சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு. மேலும் நீங்கள் பராமரிக்கும் உங்கள் அன்புக்குரியவர்களை நாங்கள் பாதுகாப்போம்
Colombo, 30/04/2019
வீடியோ, ஒலிப்பதிவு மற்றும் எழுத்து மூல ஆலோசனைகளை வைத்தியர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள உதவும் ஒரு செயலியே oDOC ஆகும். இதன் மூலம் இலங்கை மருத்துவப்பேரவையில் பதிவு செய்துள்ள 400 மருத்துவர்கள் மற்றும் விற்பன்னர்கள் ஆகியோரைப் பதிவு செய்து கொள்வதுடன், அவர்களிடமிருந்து மருத்துவக் குறிப்பையும் பெற்று உங்களுக்கான மருத்துவ சேவையை பெற முடியும். மேலும், ஆய்வுகூடப் பரிசோதனைகள் தேவைப்படுமாயின் நடமாடும் ஆய்வு கூடமொன்றினை உங்கள் அலுவலகத்திற்கோ அல்லது வீட்டிற்கோ இந்தச் செயலி மூலம் வரவழைத்துக் கொள்ள முடியும்.
AIA முதனிலை உறுப்பினர்களுக்கு இந்தச் சேவை முற்றிலும் இலவசமானதாகும்.
இதை எவ்வாறு பதிவிறக்குவது?
படி 1 - www.odoc.life/aia என்ற இணையத்தள முகவரியினூடாக உங்கள் தகவல்களை அளிப்பதன் ஊடாக இணைய முடியும்
படி 2 - அண்டொய்ட் பயன்பாட்டாளர்கள் oDoc செயலியை கூகிஸ் ப்ளே ஸ்டோரிலிருந்து இறக்கலாம் iOS பயன்பாட்டாளர்கள் அப்பிள் அப் ஸ்டோரிலிருந்து இந்தச் செயலியை இறக்கலாம்.
படி 3 - நீங்கள் இணையத்தளமூடாக இணைந்து கொள்ளும் போது அளித்த தொலைபேசி எண்ணை, இப்போது செயலியைத் திறந்து அங்கே இடுங்கள்.
படி 4 - உங்களுக்கான கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுத்த பின்னர் எளிதான இறுதிப் படிகளைக் கடந்து செல்லுங்கள்
உங்களாது இலவசக் கணக்கு தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளது.
எந்த உதவிக்காயினும் எந்த வேளையிலும் 077 077 3333 என்ற எண்ணுக்கு அழையுங்கள்.
எவ்வாறு பயன்படுத்துவது?
படி 1
பதிவு செய்யும் செயன்முறை முடிவடைந்த பின்னர் உங்களுக்குத் தேவைப்படும் வைத்தியரைத் தேடுவதற்காக செயலியை ’ஸ்க்ரோல்’ செய்யுங்கள்.
படி 2
வைத்தியர்களின் தகவல் அறிவதற்கு அவர்களின் சுயவிபரத்தின் மீது தட்டுங்கள். அரட்டைத்திரையைப் பயன்படுத்தி உங்கள் வருகையைப் பதிவு செய்வதுடன் வைத்தியருடன் முன்னரே குறிப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தொலைபேசி உரையாடல் மூலமான ஆலோசனை வழங்கல் மூலம் எவற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட முடியும்?
சளி, காய்ச்சல், சைனஸ், உணவு சமிபாடடையாப் பிரச்சினைகள், குழந்தை நோய்கள், தோல் நிலைமைகள், உணவுத்தவிர்ப்பு மற்றும் ஊட்டச்சத்துணவு சார் விசாரணைகள், வலி முகாமைத்துவம், பெண் சுகாதாரப் பிரச்சினை, பாலியல் சுகாதாரப் பிரச்சினை மற்றும் உளவியல் சுகாதாரப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கு பொதுவாக ODOC செயலி மூலம் வைத்தியர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.
யாருக்கு இலவசமானது?
AIA AFC உறுப்பினர்கள் அவர்களின் வாழ்க்கைத்துணைவர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் ஆகியோர் இந்த ODOC செயலியில் இணைவதன் மூலம் எல்லையற்ற வகையில் வீடியோ, ஒலி மற்றும் குறுஞ்செய்தி மூலம் வைத்திய ஆலோசனை பெற உரித்துடையோர் ஆவர்.
களத்தில் உள்ள வைத்தியர்கள் யார்?
ஆண்டுகளுக்கும் அதிகமான துறை சார் அனுபவமுடையவர்களும், இலங்கை மருத்துவப்பேரவையில் பதிவு செய்துள்ள 400 மருத்துவர்கள் மற்றும் விற்பன்னர்கள் ஆகியோருமானோர் உள்ளனர். மேலும், ODOC செயலியில் உள்ள, குழந்தை மருத்துவம், பெண்ணோயியல், தோல் நோய், உளவியல் மற்றும் பாலியல் சுகாதாரம் உள்ளிட்ட 40 விசேட துறைகளில் பயிலும் 200 விற்பன்னர்கள் உள்ளனர். நாட்டில் பொது மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் நீங்கள் சந்திக்கும் அதே வைத்தியர்களேஎ இவர்கள்.
வழங்கப்படும் மருத்துவக் குறிப்புகள் செல்லுபடியாகும் தன்மையினவா?
இலங்கை மருத்துவ சபையில் பதிவு பெற்ற வைத்தியர்களாலேயே இந்த மருத்துவக் குறிப்புகள் வழங்கபடுகின்றன. அத்துடன் ஒவ்வொரு வைத்தியருக்கும் அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பான கடவுச்சொல்லுடனான தனித்துவமானதும் காப்புடையதுமான கணக்கின் வழியாகவே இவை வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு மருத்துவக்குறிப்பிலும், அதை அளித்த வைத்தியரை அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய வகையில் அவரது பெயரும் இலங்கை மருத்துவ சபையில் அவரது பதிவிலக்கமும் முத்திரையும் கையெழுத்தும் இருக்கும். மேலும், குறித்த பெயருடைய நோயாளருக்கான பயன்பாட்டிற்கு ஆவணத்தில் பட்டியலிடப்படும் மருந்தை பரிந்துரைப்பதற்கு தாம் அதிகாரமளிக்கப்பட்டவரென அந்த வைத்தியர் வெளிப்படையாக மருத்துவக்குறிப்பில் எழுதுவதும் குறிப்பிடத் தக்கது.