சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
Colombo, 12/08/2016
யூஐயூ இன்ஷஷுவரன்ஸ் லங்கா பிஎல்சி (‘AIA ஸ்ரீலங்கா’ அல்லது ‘நிறுவனம்’) 2016 ஜுன் 30ம் திகதி நிறைவடைந்த முதல் ஆறு மாதங்களுக்கான நிறுவனத்தினதும் மற்றும் அதன் துணை நிறுவனங்களினதும் நிதிப் பெறுபேறுகளை அறிவித்திருந்தது.
பெறுபேறுகளின் முக்கிய நிகழ்வூகள்:
மேம்படுத்தப்பட்ட நிலைபேற்று நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை வழங்குகின்றன
• மொத்த ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டுப்பணம் (GWP) ரூபா. 4>858 மில்லியனாக 26% அதிகரிப்பைப் பதிவூ செய்துள்ளதால்இ ஒன்றுதிரட்டிய வருமானம் 19% த்தால் அதிகரித்து ரூபா. 6>852 மில்லியனாக வளர்ச்சியடைந்துள்ளது. மொத்த ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டுப்பண (GWP) வளர்ச்சிக்கு பிரதானமாக கட்டுப்பண நிலைபேற்று மேம்பாடுகள் மற்றும் கட்டுப்பணம் செலுத்தும் முறையில் ஏற்பட்ட மாற்றம் போன்றவைகளே காரணமாகின.
• கிரமமான ஆயூள் காப்புறுதித் திட்டங்களின்; மொத்த ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டுப்பணம் (GWP) 32% த்தால் அதிகரித்து ரூபா. 4>373 மில்லியனாகப் பதிவாகியூள்ளது.
• வட்டி வீதங்களில் ஏற்பட்ட அதிகரிப்புக் காரணமாக முதலீட்டு வருமானம் ரூபா. 2>297 மில்லியனாக 25% அதிகரிப்பைப் பெற்றுள்ளது.
• வரிக்கு பின்னரான ஒன்றுதிரட்டிய இலாபம் ரூபா. 120 மில்லியன்; ஆகும். கடந்த ஆண்டு 2015 இன் இதே காலப்பகுதியில் பதிவாகிய ரூபா. 87 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 38% த்தால் அதிகரித்து உள்ளது. ஆயூள் காப்புறுதி வர்த்தகத்தின் மிகைகள் வருட இறுதியிலேயே அறிக்கையிடப்படுகின்றன. ஆகவே அவைகள் இவ்அரையாண்டு இலாபத்தில் உள்ளடக்கப்படவில்லை.
AIA ஸ்ரீலங்காவின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஷா ரவ+ப் கருத்து வெளியிடுகையில்,
‘2015 முதல் அரையாண்டின் எங்களது மொத்த ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டுப்பணத்துடன் (GWP) ஒப்பிடுகையில் யூஐயூ ஸ்ரீலங்காவின் ஒன்றுதிரட்டிய வருமானம் உறுதியான 26% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த வளர்ச்சி உத்வேகத்துடன் எதிர்வரும் அரையாண்டில் மேலும் பலப்படுத்தப்படும் என்றே நம்புகிறௌம். AIA தனது வணிகத்தினை தரத்திலும் அளவிலும் அதிகரிக்கவே அர்;ப்பணிப்புடன் செயற்படுகின்றது. மேலும் இவ்வாண்டில் நிறைவேற்றப்பட்ட எமது வளர்ச்சி மூலோபாயங்கள் இதை சிறப்பாகவே பிரதிபலித்துள்ளன. வாடிக்கையாளர்கள் மற்றும் வெல்த் பிளேனர்கள் எம்முடன் இலகுவாக வணிகம் செய்யூம் முறைகளிலேயே நாங்கள் தொடர்ந்தும் கவனம் செலுத்துகின்றௌம். இதன் ஒரு அங்கமாகவே கடந்த காலாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட mCash கைபேசிக் கட்டுப்பணச் சேகரிப்பு முறையானது தற்போது பிரதான கட்டுப்பணச் சேகரிப்பு முறையொன்றாகவூம் மாறியூள்ளது’ எனத் தெரிவித்தார்.
AIA ஸ்ரீலங்காவின் தலைவH வில்லியம் லயில் கருத்து வெளியிடுகையில்,
‘2016 இன் முதலாவது அரையாண்டு AIA ஸ்ரீலங்காவிற்கு மிகவூம் உறுதியானதாக அமைந்ததையிட்டு நான் மிகவூம் மகிழ்ச்சியடைகின்றேன். முதன்மையான முகவர் மூலோபாயங்கள் மற்றும் வங்கிக் காப்புறுதிச் சேவை (பேங்அஷஷுவரன்ஸ்) கூட்டாண்மைகளின் கீழான எமது முயற்சிகள் சிறந்த பெறுபேறுகளையே காண்பிக்கின்றன் மேலும் வேகமாக வளர்ந்து வரும் இலங்கை ஆயூள் காப்புறுதிச் சந்தையின் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ள AIA ஸ்ரீலங்கா தன்னை நன்கு நிலைநிறுத்தியூள்ளது என்பதிலும் நாங்கள் மிகவூம் நம்பிக்கையூடனேயே உள்ளோம்’ எனத் தெரிவித்தார்.