சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
Colombo, 24/03/2016
காப்புறுதித் துறையில் உலகிலேயே மிகவும் முதற்தரமானதும் கௌரவமானதுமான மில்லியன் டொலர் வட்ட மேசை சம்மேளனத்திற்கு இலங்கை சார்பில் அதிக எண்ணிக்கையான 63 பேரைத் தகுதி பெறச் செய்ததன் ஊடாக கௌரவத்திற்குரிய MDRT பட்டியலில் முன்னணி நிறுவனங்களின் ஒன்றாக AIA தன்னை நிலை நிறுத்தியுள்ளது. 48 வெல்த் பிளேனர்கள் மற்றும் 15 பேங்க்அஷ{வரன்ஸ் (காப்புறுதி விற்பனை) அதிகாரிகள் இதில் அடங்குவதுடன், மீண்டும் ஒருமுறை தேசத்தின் சிறந்த ஆலோசகர்களை AIAகொண்டுள்ளதை இது பறைசாற்றுகின்றது.
ஆயுள் காப்புறுதித் துறை மற்றும் நிதிச் சேவைகள் வியாபாரத்தில் உலகிலேயே மிகவும் முதற்தரமான, கௌரவமான மேன்மையாக மில்லியன் டொலர் வட்ட மேசைச் சம்மேளனம் கருதப்படுகின்றது. அதன் அங்கத்தவர்கள் குறிப்பிடத்தக்களவு கட்டுப்பணம், தரகு, மற்றும் வருமானத்தை ஈட்ட வேண்டும் என்பதுடன், சிறப்பான நிபுணத்துவ அறிவு, கண்டிப்பான ஒழுக்க நடத்தை மற்றும் சிறப்பான வாடிக்கையாளர் சேவையையும் வெளிப்படுத்த வேண்டும்.
இச்சாதனையாளர்கள் அனைவரையும் AIA குழுமத்தின் பிரதான நிறைவேற்றதிகாரியும் தலைவருமான திரு. மார்க் டக்கர் இலங்கைக்கு விஜயம் செய்து விருந்துபசாரத்திலும்; பங்குபற்றி தனிப்பட்ட முறையில் பாராட்டினார். இந்த விஜயமானது, இலங்கையில் முதற்தர ஆனுசுவு நிறுவனமாக யுஐயு இனைத் திகழச் செய்த இச்சாதனையாளர்களின் கடுமையான உழைப்பு மற்றும் உயர் ஆற்றல் கொண்ட நிபுணத்துவத்திற்கு வழங்கிய கௌரவமாகும்.
AIA ஸ்ரீலங்காவின் பிரதான நிறைவேற்றதிகாரி திரு.ஷா ரவூப் ‘எமது ஆலோசகர்கள் உயர் தரமான நிபுணத்துவச் சேவையினை இலங்கை முழுவதும் உள்ள குடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வழங்குகின்றனர். இச்சாதனை அதன் பிரதிபலிப்பாகும். சிறந்த திறமைசாலிகளைக் கொண்டு தரமான பயிற்சித் திட்டங்கள் மூலம் நாம் அவர்களின் அபிவிருத்திக்குத் தொடர்ந்தும் பங்களிப்புச் செய்வோம். மேலும் அவர்களை நவீன தொழில்நுட்பம் மூலம் வினைத்திறனாகவும், மேலும் உற்பத்தித் திறனுடனும் செயற்பட உதவுவோம்’ எனத் தெரிவித்தார்.
பிரதிப் பிரதான நிறைவேற்றதிகாரி திரு.உபுல் விஜேசிங்க கருத்துத் தெரிவிக்கையில் ‘வாடிக்கையாளர்களின் குடும்பத்தைப் பாதுகாக்கவும், தரமான சுகாதாரப் பராமரிப்பை அணுகவும் அல்லது பணி ஓய்வினை மகிழ்ச்சியுடன் கழிக்கவும் என, தேவையான சந்தர்ப்பங்களில் நிஜமாகத் தேவைப்படும் அளவிற்கும் அவர்கள் வசம் இருக்கும் அளவிற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வர்த்தகத்தில் நாம் ஈடுபட்டுள்ளோம். இது இலகுவான விடயமன்று, எனினும், எமது ஆலோசகர்கள் மக்களின் வாழ்வில் செல்வாக்குச் செலுத்துவதோடு மாத்திரமின்றி, தேசத்திலும் சிறந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவித்தார்.
தமது ஆலோசகர்கள் தொழிற்துறை தரநிலைகளை விடவும் மிகவும் உயர்ந்த நிலையில் செயற்படவும், வாடிக்கையாளர் அனுபவத்தினைச் சிறப்பாக்கவும், அவர்களுக்கான பயிற்சி மற்றும் புதிய தொழில்நுட்ப அறிமுகத்தில் AIA பாரியளவில் முதலீடு செய்கின்றது. அடுத்த தலைமுறைக்கான வழிவகைகளை எதிர்பார்த்துள்ள யுஐயு யின் கதவுகள், என்றும் சிறப்பான MDRTபட்டியலில் இணைய ஆர்வம் கொண்டுள்ள ஆலோசகர்களுக்காகத் திறந்துள்ளதுடன், அவர்கள் AIAஉடன் ஒன்றிணைந்து செயற்பட்டு உண்மையானதொரு மாற்றத்தினையும் காணலாம்.
புகைப்பட விளக்கம்:
AIA ஸ்ரீலங்கா MDRTஉறுப்பினர்களுடன் AIA குழுமத்தின் பிரதான நிறைவேற்றதிகாரியும் தலைவருமான திரு. மார்க் டக்கர்
ஊடக விசாரணைகள்:
சுரேன் பெரேரா: சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி மற்றும் நிறுவனப் பேச்சாளர்
அலுவலக தொலைபேசி இல: 2310028
கைபேசி இல: 0773 457 959