சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
Colombo, 06/06/2019
AIA இன்ஷுரன்ஸின் பிரபலமான வாடிக்கையாளர் வெகுமதித் திட்டமான ரியல் ரிவோட்ஸ் (Real Rewards) திட்டமானது இதனது ஐந்தாவது தொடர்ச்சியான வருடத்தைக் கொண்டாடுவதுடன்; 2019 இன் முதலாம் காலாண்டிற்காக 15 அதிர்ஷ்ட வெற்றியாளர்கள் இருவரிற்கான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணப் பொதித் திட்டங்களையும் வெற்றி பெற்றுள்ளனர். 2014 இல் ஆரம்பிக்கப்பட்ட இவ் வெகுமதித் திட்டமானது வாடிக்கையாளர்களுக்குப் பல அனுகூலங்களை வழங்குவதுடன், அதிசிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தின் அடிப்படையில் உயர் மட்டத்தில் AIA இனை நிலைநிறுத்தியுமிருக்கின்றது.
இருவருக்கான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணப் பொதியினை வெற்றி பெறுவதற்கான பிரமாண்டமான காலாண்டுச் சீட்டிழுப்பிலிருந்து தெரிவு செய்யப்படும் 15 அதிர்ஷ்ட வெற்றியாளர்களுடன் ஒவ்வொரு வருடமும் இத்திட்டத்தில் அதிகரித்துச் செல்லும் வெற்றியாளர்களையே காணக்கூடியதாக இருக்கின்றது. காப்புறுதித் துறையில் காணப்படுகின்ற இணையற்ற மிகச்சிறந்த இவ்வெகுமதித் திட்டமானது சிங்கப்பூர், மலேசியா அல்லது பேங்கொக் போன்ற நாடுகளுக்கு வெற்றியாளர்கள் அவர்களுக்கான மற்றும் அவர்களின் அன்பிற்குரியவர்களுக்கான சுற்றுலாப் பொதியுடன் பயணம் செய்ய முடியும்.
AIA இன் செயற்பாட்டுப் பணிப்பாளர் கெளும் சேனநாயக்கா நிறுவனத்தினுடைய வாடிக்கையாளர்களுக்கான AIA இனுடைய அர்ப்பணிப்பை வலியுறுத்திக் கருத்துத் தெரிவிக்கையில், “AIA ரியல் ரிவோட்ஸ் (Real Rewards) மிகச்சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதற்காகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளதுடன், நிறுவனத்தில் இதற்கே அதிக முன்னுரிமையும் வழங்கப்படுகின்றது. எங்களுடைய வாடிக்கையாளர்களின் ஆதரவு மற்றும் விசுவாசம் ஆகியவற்றுக்கு வெகுமதியளிக்கும் விதமாக எங்களது பங்களிப்பு மற்றும் சலுகைகளை அதிகரிப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதையே நாங்கள் தொடர்வோம்” எனத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “ரியல் ரிவோட்ஸினை (Real Rewards) வெற்றி பெறுவதென்பது இலகுவானதொரு விடயமாகும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது AIA வாடிக்கையாளராக நீங்கள் இருப்பதும், உரிய நேரத்தில் உங்களுடைய கட்டுப்பணங்களைச் செலுத்துவதுமாகும். மேலும் உங்களது கட்டுப்பணங்களை நீங்கள் வருடாந்தமாகவோ அல்லது நிலையியற் கட்டளைகள் ஊடாகவோ செலுத்தினால் நீங்கள் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பினைப் பெறுவீர்கள். அல்லது உங்களுடைய கட்டுப்பணங்களை அரையாண்டாகவும் அல்லது காலாண்டாகவும் கூட நீங்கள் செலுத்த முடியும், இதன்போதும் நீங்கள் நல்ல வெற்றி வாய்ப்பினைப் பெறுவீர்கள்” எனத் தெரிவித்தார்.
ஆகவே நீங்கள் AIA காப்புறுதிதாரர் எனின், நீங்களும் இந்த வருடத்திற்கான அதிர்ஷ்ட வெற்றியாளர் ஒருவராக இருக்கலாம்! AIA ரியல் ரிவோட்ஸ் (Real Rewards) தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0112 310310 இனூடாக வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு அழையுங்கள்.