சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
Colombo,
துரித வழிகாட்டி
இது நுளம்பினால் பரவூகிறது
டெங்கு தொற்றானது இப்போது நாட்டில் இருக்க கூடிய அதி பயங்கர
தொற்றுக்களில் ஒன்றாக காணப்படுகிறது. டெங்கானது அதிக காய்ச்சல், கொப்புளங்கள், தசை மற்றும் மூட்டு வலி என்பன ஏட்படுகின்றன டெங்கு என்பது டெங்கு காய்ச்சலாகும் (Dengue Hemorrhagic Fever) அதிகளவான இரத்தப்போக்கு மற்றும் குருதி அமுக்கம் திடீரென ஸ்தம்பித்தல், நுரையீரல், கல்லீரல் மற்றும் அல்லது இதயம் என்பன பாதிப்படைகின்றன.
AIA ஆகிய நாங்கள் Nawaloaka வைத்தியசாலையூடன் இணைந்து எங்கள் உன்னதமான அங்கத்தவர்களுக்கு இந்த பேரழிவூ ஏற்டபடுத்தும் வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இதோ சுருக்கமான வழிகாட்டி அறிகுறிகள், சிகிச்சைகள், தடுக்கும் முறை என்பன உள்ளடக்கியது.
டெங்கு இருப்பதற்கான அறிகுறிகள் என்ன?
வழமையான அறிகுறிகள் |
அபாயகரமான அறிகுறிகள் |
அதிகூடிய காய்ச்சல் |
அதிக வயிற்றுவலி |
அதிக தலைவலி |
தொடர்ந்து வாந்தி எடுத்தல் |
அதிகூடிய கண் வலி |
தோலில் சிவப்பு நிற புள்ளிகள் தோன்றுதல் |
மூட்டு வலி |
இரத்த வாந்தி எடுத்தல் |
தசைகள் அல்லது என்புவலி |
மயக்க நிலை |
பற் ஈறுகளில் இரத்த கசிவு |
கருப்பாக மலம் கழித்தல் |
வெண்குருதி சிறு தட்டுக்களின் எண்ணிக்கை குறைவடைதல் |
சுவாசிக்க சிரமமாக இருத்தல் |
Dengue Hemorrhagic என்றால் என்ன?
டெங்கு காய்ச்சல் போன்றதுதான் அனால் ஆபத்தானது. ஆரம்ப அறிகுறிகள் சாதாரணமானதாக இருந்தாலும், கடுமையான அறிகுறிகள் இருந்தால், இது மிகவூம் ஆபத்தானது. இந்த வைரசினால் இரத்த நாளங்களில் இரத்த கசிவூ ஏற்பட்டு இரத்த சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டால் மரணம் சம்பவிக்கவூம் வாய்ப்புள்ளது.
டெங்கு எப்படி பரவூகிறது?
டெங்கு வைரசானது நுளம்பு தீண்டலினால் பரவூகிறது
· ஏடிஸ் நுளம்பு மனிதனை தீண்டுவதால் இந்த வைரஸ் பரவூகிறது
· இந்த வகையான நுளம்பு மனிதனை தீண்டினால் அந்த மனிதனுக்கு வைரஸ் பரவூகிறது. எந்தவித பாதிப்புமற்ற நுளம்பு பாதிக்கப்பட்ட மனிதனை தீண்டினால் அந்த வைரஸ் பரப்பப்படுகிறது.
டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை என்ன?
அறிகுறிகளுக்கேற்றவாறு பராமரித்தல் பொதுவாக வலிநிவாரணி வழங்கப்படுகின்றது. அதிக அளவூ நீர் உள்ளெடுக்க கொடுக்கப்படுகின்றது மற்றும் அதிக ஓய்வூ என்பன நோயாளிக்கு தேவைப்படுகின்றது.
டெங்கு காய்ச்சலில் இருந்து மீளும் ஒருவருக்கு உடல் வறட்சி இருக்குமானால் அதிலிந்து மீள வைத்தியரை அணுக வேண்டும் இதோ அறிகுறிகள்.
1) குறைந்த சிறுநீர் வெளியேற்றம்
2) கண்ணீர் இல்லாமை
3) வாய் மற்றும் உதடு வரளுதல்
4) மயக்கம் அல்லது குழப்பம்
5) குளிருத்தல்
உங்களுக்கு டெங்கு காய்ச்சல் இருந்தால் உங்களுக்கு தேவைப்படுவது.
1) வைத்திய ஆலோசனை அல்லது வைத்திய பராமரிப்பு
2) நரம்பின் வழியாக திரவத்தை உட்செலுத்துதல்
3) குருதி அழுத்தத்தை கண்காணித்தல்
4) இரத்த இழப்பை ஈடு செய்வதற்கான மாற்றீடு
டெங்கு காய்ச்சலை தடுப்பது எப்படி?
• நீர் தேங்கி இருக்கும் இடங்களில் இருந்து விலகி இருப்பது மிகவூம் முக்கியமான ஒன்றாகும்.அத்தோடு அதிக நுளம்பு இருக்கும் நேரங்களில் மிகவூம் அவதானமாக இருக்க வேண்டும்.
• நீளமா காட்சட்டை முழு நீள கைசட்டை அணியலாம். ழூசுத்தமான ஆடைகளை அணிதல்.
• நீங்கள் வசிக்கும் பகுதியில் நுளம்பு இருக்குமானால் நுளம்பு வலை பயன்படுத்துவது.
• நீங்கள் இருக்கும் இடங்களில் கதவூ ஜன்னல்கள் நுளம்பு நுழைய முடியாதவாறு மூடி வைத்தல்.
எவ்வாறு பயன்படுத்துவது?
படி 1
பதிவு செய்யும் செயன்முறை முடிவடைந்த பின்னர் உங்களுக்குத் தேவைப்படும் வைத்தியரைத் தேடுவதற்காக செயலியை ’ஸ்க்ரோல்’ செய்யுங்கள்.
படி 2
வைத்தியர்களின் தகவல் அறிவதற்கு அவர்களின் சுயவிபரத்தின் மீது தட்டுங்கள். அரட்டைத்திரையைப் பயன்படுத்தி உங்கள் வருகையைப் பதிவு செய்வதுடன் வைத்தியருடன் முன்னரே குறிப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தொலைபேசி உரையாடல் மூலமான ஆலோசனை வழங்கல் மூலம் எவற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட முடியும்?
சளி, காய்ச்சல், சைனஸ், உணவு சமிபாடடையாப் பிரச்சினைகள், குழந்தை நோய்கள், தோல் நிலைமைகள், உணவுத்தவிர்ப்பு மற்றும் ஊட்டச்சத்துணவு சார் விசாரணைகள், வலி முகாமைத்துவம், பெண் சுகாதாரப் பிரச்சினை, பாலியல் சுகாதாரப் பிரச்சினை மற்றும் உளவியல் சுகாதாரப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கு பொதுவாக ODOC செயலி மூலம் வைத்தியர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.
யாருக்கு இலவசமானது?
AIA AFC உறுப்பினர்கள் அவர்களின் வாழ்க்கைத்துணைவர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் ஆகியோர் இந்த ODOC செயலியில் இணைவதன் மூலம் எல்லையற்ற வகையில் வீடியோ, ஒலி மற்றும் குறுஞ்செய்தி மூலம் வைத்திய ஆலோசனை பெற உரித்துடையோர் ஆவர்.
களத்தில் உள்ள வைத்தியர்கள் யார்?
ஆண்டுகளுக்கும் அதிகமான துறை சார் அனுபவமுடையவர்களும், இலங்கை மருத்துவப்பேரவையில் பதிவு செய்துள்ள 400 மருத்துவர்கள் மற்றும் விற்பன்னர்கள் ஆகியோருமானோர் உள்ளனர். மேலும், ODOC செயலியில் உள்ள, குழந்தை மருத்துவம், பெண்ணோயியல், தோல் நோய், உளவியல் மற்றும் பாலியல் சுகாதாரம் உள்ளிட்ட 40 விசேட துறைகளில் பயிலும் 200 விற்பன்னர்கள் உள்ளனர். நாட்டில் பொது மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் நீங்கள் சந்திக்கும் அதே வைத்தியர்களேஎ இவர்கள்.
வழங்கப்படும் மருத்துவக் குறிப்புகள் செல்லுபடியாகும் தன்மையினவா?
இலங்கை மருத்துவ சபையில் பதிவு பெற்ற வைத்தியர்களாலேயே இந்த மருத்துவக் குறிப்புகள் வழங்கபடுகின்றன. அத்துடன் ஒவ்வொரு வைத்தியருக்கும் அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பான கடவுச்சொல்லுடனான தனித்துவமானதும் காப்புடையதுமான கணக்கின் வழியாகவே இவை வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு மருத்துவக்குறிப்பிலும், அதை அளித்த வைத்தியரை அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய வகையில் அவரது பெயரும் இலங்கை மருத்துவ சபையில் அவரது பதிவிலக்கமும் முத்திரையும் கையெழுத்தும் இருக்கும். மேலும், குறித்த பெயருடைய நோயாளருக்கான பயன்பாட்டிற்கு ஆவணத்தில் பட்டியலிடப்படும் மருந்தை பரிந்துரைப்பதற்கு தாம் அதிகாரமளிக்கப்பட்டவரென அந்த வைத்தியர் வெளிப்படையாக மருத்துவக்குறிப்பில் எழுதுவதும் குறிப்பிடத் தக்கது.