சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
Colombo, 05/05/2021
தற்போதைய சந்தை நிலைமைகளுக்கு முகங்கொடுக்கும் நோக்கில் மிகவும் விரிவான மற்றும் முழுமையான சந்தை ஆய்வினைத் தொடர்ந்து இலங்கையர்கள் மத்தியில் AIA ஸ்மாட் வெல்த்தின் பெறுமதி மற்றும் திட்ட முன்மொழிவினை அதிகரிக்கும் பொருட்டு தனது மிகச்சிறந்த சேமிப்புத் திட்டம் ஒன்றை AIA இன்ஷுரன்ஸ் சமீபத்தில் மீளவடிவமைத்து ஆரம்பித்திருந்தது. புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மாட் வெல்த் திட்டமானது நீங்கள் சொத்தைச் சேர்ப்பதற்கும், அதனை முறையாக நிர்வகிப்பதற்கும் மற்றும் உரிய முறையில் அதனைப் பாதுகாப்பதற்கும் உங்களுக்கு வசதியளிக்கின்றது. இத்திட்டமானது தனது வாடிக்கையாளர்களுக்குக் கணிசமான அளவு நெகிழ்வுத் தன்மையினை வழங்கும் அதேவேளை ஆயுள் காப்புறுதியுடன் மிகச்சிறந்த சேமிப்பினையும் இணைக்கின்றது.
AIA ஸ்மாட் வெல்த் திட்டமானது AIA இன் விவேகமான தொழில்சார் முதலீட்டு மேலாண்மைத் திறன்களினால் உந்தப்படுவதனால் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யப்படுகின்ற மிகவும் தரமிக்க பெருநிறுவனப் பத்திர முதலீடு அல்லது நிலையான வருமான முதலீடுகள் மற்றும் அரசு பத்திர முதலீடுகள் போன்றவற்றை மேற்கொள்கின்றது. இந்த முதலீட்டு மூலோபாயமானது வாடிக்கையாளர்களது நீண்ட காலச் சேமிப்புகளுக்கு உறுதியான இலாபத்தினை வழங்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. AIA இன்ஷுரன்ஸின் கடந்த கால (2020 இற்காகப் பிரகடனப்படுத்தப்பட்ட 9.18% பங்குலாபத்தின்) உயர் இலாப வழங்கலானது 2021 இற்கு தற்போது 8% ஆகக் காணப்படுகின்ற வருடாந்த உத்தரவாத வீதத்தினால் மேலும் உறுதிப்படுத்தப்படுகின்றது.
மீளவடிவமைக்கப்பட்ட இந்த சேமிப்புத் தீர்வானது வாடிக்கையாளர்கள் விரும்பும் ஆயுள் காப்புறுதிப் பாதுகாப்பின் தொகையினைத் திருத்தியமைப்பதற்கான தெரிவை அவர்களுக்கு வழங்குகின்றது. ஸ்மாட் வெல்த் திட்டமானது வருடாந்தக் கட்டுப்பணத்தின் 5 மடங்கு ஆயுள் காப்புறுதிக் காப்பீட்டுடன் மேம்படுத்தப்பட்டும் வழங்கப்படுகின்றது. எனினும் வாடிக்கையாளர்கள் விபத்துக் காப்புறுதிக் காப்பீடு ஒன்றுடன் வருடாந்தக் கட்டுப்பணத்தின் 50 மடங்கு வரை அதிக ஆயுள் காப்புறுதியினைச் சேர்ப்பதற்கும் தெரிவுகளைக் கொண்டிருக்கின்றார்கள்.
துரதிர்ஷ்டவசமான மரணம் அல்லது முழுமையான நிரந்தரமான இயலாமையின் போது உங்களுடைய அன்பிற்குரியவர்களுக்கு AIA உடனடியாகவே காப்புறுதி அனுகூலங்களைச் செலுத்துவதோடு, உங்கள் சார்பாக நீங்கள் செலுத்த வேண்டிய கட்டுப்பணத்தைத் தொடர்ந்தும் செலுத்துவதனையும் உறுதிப்படுத்தும். ஆகவே நீங்கள் ஏற்கனவே திட்டமிட்டுக் கணித்திருந்த முதிர்வுப் பெறுமதியினை உங்கள் அன்பிற்குரியவர்கள் பெறுவார்கள். ஆயுள் காப்புறுதிதாரர் மரணமடையும் சந்தர்ப்பத்தில் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு அனுகூலத்தினையும் மற்றும் முதிர்வுப் பெறுமதியினையும் பெறக்கூடிய வகையில் அமைந்துள்ள ஒரு தனித்துவமான திட்டமாகவே இது அமைந்துள்ளது.
இது நீண்ட காலத்திற்குக் கட்டுப்பணச் செலுத்தல் கடமைகளை வேண்டுகின்ற பாரம்பரிய ஆயுள் காப்புறுதித் திட்டங்களைப் போலன்றி வாடிக்கையாளர்கள் 4 அல்லது 6 வருடங்களுக்கு மட்டுமே கட்டுப்பணங்களைச் செலுத்துவதன் மூலமாக (20 வருடங்கள் வரையில்) நீண்ட காலத்திற்கான சேமிப்பினை அவர்களுக்கு வழங்குகின்றது. புதிய காப்புறுதித் திட்டமானது எங்களுடைய வாடிக்கையாளர்களுக்குப் பரந்துபட்ட தெரிவுகளை வழங்குவதோடு முதன் முறையாக 15 வருட காப்புறுதிக் காலத் திட்டத்தினையும் (15 வருட பாதுகாப்பிற்காக 6 வருட கட்டுப்பணச் செலுத்தல்) வழங்குகின்றது.
அத்துடன் AIA ஸ்மாட் வெல்த் திட்டமானது காப்புறுதிக் காலம் மற்றும் கட்டுப்பணச் செலுத்தல் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் வருடாந்த அடிப்படைக் கட்டுப்பணத்தின் 450% வரையிலான விசேடமான விசுவாச வெகுமதியினையும் கொண்டிருக்கின்றது. மேலும் இந்த வெகுமதியினை 20 வருட காப்புறுதிக் காலத்திற்காக 15 ஆவது மற்றும் 20 ஆவது காப்புறுதி வருடத்திலும், அத்துடன் 10 மற்றும் 15 வருடக் காப்புறுதிக் காலங்களுக்காக முதிர்விலும் சேமிப்பு நிதியிற்கு சேர்க்கக் கூடியதாக இருக்கும். விசுவாச வெகுமதியானது உங்களுடைய சேமிப்புகளை அதிகரிப்பதோடு, உங்களுடைய தேவைகளுக்கு உறுதியான முதலீடு ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கும் உங்களை அனுமதிக்கின்றது.
காப்புறுதித் திட்டம் முதிர்ச்சியடைந்த பின்னரும் கூட தெரிவுகளும் மற்றும் நெகிழ்வுத் தன்மையும் தொடரப்படும். எங்களுடைய சேமிப்பு நிதியை மொத்தத் தொகை ஒன்றாகப் பெறுவதற்கு நாம் அனைவரும் விரும்புவதில்லை; எனவே AIA ஸ்மாட் வெல்த் திட்டமானது உங்களுடைய காப்புறுதி முதிர்ச்சியடைந்த பின்னரும் கூட 5 இலிருந்து 30 வருடங்கள் வரையிலான காலத்திற்கு வளர்ச்சியடைந்து செல்லும் மாதாந்த வருமானம் ஒன்றாக உங்களது சேமிப்புகளை நீங்கள் பெறக்கூடியவாறு உங்களை அனுமதிக்கின்றது. உண்மையில் மாதாந்த விருப்பத் தெரிவானது பணிஓய்வுத் தீர்வொன்றினை எதிர்பார்க்கும் அல்லது தங்களுடைய அன்பிற்குரியவருக்கு மாதாந்த வருமானம் ஒன்றை ஏற்படுத்த நினைக்கும் மக்களுக்கு மிகச்சிறந்த பொருத்தமான தீர்வொன்றாகவே இருக்கும். இந்த மாதாந்த வருமானமானது வருடாந்தப் பங்குலாப வீதத்தின் மேலதிகமான 30% இனைச் செலுத்தக்கூடிய AIA இனுடைய தனித்துவமான பங்குலாப அதிகரிப்பானினால் மேலும் அதிகரிக்கப்படுகின்றது.
இக்காப்புறுதித் திட்டம் வழங்கக்கூடிய பல அனுகூலங்களில் சில இவையாகும். எனினும் வாக்குறுதியளிக்கப்பட்ட தொகையினை விட அதிகமான தொடர்ச்சியான மிகச்சிறந்த கடந்த கால இலாப வீதங்களுடன் AIA வாடிக்கையாளர்கள் பெறுகின்ற வருடாந்த உத்தரவாதப்படுத்தப்பட்ட பங்குலாபக் கொடுப்பனவினையும் இங்கு மறக்க முடியாது! 2019 மற்றும் 2020 இற்காக (குளோபல் பேங்கிக் எண்ட் பைனான்ஸ் ரிவியு) இனால் இலங்கையின் மிகச்சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனம் எனக் கௌரவிக்கப்பட்டுள்ள ஆரோக்கியம், ஓய்வூதியம் மற்றும் சேமிப்புத் தீர்வுகளை வழங்குகின்ற இலங்கையின் முதன்மையான ஆயுள் காப்புறுதி வழங்குநரான AIA ஸ்ரீலங்காவினால் AIA ஸ்மாட் வெல்த் திட்டம் உங்களுக்கு வழங்கப்படுகின்றது. மேலதிக விபரங்களுக்கு 01123102310 இற்கு அழையுங்கள்.