சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
Colombo, 17/03/2016
மார்ச் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது, ஆனால் இலங்கையிலுள்ள பெண்கள் அவர்களது இல்லறச் செயற்பாடுகள் மற்றும் வாழ்க்கையை பொறுப்பேற்றுக் கொள்வதற்காக அவர்களது நேரத்தை வீணாக்குவதில்லை. சமீபத்தைய ஆய்வின் பிரகாரம், இலங்கை இல்லறங்களில் 54% மான பிரதான செல்வாக்காளர்களாக அல்லது தீர்மானம் எடுப்பவர்களாக பெண்களே உள்ளனர். வீட்டுப் பொருட்கள் கொள்வனவு மற்றும் வீட்டுச் செயற்பாடுகள் போன்ற அநேகமானவற்றை ‘பிரதான கொள்வனவாளர்களாக’ அவர்களே தீர்மானிக்கின்றனர். போசாக்கான மளிகைப் பட்டியல், அடுத்த குடும்ப விடுமுறைக்கான இடத்தைத் தீர்மானித்தல் அல்லது காப்புறுதிக் கொள்வனவு என அனைத்தையும் அவர்களே தீர்மானிக்கின்றனர். அவர்களால் குடும்பத்தில் நலன் சிறப்பாகக் காக்கப்படும் என்ற உத்தரவாதமும் அதற்கு ஒரு காரணமுமாகும்.
தீர்மானங்களை மேற்கொள்ளும் 54% மான பெண்களில் அரைப் பங்கினர் ஆயுள் காப்புறுதியொன்றை கொண்டுள்ளனர் (TGI, இலங்கை, 2014/15). பெண் ஆயுள் காப்புறுதிதாரர்களின் அதிகரிப்பொன்றை AIA நிறுவனம் அவதானித்துள்ளது. அதாவது 2015ம் வருடத்தில் கொள்வனவு செய்யப்பட்ட காப்புறுதிகளில் 35% மானவை பெண்களினாலேயே கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அவர்களது குடும்பத்தின் எதிர்காலப் பாதுகாப்பே அவர்களின் பிரதான அக்கறைகளில் ஒன்றாக இருப்பதையே இது கருதுகின்றது. குடும்பத்தினுடைய நிதித் தேவைகளைப் பாதுகாக்க வேண்டியிருப்பதனை ஒப்பீட்டளவில் தெளிவாகப் பார்க்க முடிவதனால், பெண்கள் அது குறித்து முன்கூட்டியே திட்டமிட்டுத் தயாராக இருக்க முயற்சி செய்கின்றனர்.
தற்போது பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் அதிகரித்துள்ளமையினால், இலங்கையினுடைய தொழிலாளர் அணியில் 40% இனை அண்மித்தவாறு பெண்களே உள்ளனர். தமது குடும்பத்தின் சுகாதார மற்றும் நிதி வளத்தை உறுதிப்படுத்தும் நலத் தீர்மானங்களை எடுக்கக் கூடிய பெண்களின் எண்ணிக்கை இதை விட இன்னும் அதிகமாகும்.
இலங்கையில் 04 இல் 01 குடும்பத்தினை பெண் ஒருவரே பொறுப்பேற்றுள்ளார் (தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பிரகாரம், 2012/13 இல் 24.2%) இதனால்; அவர்களின் சொந்த நலனுக்கான நிதிசார் விளைவுகள் அவர்களில் தங்கியிருப்போருக்கு இன்னும் மேலதிக அனுகூலத்தையே வழங்கும்.
உங்களினுடைய குடும்பத்தின் எதிர்காலத்தினைப் பாதுகாப்பதே எந்தவொரு தீர்மானம் எடுப்பவரினதும் பிரதான பொறுப்பொன்றாகும். உங்களின் நிஜ வாழ்வில் எது நடந்த போதிலும் நீங்களும், உங்களின் குடும்பமும் நீண்ட ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதற்கு AIAஉடன் தொடர்பை ஏற்படுத்துங்கள்.
AIA இனை 2310310 ஊடாக அழையுங்கள்
ஊடக விசாரணைகள்:
சுரேன் பெரேரா: சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி மற்றும் நிறுவனப் பேச்சாளர்
அலுவலக தொலைபேசி இல: 2310028
கைபேசி இல: 0773 457 959
புசயிhiஉ ஐஅயபந
பெரும்பாலான இல்லறத் தீர்மானங்கள் பெண்களினாலேயே எடுக்கப்படுகின்றன.
• 54மூ இல்லறங்களில் பிரதான செல்வாக்கு அல்லது தீர்மானம் எடுப்பவர்கள் பெண்கள் (28மூ ஆயுள் காப்புறுதியைக் கொண்டுள்ளனர்)
• 35.9மூ தொழில் அணியில்
• 34மூ யுஐயு ஆயுள் காப்புறுதிதாரர்கள் பெண்கள் (2015)
• 24.2மூ குடும்பத்தைத் தலைமை ஏற்றுள்ளனர்
தகவல்கள்: தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், 2012ஃ13
வுபுஐஇ இலங்கைஇ 2014ஃ15
யுஐயு ஸ்ரீலங்கா
யுஐயு இன்ஷ{வரன்ஸினால் தொகுக்கப்பட்டுள்ளது.