சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
Colombo, 30/04/2019
எங்களுடன் ஒரு பிரபலமானவர் இருக்கின்றார். அவரது பொன்னான நேரத்தை எங்களுக்காக வழங்கியுள்ளார். அவர் ஸ்டபாஃனி சிறிவர்தன. பல திறமைகள் கொண்ட மனிதாபிமானமிக்க ஒரு சமூக சேவை செய்யும் ஸ்டபாஃனி சிறிவர்தன நிறுவகத்தின் ஸ்தாபகருமாவார்.
யார் இந்த ஸ்டபாஃனி சிறிவர்தன?
நான் நினைக்கின்றேன்ää அவர் நேர் மறையான மாற்றங்களை மக்கள்ன மத்தியில் ஏற்படுத்துவதற்கும், உணவு அறிவு மற்றும் நேர் மறைத் தாக்கங்களை பலருக்கு அவளால் வழங்க முடியும். நான் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளர். துஷியந்துடன் (என் கணவர்) இணைந்து யாருக்கு எல்லாம் உதவி தேவைப்படுகின்றதோ அவர்களுக்கு உதவுவேன்.
உங்கள் தந்தையொரு இலங்கையர். ஆனால் உங்கள் தாய் இத்தாலியை சேர்ந்தவர். இந்த இணைப்பால் உங்களை நீங்கள் எப்படி அடையாளப்படுத்துவீர்கள்?
நான் ஒரு தவறவிடப்பட்ட குழந்தை. இலங்கையிலேயே வளர்ந்தேன். நான் எந்த இடத்தை சேர்ந்தவள் என்பது எனக்கு தெரியாது. ஏனெனில் நான் பல நாட்டுரிமையை கொண்டிருந்தேன். என்னுடைய 21ஆவது வயதில் எனது கடவூச்சீட்டு காலாவதியானது. எனக்கு கடவுச்சீட்டை புதுப்பிக்க அதிகாரிகள் மறுத்தனர். காரணம் நான் இலங்கை பிரஜை இல்லை என்றனர். இரண்டு மணித்தியாலங்கள் நான் எந்தவொரு நாட்டு பிரஜையாகவும் இருக்கவில்லை. இதையெல்லாம் நான் பொருட்படுத்தவும் இல்லை. நான் இலங்கையராக இருப்பதற்கு பெருமைப்படுகின்றேன். என் வீடு இலங்கை. ஆனால் உலகிலுள்ள அனைத்து இடங்களையும் நேசிக்கின்றேன். உலகளாவிய ரீதியில் என்ன நடக்கின்றது என்பதை அறிவதிலும் ஆர்வமாக உள்ளேன்.
கேள்வி :- உங்களது குழந்தை பருவம் எப்படி இருந்தது?
நான் நிறைய படித்திருக்கின்றேன். நான் ஒரு வேலைக்காரி என சொல்வதை மக்கள் நம்பமாட்டார்கள். 14 வயது வரை நான் இலங்கையில் இருந்தேன். வகுப்பறையில் நான் மிகவும் பிரபல்யமான மாணவி அல்ல. காரணம். 14 வயதிலேயே 9 பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளேன். நான் சொல்கின்றேன் இது மிகவும் கடினமானது. ஆனால் நான் நிறைய கற்றுக் கொண்டேன். இறுதியில் அனைவருடனும் இணைந்திருக்க கற்றுக் கொண்டுள்ளேன். நான் நம்புகின்றேன் வீடு எங்கே இருந்தாலும் குடும்பம் மட்டுமே பாதுகாப்பானது. எங்களுக்கு குடும்பத்திற்கு கிடைத்தது நாடோடி வாழ்க்கை. அது மிகவும் அற்புதமானதாகவும் சவால்கள் நிறைந்ததாகவும் இருந்தது. என் அம்மாவும் அப்பாவும் அற்புதமான மனிதர்கள். அவர்கள் எப்போதும் என்னை, தனித்துவம் மிக்க வித்தியாசமானவளாக இருப்பதற்கு உந்து சக்தியாக இருந்தார்கள். அதுவொரு அருமையாக குழந்தை பராயம். நாங்கள் வேறு இடங்களுக்கு சென்றாலும் எப்போதும் ஒன்றாகவே ஒரே குடும்பமாகவே இருந்தோம்.
பிரபலமானவரான நீங்கள் மனித சூழ்நிலை பற்றியும், வாழ்க்கை பற்றியும் என்ன நினைக்கின்றீர்கள்?
நான் நினைக்கின்றேன் எதையெல்லாம் நாம் அவசியம் என்று நினைக்கின்றோமோ? அவையெல்லாம் அவசியமற்றது. நாம் துரத்துகின்ற விடயங்கள்ää மனிதனால் உருவாக்கப்பட்டவை. உண்மையானவை அல்ல. எது உண்மையென்றால் உங்கள் வாழ்க்கையைää எப்படி வாழ்கின்றீர்கள் என்பது தான். உங்களை சுற்றி உள்ளவர்களை நீங்கள் எப்படி நேசிக்கின்றீர்கள். நீங்கள் தினந்தோறும் பல்வேறு விதமானவர்களை சந்திக்கின்றீர்கள். நீங்கள் அவர்களை பார்த்து புன்னகைக்கின்றீர்களா? நான் சொல்கின்றேன் ஆம் என்று. நாம் வாழ்வதற்கு பணம் அத்தியாவசியமாக உள்ளது. ஆனால் அது மனிதனால் உருவாக்கப்பட்டதாகும். இதெல்லாம் தோற்ற வெளிப்பாடே என நான் நம்பினேன். நான் என்ன நினைக்கின்றேன் என்றால் நல்ல மனிதர்கள் தான் மிகவும் முக்கியம் என்று. எதுவும் நிரந்தரமற்றது என்பதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் எதை துரத்துகின்றோமோ,அதைவிட நம் குடும்பத்தினர் நண்பர்கள் ஆரோக்கியம் என்பவற்றிற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். நான் சொல்வது என்னவென்றால் இலட்சியம் இல்லாமல் இருப்பது அல்ல. இலட்சியம் இருக்க வேண்டும். அபிலாஷைகள் குறிக்கோள்கள் என்பன உங்கள் மனதில் இருக்க வேண்டும். ஆனால் இதனால் உலகை வெல்ல முடியாது. இவை அனைத்தையும் விட முக்கியமானது, அன்பு, குடும்பம் நண்பர்கள்.
உங்கள் வாழ்க்கை மிகவும் பரபரப்பானது. நீண்ட நாட்கள் வேலை செய்ததன் பின் எப்படி ஓய்வெடுப்பீர்கள்?
என் கணவர் மிகவும் நகைச் சுவையானவர். அது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். அவர் ஒரு உண்ணதமான மனிதர். (நாங்கள் இருவரும் பொழுதுபோக்குதுறையை சார்ந்தவர்கள் என்பதால் எனக்கு விடுமுறை கிடைக்கும் போது அவர் வேலை செய்வார். அவர் விடுமுறையில் இருக்கும் போது நான் வேலை செய்வேன். எங்களது வேலை பரபரப்பானது) அப்படி இருவரும் விடுமுறையில் இருந்தால் நண்பர்களது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது மிகவும் பிடிக்கும். எங்கள் இருவருக்கும் சேர்ந்து உணவருந்துவது மிகவும் பிடிக்கும். உங்களுக்கு தெரியுமா இதெல்லாம் சந்தோஷமாக இருப்பதற்கான எழிமையான வழி. நாங்கள் அதனை மிகவும் விரும்புவோம். நாங்கள் இருவருமே சமைப்போம். வெளியில் செல்வது மிகவும் பிடிக்கும். எப்போதாவது சில உணவகங்களுக்கு செல்வோம். நான் நினைக்கின்றேன். எனது பெறுமதியான நேரத்தை சிறப்பாக கழிக்கின்றோம். எனது கணவரின் சிரிப்பு மற்றும் உணவு என் நீண்ட நாட்கள் வேலைகளின் பின் ஓய்வெடுக்க உதவியாக இருக்கின்றது.
உங்களை போன்று பரபரப்பாக இருக்கும் ஒருவருக்கு அவர் ஆரோக்கியமாக வாழ என்ன பயிற்சியை பரிந்துரைப்பீர்கள்?
மேலும் கீழும் அதிக எடையை தூக்குதல் - எடையை குறைக்க, தசைகள் வலுப்பெற, உடல் ஆரோக்கியமாக இருக்க எல்லாவற்றுக்கும் தீர்வாக அமையுமென என் பயிற்சியாளர் சொல்வார் நான் எல்லாவற்றையும் எளிமையாக வைத்துக்கொள்வேன்.
தனிப்பட்ட ரீதியில் எனக்கு நடனம் மிகவும் பிடிக்கும். ஆனால் நான் வேலை செய்வதையே விரும்புகின்றேன். எனது ஆலோசனை என்னவென்றால் உங்களுக்கு பிடித்த ஒன்றை தேடுங்கள். அதில் ஆர்வம் கொள்ளுங்கள். நீங்கள் மாறுப்பட்ட மனநிலையில் இருக்கும் போது வெளியில் செல்லுங்கள். நீச்சல் நடனம் சைக்கிள் ஓடுவது என்பவற்றை நடைமுறைப்படுத்துங்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களுக்கு தெரியுமா? வாழ்வின் முடிவில் எதுவுமே கடினம் இல்லை. வாழ்க்கை மிகவும் குறுகியது.
மக்கள் பிரபலமான உங்களை எவ்வாறு நினைவில் வைத்திருக்க வேண்டும்?
இதுவொரு நல்ல கேள்வி. நான் எப்பவுமே மக்களுக்கு சொல்வதென்னவென்றால் உங்கள் வாழ்க்கையை சற்று பின்னோக்கி சிந்தித்து வாழுங்கள் அதாவது உங்கள் மரணத்தை நினைத்துப்பாருங்கள் அதை எப்படி நினைவில் வைத்திருப்பது என நினைத்துப்பாருங்கள்ää அப்போது புரியும் உங்களுக்கு நீங்கள் எப்படி வாழவேண்டும் என்பது.
ஏனையவர்களுக்கு உதவிய ஒருவராகவே நான் நினைவில் கொள்ளப்பட வேண்டும் என விரும்புகிறேன். குறைந்தபட்சம் ஒருவரின் முகத்தில் சிறு புன்னகையாவது ஏற்படுத்தி இருக்க வேண்டும். முழமையான மாற்றம் ஒன்றை ஏற்படுத்திய சிறந்த மனிதராக கருதப்படுவார்.
உங்களுக்கு தெரியும் நீங்கள் இளமையானவர் என்று. ஆனால் நீங்கள் ஓய்வு பெற்றதன் பின் என்ன செய்யப் போகின்றீர்கள் என நினைத்து பார்த்ததுண்டா?
ஆம். உலகம் முழுவதும் பயணம் செய்ய வேண்டும். அனைத்து வித்தியாசமான உணவு வகைகளை முயற்சி செய்து பார்க்க வேண்டும். நானும் எனது கணவரும் பயணம் செய்வதை மிகவும் விரும்புபவர்கள். பயணம் செய்வது சாகசம் செய்தல் போன்ற விடயங்களை உலகம் முழுவதும் சென்று பார்ப்போம். வித்தியாசமான உணவுகளை ருசி புதிய அனுபவங்களை பெற்றிடுவோம். ஆனால் நான் ஓய்வு பெற முதல் நான் வைத்திருக்கும் திட்டங்களை செய்து முடிக்க வேண்டும்.