சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
Colombo, 11/06/2016
AIA ஸ்ரீலங்காவானது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கவூம்இ ஆரோக்கிய வாழ்வின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவூம் முன்னுரிமையொன்றை வழங்குகின்றது. AIA நிறுவனமானது அண்மையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் (GMOA) இருதரப்பிற்கும் நன்மையளிக்கும் புரிந்துணர்வூ ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது.
இக்கூட்டாண்மையானது AIA நிறுவனத்தின் ‘ஆரோக்கிய வாழ்வின்’ இலக்கிற்கு சிறந்ததொரு பெறுமதியை வழங்குவதுடன்இ வைத்தியர்கள் மத்தியில் தமது குடும்பங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணிஓய்வூத் திட்டமிடலின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வையூம் அதிகரிக்கின்றது. மேலும் AIA இனது பணி ஓய்வூத் திட்டம் ஒன்றில் முதலீடு செய்யூம் அரச வைத்திய அதிகாரிகள் சங்க (GMOA) உறுப்பினர்களுக்கு பிரத்தியேக நன்மைகளுடனான இலவச விபத்து மரணக் காப்பீடு ஒன்றும் வழங்கப்படுகின்றது.
‘இக்கூட்டாண்மையானது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு (GMOA) மிகவூம் முக்கியமானதொரு மைல்கல்லாகும். மேலும் அதன் அங்கத்தவர்கள் தமது குடும்பங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களது எதிர்காலம் குறித்துத் திட்டமிடவூம் இது உதவூம். அத்துடன் AIA யினது ஆரோக்கிய வாழ்வின் இலக்கை மேலும் அர்த்தமுள்ளதாக்க எங்களால் பங்களிப்புச் செய்யவூம் முடியூம்’ என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் (GMOA) தலைவர் வைத்தியர். அனுருத்த பாதெனிய தெரிவித்தார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கப் (GMOA) பேச்சாளர் வைத்தியர். நவீன் டி சொய்சா ‘ஆரோக்கிய வாழ்க்கை குறித்துப் பொது மக்களுக்கு கல்வியூ+ட்டும் AIA யின் முயற்சிகள் மிகவூம் பாராட்டுக்குரியது. எது ஆரோக்கியமானதுஇ எது ஆரோக்கியமற்றது என்பது பற்றிய போதிய விழிப்புணர்வூ இலங்கையில் மிகவூம் குறைவாகவே காணப்படுகின்றது; எனினும் இதன் பங்காளர்களாக எம்மால் இத்தேசத்திற்கு பாரிய பங்களிப்பொன்றையூம் வழங்க முடியூம்’ எனவூம் தெரிவித்தார்.
‘மொத்தத்தில் இது தேசத்தின் வைத்தியர்களுக்கும் AIA இற்கும் இடையில் வெற்றிகரமானதொரு கூட்டாண்மையாகவே அமையப் போகின்றது. மேலும் வைத்தியர்களின் ஆலோசனை மற்றும் உதவியூடன் AIA அதன் வாடிக்கையாளர்களையூம் ஊழியர்களையூம் ஆரோக்கிய வாழ்வினைப் பின்பற்றுவது குறித்தும் ஆர்வமூட்டும்’ என AIA ஸ்ரீலங்காவின் பிரதான நிறைவேற்று அதிகாரி திரு.ஷா ரவ+ப் தெரிவித்தார். ‘இக்கூட்டாண்மையானது அரச வைத்திய அதிகாரிகள் சங்க (GMOA) உறுப்பினர்களை AIA நெருங்குவதற்கும் உதவூம்; அதேவேளை வைத்தியர்கள் அவர்களது வாழ்க்கையின் தேவைகளையூம் மற்றும் தங்களது அன்பிற்குரியவர்களின் அபிலாஷைகளையூம் நிறைவேற்ற நிதிப் பாதுகாப்பு மற்றும் அதன் உறுதிப்படுத்தலின் முக்கியத்துவம் பற்றி மிகவூம் ஆழமானதொரு புரிதலையூம் பெற்றுக் கொள்வார்கள்’ என அவர் மேலும் தெரிவித்தார்.
புகைப்படத்தில் AIA ஸ்ரீலங்காவின் பிரதான நிறைவேற்று அதிகாரி திரு. ஷா ரவ+ப் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் (GMOA) தலைவர் வைத்தியர். அனுருத்த பாதெனிய ஆகியோர் அரச வைத்திய அதிகாரிகள் சங்கச் (GMOA) செயலாளர் நலிந்த ஹேரத் மற்றும் AIA ஸ்ரீலங்காவின் பிரதிப் பிரதான நிறைவேற்று அதிகாரி திரு. உபுல் விஜேசிங்க ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வூ ஒப்பந்தத்தினைக் கைச்சாத்திடுகின்றனர்.
ஊடக விசாரணைகள்:
சுரேன் பெரேரா: சந்தைப்படுத்தல் தலைமை அதிகாhp மற்றும் நிறுவனப் பேச்சாளH
அலுவலக தொலைபேசி இல: 2310028
கைபேசி இல: 0773 457 959