சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு. மேலும் நீங்கள் பராமரிக்கும் உங்கள் அன்புக்குரியவர்களை நாங்கள் பாதுகாப்போம்
Colombo, 14/03/2016
ஒவ்வொரு மாதமும் பத்து அதிஷ்டசாலி AIA காப்புறுதிதாரர்கள், இருவர் அடங்கிய விடுமுறைச் சுற்றுலாவினை அவர்கள் வென்றுள்ளதாக நிறுவனத்தினால் அறிவிக்கப்படுகின்ற போது பெரும் மகிழ்ச்சி அடைகின்றனர். மேலும் தாய்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய 03 சுற்றுலாத் தளங்களில் இருந்தும் தாம் விரும்பிய பயணத் தளத்தினை அவர்களால் தெரிவு செய்ய முடியுமாகவும் இருக்கின்றது. கடந்த மாதம் ஒரு தொகுதி யுஐயு ரியல் ரிவோட்ஸ் வெற்றியாளர்கள் மிகவும் மறக்க முடியாத விடுமுறை அனுபவத்தினைப் பெற்றுக் கொண்டார்கள். யுஐயு ஸ்ரீலங்கா அவர்களை சிங்கப்பூருக்கு அழைத்து சென்றதுடன், அந்த 03 நாள் சுற்றுலாவானது அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் கொண்ட அற்புதமான நாட்களாகவே அமைந்திருக்கும். சில வெற்றியாளர்கள் தமது பிள்ளைகளுடன் இணைந்து வந்திருந்தனர், அவர்களில் 07 மாதக் குழந்தை ஒன்றும் அடங்கியிருந்தது.
சிவப்பு நிற வர்த்தகநாம டி-சேட் அணிந்த சுற்றுலாக் குழுவினர் சிங்கப்பூரின் பிரசித்தமான தளங்களைப் பார்வையிட்டதுடன், அவர்களில் பலர் மனதுக்குப் பிடித்தமான பொருட்களை வாங்குவதிலும் ஆர்வம் காட்டினர். தமது விசுவாசமிக்க வாடிக்கையாளர்களுக்கு வெகுமதியளிக்கும் நோக்கிலேயே யுஐயு இந்த விடுமுறைச் சுற்றுலாவை மாதாந்தச் சீட்டிழுப்பில் வெல்லும் வாய்ப்பினை வழங்கி அவர்களைக் கௌரவிக்கின்றது.
சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி திரு. சுரேன் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில் ‘யுஐயு நிறுவனத்திடம் இருந்து காப்புறுதித் திட்டம் ஒன்றை கொள்வனவு செய்தவுடனேயே போட்டியில் வெல்லும் வாய்ப்புக் கிடைத்து விடும். மேலும் வாடிக்கையாளர்கள் எம்முடன் கொண்டுள்ள உறவை அடையாளம் கண்டு அவர்களின் விசுவாசத்தினைப் பாராட்டுவதற்காகவே காப்புறுதியாளர்களுக்கு வெகுமதியளிக்கின்றோம்’ எனத் தெரிவித்தார்.
சிங்கப்பூர் மற்றும் உலகெங்கும் உள்ள கலைஞர்களாலும் சிற்பிகளாலும் சிருஷ்டிக்கப்பட்ட சிங்கப்பூரில் ஆயசiயெ டீயல யுசவ வுசயடை உள்ள சில நவீன கலையம்சங்களைப் பார்வையிட்டதன் பின்னர் எடுத்துக் கொண்ட புகைப்படத்திலேயே யுஐயு விடுமுறையாளர்கள் காணப்படுகின்றனர்.
ஊடக விசாரணைகள்:
சுரேன் பெரேரா: சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி மற்றும் நிறுவனப் பேச்சாளர்
அலுவலக தொலைபேசி இல: 2310028
கைபேசி இல: 0773 457 959