சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
AIA இன்ஷூரன்ஸ் தமது காப்புறுதிதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எல்லையற்ற மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுத்தந்திட இலங்கையின் முன்னணி தொலைமருத்துவ வழங்குனர்களில் ஒருவரான oDoc உடன் பங்கான்மையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை காப்புறுதித்துறையில முதன்முறையாக அறிமுகமாகும் இச்சேவை oDoc அப்பின் ஊடாக கிடைப்பதோடு, இந்த இலவச பெறுமதிசேர் நலனில் தெரிவு செய்யப்பட்ட AIA வாடிக்கையாளர்கள் தமது ஸ்மார்ட்போன்களின் ஊடாக இலங்கை மருத்துவர்களை உடனுக்குடன் அணுக முடியும். இப் பங்கான்மையின் ஒரு பெறுபேறாக AIA முதல் வகுப்பு வாடிக்கையாளர்கள் மற்றும் AIA Health Protector வாடிக்கையாளர்கள் இப்பொழுது 100 க்கு மேற்பட்ட பொது மருத்துவர்கள் மற்றும் விசேட நிபுணர்களை அணுக முடிவதோடு, இதில் குழந்தை மருத்துவம், பெண்கள் மருத்துவம், சரும மருத்துவம் மற்றும் மனநலம் உட்பட 40 க்கு மேற்பட்ட விசேட பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மருத்துவ ஆலோசனைகளை வீடியோ, ஓடியோ மற்றும் செய்தி வடிவில் மேற்கொள்ள முடிவதோடு, சிகிச்சை மருத்துவர் அவசியம் என்று கருதும்போது முறைப்படியான மருந்துச்சீட்டுகள் ஒரு சில நிமிடங்களில் நோயாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். உயர்தர சேவைக்கே எமது முன்னுரிமை என்பதனால் oDoc அப்பிலுள்ள அனைத்து மருத்துவர்களும் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்டிருப்பதோடு குறைந்தது 5 வருட அனுபவத்தைக் கொண்டிருக்கிறார்கள். இச்சேவையில் மருத்துவ விநியோகம் மற்றும் நடமாடும் ஆய்வுகூட சேவை போன்ற மேலதிக சிறப்பம்சங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.
AIA இன்ஷூரன்ஸ் காப்புறுதித்துறையின் இன்னொரு முன்னெடுப்பாக புத்தம்புது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்க்கை தீர்வொன்றை அறிமுகம் செய்தது. இதில் AIA வாடிக்கையாளர்கள் oDoc அப்பின் ஊடாக நல்வாழ்வு நிபுணர்களை இலவசமாக அணுகலாம். காப்புறுதி ஒப்பந்தம் ஒன்றுக்கு ரூ.100,000 க்கு மேற்பட்ட பெறுமதியை வருடாந்தக் கட்டுப்பணமாக செலுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களும் இச் சலுகையைப் பெற்றுக்கொள்ள முடிவதோடு, இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்துள்ள நல்வாழ்க்கை நிபுணர்களிடமிருந்து தொடர்ச்சியான மருத்துவ ஆலோசனைகளையும் பெற முடியும். உங்கள் தேவைகளுக்கேற்ப நீங்கள் உடல், மன அல்லது போஷாக்கு என்ற பிரிவுகளில் நிபுணர்களைத் தெரிவு செய்யலாம். இச்சலுகையில் வருடம் ஒன்றுக்கு 6 மொபைல் மருத்துவ ஆலோசனைகள் கிடைப்பதோடு, இதில் தெரிவு செய்யப்பட்ட போஷாக்கு நிபுணர்கள், உணவு ஆலோசகர்கள், மனவள ஆலோசகர்கள் அல்லது இயன்மருத்துவ நிபுணர்களை உங்கள் வீட்டிலிருந்தே சௌகரியமாகவும் பாதுகாப்பாகவும் அணுக முடியும். அத்துடன் இச்சேவையானது மருந்துக் குறிப்புகளை பெறுதல், மருந்துகளைத் தருவித்தல் மற்றும் வீட்டுக்கே வருகைதரும் நடமாடும் அய்வுகூடத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ளல் போன்றவற்றையும் வழங்குகிறது.
AIA உடலுறுதி தீர்வானது பயனர்களுக்கு உற்சாகமளித்து அவர்களை சோம்பலில் இருந்து மீட்டெடுத்து வெர்ச்சுவல் உடலுறுதி வகுப்புகளில் பங்கேற்கச் செய்வதன் ஊடாக ஆரோக்கியமான உறுதியான தமது வடிவத்தை நோக்கிய முதல் படியை எடுத்து வைக்க உதவுகிறது. AIA இன்ஷூரன்ஸ் முன்னணி ஒன்லைன் உடலுறுதித் தீர்வு வழங்குனரான Fitzky உடன் பங்கான்மையை ஏற்படுத்தியுள்ளதோடு, அதன் மூலமாக தமது அனைத்து வாடிக்கையாளர்களும் வீட்டிலிருந்தவாறே பாதுகாப்பாகவும் வசதியாகவும் இலவச ஒன்லைன் உடலுறுதி வகுப்புகளை பெறும் வாய்ப்பை வழங்குகிறது. அனைத்து AIA வாடிக்கையாளர்களும் மாதாந்தம் 12 இலவச ஒன்லைன் வகுப்புகளைப் பெறுவதோடு, அவை இலங்கையின் முன்னணி பயிற்றுவிப்பாளர்களால் வழங்கப்படுகின்றன. அவர்கள் வழிகாட்டல்களுடன் கூடிய ஒன்லைன் வகுப்புகளை ஸூம்பா, யோகா, HIIT, கார்டியோ, வலிமையாக்கல் மற்றும் உடல் பதப்படுத்தல். பயிற்சி, Abs பயிற்சி, மற்றும் உடல் நிறை பயிற்சி என பலதரப்பட்ட உடலுறுதி வகுப்புகளை முன்னெடுக்கின்றனர்.
AIA இன்ஸூரன்ஸ், சர்வதேச மற்றும் உள்நாட்டில் பயிற்சி பெற்ற பல் மருத்துவர்களின் குழுவின் பல்-பராமரிப்பு சேவையான My Dentist உடன் கூட்டுசேர்ந்துள்ளது, அவர்கள் பல் பராமரிப்பில் உள்ளூர் அனுபவத்தை சிகிச்சை மற்றும் நோயாளியின் பின்தொடர்விற்கான தொழில்நுட்பத்தின் சமீபத்திய முன்னேற்றங்களுடன் இணைத்தனர். இந்தக் கூட்டாண்மையின் மூலம், அனைத்து AIA குடும்பத்தாருக்கும் 15% பிரத்தியேக தள்ளுபடியைப் பெறுகிறார்கள், ஆனால் இவை மட்டும் அல்ல, பல் மறுசீரமைப்பு மருத்துவம், பல் பொது மருத்துவம், குழந்தைகளின் பல் மருத்துவம், புன்னகை மேம்பாடு உட்பட பல சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள், ஆர்த்தடான்டிக்ஸ், சிறப்புச் சேவை, வாய்வழி மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல். இந்த பிரத்தியேக தள்ளுபடி மூலம், எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரு புதுமையான தீர்வை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம், அதே வேளையில் நிறைவான வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குகிறோம் - அவர்கள் ஆரோக்கியமான, நீண்ட மற்றும் சிறந்த வாழ்க்கையை வாழ வழிசெய்கிறோம்.
AIA வாடிக்கையாளர்கள் இச்சலுகையினை அனைத்து My Dentist கிளினிக்குகளிலுமிருந்து பெறலாம். சந்திப்பினை உறுதி செய்து கொள்ளளவோ உதவியினை பெறவோ 011 267 3033 / 077 756 2245 ஐ அழைக்கலாம்.
AIA இன்சூரன்ஸ் AIA முதல் தர வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான தள்ளுபடிகளை வழங்குவதற்காக, சொகுசு ஹோட்டல்களின் தொடர்ச்சியான Teardrop Hotels உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த கூட்டாண்மை மூலம், AIA முதல் தர வாடிக்கையாளர்கள் 1 பிப்ரவரி 2022 முதல் 30 நவம்பர் 2022 வரை 10% சலுகைகளை அனுபவிக்க முடியும். Teardrop Hotels என்பது இலங்கை முழுவதும் உள்ள கண்கவர் இடங்களில் அமைந்துள்ள சொகுசு ஹோட்டல்களின் தொடர் சங்கிலியாகும், ஒவ்வொன்றும் தனித்துவமான சுவையினை வழங்குவதில் இவர்கள் தனித்து நிற்கிறார்கள், மற்றும் முன்பதிவு செய்யும் போது மறக்கமுடியாத இலங்கை பயணங்களை உருவாக்குகிறது. ஒவ்வொரு விருந்தினருக்கும் பிரத்தியேக அனுபவங்களை உருவாக்க அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிபுணர் குழுவுடன் ஹோட்டல் ஆதரிக்கப்படுகிறது, இது ஒரு தனித்துவமான மற்றும் மறக்கமுடியாத தங்குமிடத்தினையும் வழங்குகிறது. முன்பதிவுகளுக்கு AIA முதல் தர வாடிக்கையாளர்கள் 0773638381 என்ற இலக்கத்திற்கு அழைக்கலாம். மின்னஞ்சல் - enquiries@teardrop-hotels.com.