சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
Colombo, 29/02/2016
யாழ்ப்பாணம் ஆனது அழகான கோவில்கள், அசைந்தாடும் பனை மரங்கள், சுவையான மாம்பழங்கள் மற்றும் நாவில் எச்சில் ஊறும் நண்டுக் குழம்பு ஆகியவற்றுக்குப் பிரசித்தமானது. ஆயினும் மேலும் இரண்டு முக்கிய விடயங்கள் அங்கு பிரபல்யம் பெற்றுத் திகழ்கின்றன. உதைப்பந்தாட்டம் மற்றும் யோகா ஆகிய அவை இரண்டிற்கும் யாழ்.குடாநாட்டில் மிக நீண்ட வரலாறு உண்டு.
ஆங்கிலேயரின் ஆட்சிகாலத்தில் அருட்தந்தை J.A.R.Smythe அவர்களால் 1881 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தின் புனித. பெட்ரிக் கல்லூரியில் கால்பந்தாட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஏனைய பாடசாலைகளும் இந்த விளையாட்டை பின்பற்றியதுடன்;, எதிர்வந்த ஆண்டுகளில் பல திறமையான வீரர்களையும் உருவாக்கியிருந்தது. உள்நாட்டு யுத்தம் காரணமாக இந்த விளையாட்டில் சிறிய தேக்கம் காணப்பட்ட போதிலும், அண்மைக் காலங்களில்; நாடளாவிய ரீதியிலான கால்பந்தாட்டப் போட்டிகள் பலவற்றில் வடபகுதி அணிகள் பல்வேறு வெற்றிகளைக் குவித்து வருவதைக் காண முடிகின்றது.
AIA இன்ஷ{வரன்ஸ் யாழ். நகரில் அண்மையில் இடம்பெற்ற AIA-in-Town நிகழ்வில் பல்சுவை கால்பந்தாட்ட நிகழ்வுகளை நடாத்தியமை குறித்து மகிழ்ச்சி அடைகின்றது. உலகின் தலைசிறந்த கால்பந்தாட்டக் கழகங்களில் ஒன்றான டோட்டென்ஹம் ஹொட்ஸ்பேர் (Tottenham Hotspur) கால்பந்தாட்ட அணியின் சர்வதேசப் பங்காளராக உள்ள AIA யினால் மேற்கொள்ளப்பட்ட பல சிறப்புச் செயற்பாடுகளின் காரணமாக, இப்போட்டிகளில் பங்குபற்றிய பல திறமையான கால்பந்தாட்ட வீரர்களின் மறைந்திருந்த திறமைகள் வெளிக் கொணரப்பட்டன.
நல்லூர் கோவில் சுற்றுப்புரத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுமார் 2000 பேர் கலந்து கொண்டதுடன் சுமார் 1500 பேர் இவ்விளையாட்டின்; மீதுள்ள தங்களது ஆர்வத்தினை ‘hit the ball’, 'keepie uppie’ ஆகிய போட்டிகள் ஊடாகவும் முகநூல் செயற்பாடுகள் மூலமாகவும் வெளிப்படுத்தியிருந்தனர். யாழ். நகரில் கால்பந்தாட்டம் இன்னும் நிலைபேறாக இருப்பதானது, AIA இற்கு உண்மையில் வெகுமதி ஒன்றாகவே அமைந்திருந்தது.
ஆன்மீகக் குறிப்புகளின் பிரகாரம், மிகவும் பிரசித்து பெற்ற யோகா குருவான ஜனன குரு சிவா யோகஸ்சுவாமி அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள கொழும்புத்துறை வீதி ஆலிவ் மரத்தின் கீழ் பல ஆண்டுகளை தியானத்தில் கழித்துள்ளமையானது யோகா யாழ்ப்பாணத்திற்கு மிகவும் விசேடமானதொன்றாகவே கருதப்படுகின்றது.
AIA ஆனது யாழ்;ப்பாணத்திலுள்ள தமது வாடிக்கையாளர்கள் மற்றும் வெல்த் பிளேனர்களுக்கு அதிகாலையிலேயே யோகா வகுப்பினை அவர்களின் தினத்தை மிகவும் அமைதியாகவும் சௌபாக்கியமாகவும் ஆரம்பிக்க நடாத்தியிருந்தது. தியானம் மற்றும் ஓழுக்க உடற்பயிற்சி ஆகிய இரண்டு அம்சங்களும் இந்த வகுப்பில் உள்வாங்கப்பட்டன. ஆகவே பங்குபற்றியோர் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெற இது உதவியிருக்கும்.
யாழ். நகரில் 05 தினங்கள் இடம்பெற்ற யுஐயு யின் பல்வேறு நிகழ்வுகள் அந்நகர மக்களை மிகவும் பரவசத்தில் ஆழ்த்தியிருந்தது.
ஊடக விசாரணைகள்:
சுரேன் பெரேரா: சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி மற்றும் நிறுவனப் பேச்சாளர்
அலுவலக தொலைபேசி இல: 2310028
கைபேசி இல: 0773 457 959