப்புறுதித் துறையில் முன்னோடியான காப்புறுதி நிறுவனமாக நாம் திகழ்வதனால் எங்களுடைய பங்காளர் வங்கிகளுக்கு நாங்கள் வழங்கும் உலகத் தரம் வாய்ந்த சேவை குறித்து நாங்கள் மிகவும் பெருமையடைகின்றோம்” என அவர் மேலும் கருத்துத் தெரிவித்திருந்தார்.
வாடிக்கையாளர் அனுபவத்தினை மேம்படுத்துவதற்கு எடுக்கும் ஒவ்வொரு முயற்சியின் போதும் தங்களது ஆலோசகர்களை துறைசார் தரத்திற்கு அப்பால் நிலைநிறுத்துவதற்குப் பயிற்சி, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அடுத்த தலைமுறைத் திட்டங்களில் மிகவும் பாரியளவில் AIA முதலீடுகளை மேற்கொள்கின்றது. AIA உடன் இணைந்து உண்மையான வேறுபாட்டை உருவாக்கவும் மற்றும் MDRT உறுப்பினர்களின் புகழ்பெற்ற பட்டியலில் தங்களையும் இணைத்துக் கொள்ளவும் விரும்பும் ஆலோசகர்களுக்கு AIA நிறுவனத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்!